ஒண்டர்லா

ஒண்டர்லா (Wonderla) என்பது இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கைப் பூங்காக்களில் ஒன்றாகும். இது கர்நாடகத்தின் பெங்களூரிலிருந்து 28 கிலோமீட்டர்கள் (17 mi) தொலைவில் உள்ள பிடதி அருகே தலைமையிடத்தைக் கொண்ட ஒண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது. ஒண்டர்லா ஹாலிடேஸ் தற்போது கொச்சி, பெங்களூர், ஐதராபாத்தில் 3 பொழுதுபோக்கு பூங்காக்களையும், பெங்களூரில் ஒரு ரிசார்ட்டையும் நடத்தி வருகிறது. [1] இதை வி-கார்ட் இண்டஸ்ட்ரீசின் துணை நிறுவனமாக கோச்சுசெப் சிட்டிலபிள்ளை மற்றும் அவரது மகன் அருண் சிட்டிலபிள்ளை ஆகியோர் மேம்படுத்துகின்றனர். ஒண்டல்லாவின் முதல் பொழுதுபோக்கு பூங்கா, ஒண்டர்லா கொச்சி 2000 இல் அமைக்கப்பட்டது. மூன்றாவது பொழுதுபோக்கு பூங்காவான ஒண்டர்லா ஹைதராபாத் 2016 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. [2] ஓண்டர்லா ஹாலிடேஸ் தற்போது அதன் 4 வது பொழுதுபோக்கு பூங்காவை சென்னையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஒண்டர்லா கேளிக்கை பூங்காக்கள் அனைத்து வயதினரும் விரும்பும் பலவிதமான சவாரிகளை கொண்டுள்ளது. அவற்றின் சில சவாரிகள் ரீகோயில், மேவரிக், ஒய்-ஸ்க்ரீம், மிஷன் இன்டர்ஸ்டெல்லர் போன்றவை ஆகும்.

ஒண்டர்லா
Sloganஅதிசயங்களின் பயணத்தைத் தொடங்குங்கள்!
அமைவிடம்கொச்சி, பெங்களூர், ஐதராபாத்து
கருப்பொருள்கேளிக்கைப் பூங்கா
உரிமையாளர்கோச்சுசெப் சிட்டிலபிள்ளை
இயக்குபவர்ஒண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட்
திறப்பு2000 ஆண்டு கொச்சியில், 2005 ஆண்டு பெங்களூரில் 2016 ஆண்டு ஐதராபாத்தில்
முன்னைய பெயர்கொச்சி வீகாலேண்ட்
இயங்கும் காலம்ஆண்டு முழுவதும்.
நீர்ச்சறுக்கு72 water slides
இணையத்தளம்www.wonderla.com

வரலாறு

2000 ஆம் ஆண்டில், கோச்சுசெப் சிட்டிலபிள்ளை கேரளத்தின் கொச்சியில் வீகா லேண்ட் என்ற பெயரில் முதன்மையாக நீர் விளையாட்டுகளை மையமாகக் கொண்டு கேளிக்கைப் பூங்காவைத் தொடங்கினார். [3] [4] வீகாலேண்டின் கட்டுமானங்கள், மேம்பாடு போன்றவற்றில் 75 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் வீகாலேண்ட் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, கோச்சஸ்வரூப் சிட்டிலப்பிலி பெங்களூரில் 105 கோடி ரூபாய் செலவில் பெரிய அளவில் மற்றொரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்க முடிவு செய்து அதற்கு ஓண்டர்லா என்று பெயரிட்டார். இது 82 ஏக்கர்கள் (33 ha) ) பரப்பளவில் பரவியுள்ளது. ஒண்டர்லாவை ஒரு பிராண்டாக நிறுவுவதற்காக, வீகாலாண்ட் 2011 இல் ஒண்டர்லா கொச்சி என மறுபெயரிடப்பட்டது. மூன்றாவது பொழுதுபோக்கு பூங்கா, ஒண்டர்லா ஐதராபாத் 2016 ஏப்ரலில் தொடங்கப்பட்டது.

இருப்பிடங்கள்

கொச்சி

கொச்சி ஒண்டர்லா

கொச்சியில் வீகா லேண்ட் கேளிகைப் பூங்கா 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2011 இல் ஒண்டர்லா என்று பெயர் மாற்றபட்டது. [5] [6] இந்த பூங்கா நகர மையதில் இருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் பள்ளிக்கரையில் ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்த பூங்கா 2000 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதை கட்டிடக் கலைஞர் ஜோசப் ஜான் வடிவமைத்தார். [7]

