காட்சில்லா

காட்சில்லா (Godzilla) (சப்பானிய மொழி: γογρα, Gojira) என்பது ஒரு கற்பனையான மிருகம் ஆகும். இது சப்பானில் கைஜு எனப்படும் ஓரு பழங்கால மிருகங்களை பற்றிய கற்பனை கதை தொடரில் இருந்து வருவதாகும். இந்த கதாபாத்திரம் 1954 ஆம் ஆண்டு இஷிரோ ஹோண்டா இயக்கிய திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கதாபாத்திரம் பின்னர் ஒரு சர்வதேச கலாச்சார சின்னமாக மாறி பல்வேறு ஊடகங்களில் தோன்றியது. காட்சில்லாவை மையமாக கொண்டு ஏறத்தாழ 33 சப்பானிய திரைப்படங்கள், ஐந்து அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் ஏராளமான கணினி விளையாட்டுகள், நாவல்கள், வரைகதைகள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளிவந்துள்ளன. காட்சில்லாவை அரக்கர்களின் அரசன் (கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ்) என்று அழைக்கின்றனர், இந்த பெயர் முதன் முதலில் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த அதே பெயரை கொண்ட சப்பானிய திரைப்படத்தில் இருந்து தோன்றியது.

காட்சில்லா
காட்சில்லா கதை மாந்தர்
1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் காட்சில்லாவின் தோற்றம் [1]
முதல் தோற்றம்காட்சில்லா (1954)[2]
உருவாக்கியவர்
  • டோமோயுகி தனகா
  • இஷிரோ ஹோண்டா
  • ஈசி சுபுராயா[3]
தகவல்
வகைபழங்கால மிருகம்
குடும்பம்காட்சில்லா சூனியர்
மினில்லா

காட்சில்லா என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஓரு ஊர்வன வகையை சேர்ந்த ஓர் உயிரினமாக சித்தரிக்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த இந்த உயிரினம் அணுகுண்டு சோதனைகளின் விளைவாக வெளியிடப்பட்ட கதிரியத்தினால் விழித்தெழுந்து பலம் பெற்றது.[4] 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுக்கரு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் நினைவுகள் சப்பானிய கதைகளில் காட்சில்லா உருவாக ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மேலும் சப்பானில் பொதுவாக காட்சில்லா அணு ஆயுதங்களுக்கான ஓர் உருவகமாக கருதப்பட்டது.[5] கதைகளில் எப்படி தூங்கிக்கொண்டிருந்த காட்சில்லா எழுந்து வந்து சப்பானில் சேதம் விளைவித்ததோ, அதே போல் அமெரிக்கா சப்பானில் சேதம் விளைவித்ததாகவும், இந்த "மாபெரும் மிருகம்" அமெரிக்காவின் உருவகம் என்றும் சப்பானிய மக்கள் கருதுகின்றனர்.[6][7][8] ஆராம்ப கட்டத்தில் காட்சில்லா ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும், பின்னர் திரைப்படத் தொடர் விரிவடையும் போது, சில கதைக்களங்களில் காட்சில்லா ஒரு மிதமான மிருகமாகவும், சில சமயங்களில் இது மற்ற கொடிய மிருகங்களுடன் போராடி உலகை காக்க உதவி செய்யும் நல்ல மிருகமாகவும் காட்சி படுத்தப்பட்டது. பொதுவாக காட்சில்லா பற்றிய சப்பானிய திரைப்படங்கள் சப்பான் மக்களின் எதிர்காலத்தை பற்றிய அக்கறையின்மை, வரலாற்றை பற்றிய அறியாமை, மனித செயல்களால் பெருகும் இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட பல வேறுபட்ட கருப்பொருட்கள் மற்றும் வர்ணனைகளைக் உள்ளடக்கியிருக்கின்றன.[9]

திரைப்படங்கள் மற்றும் வரைக்கதைகளில் காட்சில்லா பல துணை கதாபாத்திரங்களுடன் தோன்றுகிறது. பொதுவாக இது பல திரைப்படங்களில் சப்பானிய தற்பாதுகாப்புப் படைகளுடன் மோதுவது போல் சித்தரிக்கப்படுகின்றது. இது மேலும் மனிதர்கள் மட்டுமல்லாமல் கிகன், கிங் கிடோரா மற்றும் மெக்காகாட்சில்லா உள்ளிட்ட பல மிருகங்களுடன் போராடுவதாக சித்தரிக்கப்படுகின்றது. கதைகளில் அங்குவைரசு, மோத்ரா மற்றும் ரோடான் போன்ற உயிரினங்கள் காட்சில்லாவுடன் இணைந்து போராடுகின்றன. காட்சில்லா சூனியர் மற்றும் மினில்லா போன்ற உயிரினங்கள் காட்சில்லாவின் சந்ததிகளாக சித்தரிக்கப்படுகின்றன.[10] மேலும் கிங்காங் மற்றும் அவென்ஜர்ஸ் போன்ற பல்வேறு மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களுடனும் கிளை கதைகளில் காட்சில்லா தோன்றுகிறது.[11]

