ஆர். கே. செல்வமணி

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

ரா. கா. செல்வமணி என்பவர் அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும்.

ஆர். கே. செல்வமணி
பிறப்பு21 அக்டோபர் 1965 (அகவை 58)
செங்கல்பட்டு
பணிதிரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை/கள்
ரோஜா செல்வமணி

ஆரம்பகால வாழ்க்கை

இவர் 21 அக்டோபர் 1965, ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பமான கல்யாணசுந்தரம் மற்றும் செண்பகம் தம்பதிகளின் மகனாக செங்கம்பட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார்.

தொழில் வாழ்க்கை

இவர் தனது திரைப்படத்துறையை இயக்குனர் மற்றும் நடிகரான மணிவண்ணனின் உதவியாளரான ஆரம்பித்தார்,[1] பின்னர் 1980 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த்தை கதாநாயகனாக வைத்து புலன் விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார்.[2] இந்த படம் சில அரசியல் பெரியவர்களின் தூண்டுதலின் பேரில் பல பெண்களை கடத்தி கொன்ற ஆட்டோ சங்கரின் நிஜ வாழ்க்கை வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டில் கேப்டன் பிரபாகரன் என்ற படம் வெளியானது. இப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது, அதே சமயம் கதைக்களம் வனக் கொள்ளைக்காரன் வீரப்பனை அடிப்படையாகக் கொண்டது.[3][4] அதை தொடர்ந்து செம்பருத்தி (1992), பொன் விலங்கு (1993), கண்மணி (1994), ராஜ முத்திரை (1995) போன்ற பல படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.

இவர் 1994 ஆம் ஆண்டில், அதிரடிப்படை என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கினார். இந்த படத்தில் ரகுமான், ரோஜா, மன்சூர் அலிகான், விஜயகுமார் மற்றும் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். ¨

இவர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டில் வெளியான அரசியல் என்ற திரைப்படத்திற்காக 'சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது' வென்றது. இந்த திரைப்படத்தில் மம்மூட்டி, சில்பா சிரோத்கர், ரோஜா, மன்சூர் அலி கான், ஆனந்த்ராஜ், சரண் ராஜ், ஜெய்கணேஷ் போன்றோர் நடித்திருந்தனர்.

இவர் அக்டோபர் 2008 இல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாக தமிழ்நாட்டில் அமைந்தது. ஆர்.கே. செல்வமணி தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய செயலாளராக உள்ளார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் 10 ஆகஸ்ட் 2002, அன்று நடிகை ரோஜாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்._கே._செல்வமணி&oldid=3954186" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்