சுற்றுச்சூழல் நட்புக்கான ஐஎஸ்ஓ 14001 சான்றிதழையும், பாதுகாப்பிற்காக ஓஎச்எஸ்ஏஎஸ் 18001 சான்றிதழையும் பெற்ற இந்தியாவின் முதல் பூங்கா ஒண்டர்லா கொச்சி ஆகும். [8] இந்த பூங்கா 30 ஏக்கர் நிலப்பரப்பில் 50 க்கும் மேற்பட்ட கேளிக்கை சவாரிகளுடன் விரிந்துள்ளது. ஆசியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் நீர் பூங்காக்களுக்கான டிரிப் அட்வைசர் 'டிராவலர்ஸ்' தேர்வு விருதுகளில் ஒண்டர்லா கொச்சி 2018 சூலையில் பதினொன்றாவது இடத்தைப் பிடித்தது. [9]

பெங்களூர்

பெங்களுரு ஒண்டர்லா

இந்த பூங்காவில் 55 நில, நீர் சவாரிகள், ஒரு இசை நீரூற்று, சீரொளி நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு தோற்ற மெய்ம்மை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பகுதிகள் உள்ளன. ஒண்டர்லா பெங்களூரில் ஒரு நடன தளம் உள்ளது, இதில் மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்ட மழை பொழிவு கொண்டதாக உள்ளது. குழந்தைகளை ஈர்க்கக்கூடியதாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சவாரிகள் ஒண்டர்லாவில் உள்ளன. இந்த குழந்தைகளுக்கான சவாரிகளானது மென்மையானவையாகவும், அசாதாரணமானவைகளாகவும் உள்ளன. இங்கு குளிர்காலத்தில் இதன் அனைத்து குளங்களிலும் சூரிய ஆற்றலில் வெப்பமான நீரைப் பயன்படுத்துகிறது. இங்கு 1,000 பேர் கொள்ளவு கொண்டதாக மாநாட்டு அரங்கைக் கொண்டுள்ளது. மேலும் மொத்தம் 1,150 பேர் அமரக்கூடிய ஐந்து உணவகங்களைக் கொண்டுள்ளது. இது 2,350 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டகங்கள் மற்றும் ஓய்வறைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. [10] 2014 ஆம் ஆண்டு டிரிப் அட்வென்சர் இணையதள நிறுவனமானது ஒண்டர்லா பெங்களூருக்கு இந்தியாவில் முதலாவது இடத்தையும், ஆசியாவில் ஏழாவது இடத்தையும் அளித்தது. இது இந்தியாவின் எந்த பொழுதுபோக்கு பூங்காவைவிட மிக உயர்ந்ததாகும்.

ஒண்டர்லா ஹாலிடேஸ் தனது முதல் சொகுசுக் குடிலை திறந்தது, இது 84 அறைகள் கொண்ட விடுதி வளாகமாக 100,000 சதுர அடியில் பரவியுள்ளது. இது 2012 ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. [11] குடில் வளாகத்தின் அம்சங்களின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டு பகுதி, பிற பொழுதுபோக்கு மற்றும் மாநாட்டு வசதிகள் கொண்டதாக உள்ளது. [12] பெங்களூர் ஒண்டர்லாவை ஒட்டி இந்த விடுதி அமைந்துள்ளது. [13]

ஐதராபாத்

ஐதராபாத்து ஒண்டர்லா

ஐதராபாத் ஒண்டர்லா 50 ஏக்கர் நிலப்பரப்பில் 28 நில அடிப்படையிலான சவாரிகளையும், 18 நீர் சார்ந்த விளையாட்டுகளையும் வழங்குகிறது. [14] ஒண்டர்லா கேளிக்கை பூங்கா ஹைதராபாத் நகரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஐபிஓ

ஒண்டர்லா விடுமுறை நாட்களின் ஆரம்ப பொது சலுகையானது (ஐபிஓ) சுமார் 180 கோடி ரூபாய்க்கு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐபிஓ வருமானம் ஐதராபாத்தில் அதன் வரவிருக்கும் கேளிக்கைப் பூங்கா திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. [15] [16]

விரிவாக்க திட்டங்கள்

ஒண்டர்லா ஹாலிடேஸ் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு புதியதாக ஒரு பூங்காவைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்ததாக சென்னை, புனே, மும்பை அகமதாபாத் ஆகிய நகரங்களில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஒண்டர்லா ஹாலிடேஸ் தற்போது சென்னையில் அதன் 4 வது பொழுதுபோக்கு பூங்காவுக்கான வேலையை செய்துவருகிது. இந்த பூங்கா 2018 இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உருவாக்கபட்டுவரும் பொழுதுபோக்கு பூங்காவானது 3 பில்லியன் (US$38 மில்லியன்) செலவில், 55 ஏக்கர்கள் (220,000 m2) பரப்பளவிலான நிலப்பரப்பபைக் கொண்டதாக உள்ளது. ஆந்திராவில் 50 ஏக்கர்கள் (200,000 m2) பரப்பளவில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என்றும் வொண்டர்லா அறிவித்தது. இது குண்டூர் மற்றும் விசயவாடாவுக்கு இடையே 2.5 பில்லியன் (US$31 மில்லியன்) செலவில் அமைக்கபடவுள்ளது .

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒண்டர்லா&oldid=3608192" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்