தோற்றம்

இந்த கதாபாத்திரம் 1954 ஆம் ஆண்டு இஷிரோ ஹோண்டா இயக்கிய திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கதாபாத்திரம் பின்னர் ஒரு சர்வதேச கலாச்சார சின்னமாக மாறி பல்வேறு ஊடகங்களில் தோன்றியது. காட்சில்லாவை மையமாக கொண்டு ஏறத்தாழ 33 சப்பானிய திரைப்படங்கள், ஐந்து அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் ஏராளமான கணினி விளையாட்டுகள், நாவல்கள், வரைகதைகள் புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளிவந்துள்ளன. காட்சில்லாவை அரக்கர்களின் அரசன் (கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ்) என்று அழைக்கின்றனர், இந்த பெயர் முதன் முதலில் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த அதே பெயரை கொண்ட சப்பானிய திரைப்படத்தில் இருந்து தோன்றியது.

பெயர்க்காரணம்

காட்சில்லாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கும் செயல்முறை விரிவாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதற்கு இந்த பெயர் எப்படி சூட்டப்பட்டது என்பது பற்றிய தெளிவான ஆதாரங்கள் இல்லை.[12] பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது. காட்சில்லா பற்றிய முதல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டோமோயுகி தனகா இந்த உயிரினத்துக்கு டோகோவின் திரையரங்கின் பிற்காலத் தலைவரான சிரோ அமிகுராவின் புனைபெயரிலிருந்து கோஜிரா என்ற பெயரை எடுத்ததாக அறியப்படுகின்றது. அமிகுரா பொதுவாக "கோஜிரோ" என்று அழைக்கப்பட்டார் ("கோரிரா" என்றால் பெரிய கொரில்லா குரங்கு மற்றும் குஜிரோ என்றால் பெரிய திமிங்கலம் என்று சப்பானிய மொழியில் பொருள் தரும்). இது அமிகுராவின் உடல் வாகு மற்றும் அவருடைய திமிங்கில இறைச்சி மீதான விருப்பம் ஆகியவையை குறிப்பதாக இருந்தது.[13] இந்த ஒத்த கருத்தை இயக்குனர் இஷிரோ ஹோண்டா, முதன்மை தயாரிப்பாளர் தனகா, சிறப்பு விளைவுகள் இயக்குனர் ஈசி சுபுராயா, தயாரிப்பாளர் இசிரோ சாட்டோ மற்றும் தயாரிப்புத் தலைவர் இவோ மோரி ஆகியோர் கூறியுள்ளனர்.[13]

ஆனால் 1998 ஆம் ஆண்டு காட்சில்லா பற்றிய ஒரு பிபிசி ஆவணப்படத்தில், ஹோண்டாவின் மனைவி கிமி, இந்த கதையை ஒரு கட்டுக்கதை என நிராகரித்தார். இவர் மேலும் ஹோண்டா, தனகா மற்றும் சுபுராயா ஆகியோர் இந்த பெயர் வைப்பதற்கு முன்னர் பல காலம் இதை பற்றி ஆலோசித்ததாகவும், அதன் பெயர்க்காரணம் எதுவும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் ஹோண்டாவுடன் பணியாற்றிய நீண்டகால உதவி இயக்குனர் கோஜி கஜிடா, "அவர்களுடன் நெருக்கமாக இருந்த எங்களுக்கு கூட அந்த பெயரை அவர்கள் எப்படி கொண்டு வந்தார்கள் என்று தெரியாது" எனக் கூறினார்.[13]

பின்னர் டோகோ ஆங்கில மொழி பேசும் வெளிநாடுகளில் திரைப்படங்களை விநியோகிக்க முற்பட்டபோது கோஜிரா என்ற சப்பானிய மொழி பெயரை காட்சில்லா என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். "காட்சில்லா" என்பதன் முதல் பதிவு செய்யப்பட்ட பயன்பாடு நவம்பர் 1955 இல் ஹவாய் தீவில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளில் தோன்றியது[14]

