ஆரா டாமன்சாரா
ஆரா டாமன்சாரா (மலாய்: Ara Damansara; ஆங்கிலம்: Ara Damansara; சீனம்: 阿拉白沙罗); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும்.
ஆரா டாமன்சாரா Ara Damansara | |
---|---|
ஆள்கூறுகள்: 3°7′28.9″N 101°34′33.04″E / 3.124694°N 101.5758444°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | முகமட் அசான் அமீர் Mohamad Azhan Md. Amir 21 அக்டோபர் 2021 |
• துணை மாநகர முதல்வர் | அசுலிண்டா அசுமான் Azlinda Azman 24 சனவரி 2020[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 47301 |
இணையதளம் | www |
இந்தப் புறநகர்ப் பகுதி சுபாங் வானூர்தி நிலையச் சாலையின் (Jalan Lapangan Terbang Sultan Abdul Aziz) வழியில் அமைந்துள்ளது. துராபிகானா (Tropicana) மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara) புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்தப் புறநகர்ப் பகுதியாக உள்ளது.
வரலாறு
1999-ஆம் ஆண்டில் சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்தின் துணை நிறுவனமான சைம் பில்மோர் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Sime Pilmoor Development Sdn Bhd) ஆரா டாமன்சாரா புறநகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது. அரா டமன்சாரா சுமார் 4,000 பல்வேறு வகையான கட்டிடங்களை உள்ளடக்கிய புறநகர்ப் பகுதி.[2][3]
அமைவு
பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் 739 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புறநகர்ப் பகுதி; JKR சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில்; புஞ்சாக் ஆலாம் நெடுஞ்சாலைக்கு (Puncak Alam Highway) கிழக்கிலும்; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையின் (New Klang Valley Expressway - NKVE) வடக்கு மேற்கிலும் அமைந்துள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதியின் வடக்கே கோத்தா டாமன்சாரா (Kota Damansara), கிழக்கே தாமான் துன் டாக்டர் இசுமாயில் (Taman Tun Dr Ismail), தெற்கே சுபாங் ஜெயா (Subang Jaya) மற்றும் மேற்கில் காயாங்கான் அயிட்ஸ் (Kayangan Height) நகர்ப் பகுதிகள் உள்ளன.
இலகு தொடருந்து போக்குவரத்து
அத்துடன் ஆரா டாமன்சாரா நகர்ப்புறம் கூட்டரசு சாலை ; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலை மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.
ஆரா டாமன்சாரா இரண்டு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) நிலையங்களைக் கொண்டுள்ளது.
- KJ24 லெம்பா சுபாங் இலகு தொடருந்து நிலையம் (Lembah Subang LRT Station)
- KJ26 ஆரா டாமன்சாரா இலகு தொடருந்து நிலையம் (Ara Damansara LRT Station)
2016 சூன் மாதம் கிளானா ஜெயா இலகு தொடருந்து தடம் (LRT Kelana Jaya Line) கட்டி முடிக்கப்பட்டது.