கந்தசங்கடவு படகுப் போட்டி

கேரளத்தில் நடக்கும் படகுப் போட்டி

கந்தசங்கடவு படகுப் போட்டி (மலையாளம்: കണ്ടശ്ശാംകടവ് ജലോത്സവം) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் கந்தசங்கடவில் உள்ள எனமக்கல் ஏரி மற்றும் கொனோலி கால்வாயில் நடைபெறும் வள்ளங்களி ஆகும். ஓணம் பண்டிகையின் திருவோணம் நாளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது, அதைத் தொடர்ந்து 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. இந்த கோப்பை முதலமைச்சரின் சுழற் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டியானது இருட்டுகுத்தி மற்றும் சுருலன் படகு பிரிவுகளுக்கு நடத்தப்படுகின்றன. [1] [2] [3] [4]

கந்தசங்கடவு படகுப் போட்டி
കണ്ടശ്ശാംകടവ് ജലോത്സവം
தோற்றம்1956
மண்டலம்கந்தசங்கடவு, திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா
தற்போதைய வாகையாளர்மகாதேவன் சுண்டன்

வரலாறு

1955 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவானபோது இந்தப் படகுப் போட்டி தொடங்கப்பட்டது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக படகுப் போட்டியானது போட்டி அமைப்பாளர்களால் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டது. 2011 இல், கேரள அரசு, திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு மற்றும் மணலூர் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. [5] [6]

வெற்றியாளர்கள்

ஆண்டுசங்கம்வெற்றியாளர்கள்
2011செங்கனூர் எடகுளம் ஜூனியர் சி.பி.எஸ்வடேகா அட்புரம் சுண்டன்
2012அல் ரியாமி குழுசம்பாகுளம் சுண்டன்
2013மணப்புரம் குழுமகாதேவன் சுண்டன்
2014தயங்கரி படகு கிளப்புலிங்குன்னு சுண்டன்

கேரளத்தில் பிற படகுப் போட்டிகள்

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்