பண்புகள்

திரைப்படங்களின் சூழலில், காட்சில்லாவின் தோற்றம் பலவிதமாக வேறுபடுகின்றது. ஆனால் இது பொதுவாக அணு கதிர்வீச்சால் விழித்தெழுந்து அதிகாரம் பெற்ற ஒரு மகத்தான, வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த கடல் உயிரினமாக சித்தரிக்கப்படுகிறது.[15] ரே ஆரிகவுசன் ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கிய கற்பனையான ரெடோசாரரஸ் என்ற தொன்மாவை (டைனோசர்) அடிப்படியாக கொண்டு காட்சில்லாவின் கதாபாத்திர வடிவமைப்பு உருவாக்கப்பட்டது.[16] இது இரு கால்களை கொண்டு செங்குத்தான நிற்க வல்லது. மேலும் இது ஒரு தொன்மாவை போன்ற செதில்கள் மற்றும் தோல் அமைப்புடன், கனத்த தசைகளை கொண்ட மானிட கைகளுடன், ஒரு நீண்ட கனத்த வாளுடன் சித்தரிக்கப்படுகின்றது.[17] அணுகுண்டுடன் இந்த உயிரினத்தை உருவகப்படுத்த, இதன் தோல் அமைப்பு ஹிரோஷிமாவில் அணுக்கரு ஆயுத தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களில் உடம்புகளில் காணப்படும் தழும்புகளை மையமாக கொண்டு சித்தரிக்கப்பட்டது. இது அடிப்படை வடிவமைப்பில் ஓர் ஊர்வன தோற்றம் கொண்டு நிமிர்ந்த தோரணையில் காட்டப்பட்டாலும், வரைக்கதைகளில் இது பல்வேறு தோற்றங்களை கொண்டிருக்கின்றது.[18] வரைகதைகளில் பொதுவாக இவை ஒரு பச்சை நிற பள்ளி போன்ற உயிரினமாக சித்தரிக்கப்படுகிறது.[19]

சப்பானிய திரைப்படங்களில் இதன் பாலினம் என்னவென்று என்று கூறப்படவில்லை. பொதுவாக காட்சில்லா அஃறிணையிலும், பாலின வேறுபாடு இல்லாத பிரதிபெயர்களை கொண்டும் குறிப்பிடப்படுகின்றது. அதே நேரத்தில் ஆங்கில பதிப்புகளில், இது வெளிப்படையாக ஒரு ஆண் என்று விவரிக்கப்படுகிறது. ஒரு புத்தகத்தில், இதை உருவாக்கியவர்களில் ஒருவரான டோமோயுகி தனகா இது அநேகமாக ஒரு ஆண் என்று கூறினார்.[20] 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில், இது ஆண் என்றும் ஆனால் இது முட்டையிட வல்லது எனவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.[21]

திறன்கள்

காட்சில்லா அணு வெப்ப கற்றை வெளியிடுகிறது (1954)

காட்சில்லாவின் முதன்மையான ஆயுதம் அதன் "அணு வெப்ப கற்றுகள்" ("அணு சுவாசம்" என்றும் அழைக்கப்படுகிறது) ஆகும். அணுசக்தி மூலம் அதன் உடலுக்குள் இதை உருவாக்கி மின்காந்த சக்தியைப் பயன்படுத்தி செறிவூட்டி சீரொளி போன்ற உயர் வேக ஏவுகணையை போல நீல அல்லது சிவப்பு கதிரியக்க கற்றை வடிவத்தில் அதன் தாடைகளிலிருந்து கட்டவிழ்த்து விடுகிறது.[22][23] காட்சில்லாவிற்கு அபரிமிதமான உடல் வலிமை மற்றும் தசைத்திறன் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.[24]

காட்சில்லா நீர்நிலைகளில் வாழக்கூடியது. இது இடம்பெயரும் போது பூமியின் நீர்க்கோளத்தை கடந்து செல்வதற்கு ஏதுவாக துளை வடிவ செவுள்கள் கொண்டு நீருக்கடியில் சுவாசிக்கிறது.[25] இது நீர்நில மற்றும் நிலப்பரப்பு ஊர்வனவற்றின் இடைநிலை வடிவமாக விவரிக்கப்பட்டுள்ளது.[26] காட்சில்லாவுக்கு பெரும் உயிர்சக்தி இருப்பதாகக் படங்களில் காட்டப்படுகின்றன. இதன் கரடுமுரடான தேகம் மற்றும் மீளுருவாக்கம் செய்யும் திறன் காரணமாக இது வழக்கமான ஆயுதங்களுக்கு எதிராக இயற்கையான எதிர்ப்பு சக்தி கொண்டது. மேலும் அணு வெடிப்பில் இருந்து தப்பியதன் விளைவாக, இதை அணு சக்தியால் அழிக்க முடியாது. இதன் உடலில் ஒரு மின்காந்த துடிப்புகளை உற்பத்தி செய்யும் உறுப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது ஒரு சமச்சீரற்ற உடற்கவசத்தை கொண்டுள்ளது. பொதுவாக இதை உறுப்பு மறுசுழற்சி செய்யும் குறுகிய காலத்தைத் தவிர மற்ற காலத்தில் தாக்கி அழிப்பது கடினமானதாகும். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வரைக்கதைகள் மற்றும் விளையாட்டுகள் காட்சில்லாவை கூடுதல் சக்திகளுடன் சித்தரித்துள்ளன. காந்தவியல், முன்கணிப்பு, தீப்பிழம்பு, மின்காந்த ஆற்றல், மின்சார கதிர், வேகம், கண்களில் இருந்து வெளிப்படும் லேசர் கற்றைகள் போன்ற பல சக்திகளுடன் சித்தரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காட்சில்லா&oldid=3907851" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்