கஜேந்திரகாட்

கஜேந்திரகாட் (Gajendragad) (கஜேந்திரகார் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் கர்நாடகவின் கதக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் வட்டமாகும். கஜேந்திரகாட் என்ற பெயருக்கு அதன் சொந்த வரலாறு உண்டு. இந்த இடம் மலைவாசத்தலம் மற்றும் மலைப்பகுதிக்கு பெயர் பெற்றது. மாவட்டத்தில் கதக் நகருக்குப் பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இது கதக்கிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், ஹூப்ளிலியிருந்து 110 கிலோமீட்டரிலும், பெங்களூரிலிருந்து 450 கிலோமீட்டரிலும் உள்ளது.

அறிமுகம்

கஜேந்திரகாட் கோட்டை

கஜேந்திரகாட் (கஜேந்திர-யானை, காட்-கோட்டை), கதக் மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று இடமாகும். கஜேந்திரகாட் என்ற பெயர் யானை மற்றும் ஒரு கோட்டையின் கலவையாகும். ஏனென்றால், பறவை பார்வையில் நகரம் யானை உடல் போல தோன்றுகிறது. உள்ளூர் மக்கள் பொதுவாக இதை கதா என்று அழைக்கிறார்கள். இது கடகிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ளது மற்றும் கடக் மாவட்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகும்.

கஜேந்திரகாட் அதன் மலைகளில் கூட நிலம் இருப்பதால் பட படப்பிடிப்புக்கு பெயர் பெற்றது. பல படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. வீர மடகாரி, பிருந்தாவனம், இராட், ஜானு, பாஹுபரக், பீமா தீரதள்ளி, பர்ஜாரி, ரக்சித் ஷெட்டியின் அவனே சிறீமன் நாராயணா , இராம்போ 2, பாரதே மற்றும் பல கன்னடத் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்படுள்ளன. கிச்சா சுதீப்பின் பல மொழி திரைப்படமான 'பயில்வான்' என்றப் படத்தில் அறிமுகமாகும்போது 'கஜேந்திரகடா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிவுட் நாயகன் சல்மான் கானின் தபாங் 3, தெலுங்குத் திரைப்படங்களான தமருகம், அல்லுடு சீனு, பிருந்தாவனம், பலுப்பு பார்ஜேரி மற்றும் இன்னும் பல படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

கலகேசுவரர் கோயில் காரணமாக கஜேந்திரகாத் ஒரு புனித யாத்திரைத் தலமாகும். இது நீண்ட மலைப்பகுதி, மலைவாசத்தலம், திரைப்பட படப்பிடிப்பு இடங்கள், கோட்டை, கலகலேசுவரர் கோயில், திருமண மற்றும் பண்டிகைகளுக்கான ஜவாலி / ஆடை பொருட்களுக்கான சந்தை, காற்றாலைகள், கைத்தறி, கஜேந்திரகாட் குபுசா கானா ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.  

வரலாறு

கஜேந்திரகாட் கோட்டை
கஜேந்திரகாட் கோட்டை

கஜேந்திரகாட் பாதாமி சாளுக்கியர்கள் மற்றும் மேலைச் சாளுக்கியர்களுடன் தொடர்புடைய வரலாற்று இடங்களால் சூழப்பட்டுள்ளது. பாதாமி, அய்கோள், பட்டடக்கல், மகாகுடா, பனசங்கரி, சூடி, இடாகி மற்றும் குடலசங்கமத்தில் உள்ள குக்கனூர் கல்லேஸ்வரத்தில் மகாதேவர் கோயில் போன்ற இடங்கள். குக்னூரில் உள்ள இராஷ்டிரகூடர்களின் நினைவுச்சின்னங்கள் ஆகியவையும் உள்ளன. கஜேந்திரகாட் கோட்டை பேரரசர் சிவாஜியால் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.[1][2]

கஜேந்திரகாட் ஒப்பந்தம்

2 வது மைசூர் போருக்குப் பிறகு, திப்பு சுல்தான் மராட்டியர்களுடனும் ஐதராபாத் நிசாமுடனும் (1786-87 காலத்தில்) ஆயுத மோதலில் ஈடுபட வேண்டியிருந்தது. இப்போர் கஜேந்திரகாட் ஒப்பந்தத்துடன் போர் முடிந்தது..[3]

பதே அலிகானால் கைப்பற்றப்பட்ட கஜேந்திரகாட்டின் கோட்டையும் வட்டத்தையும் மராட்டிய அரசு திரும்பப் பெற்றது. கஜேந்திரகாட் ஒப்பந்தத்தின்படி பாதி மாகாணம் நவாபுக்கு ( நிசாம் கி.பி. 1786-87) சரணடைந்தது.[4] மீதமுள்ளவை தௌலத்ராவ் கோர்படெவுக்கு வழங்கப்பட்டன ( அவரிடமிருந்து ரூ .50,001 எடுக்கப்பட்டது).[5]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கஜேந்திரகாட்&oldid=3806342" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்