காட்டுவிலங்குப் பண்ணைத் தொழில்

காட்டுவிலங்குப் பண்ணைத் தொழில் (Wildlife farming) அல்லது வனவிலங்கு வளர்ப்பு அல்லது வனவிலங்கு விவசாயம் என்பது பெரும்பாலும் காட்டில் வாழும், பாரம்பரியமாக வளர்க்கப்படாத விலங்குகளை விவசாய முறையில் வளர்ப்பதைக் குறிக்கிறது. வேட்டையாடி அதைப் பதிவு செய்து வெளியிடுதல்; செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுதல்; உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்குத் தேவையான மூலப்பொருட்களைத் தயாரித்தல்; தோல், உரோமம், இழை போன்ற பொருட்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பலதரப்பட்ட நோக்கத்தோடு இவ்விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.[1][2][3]

கூண்டிலடைக்கப்பட்ட ஒரு புனுகுப்பூனை. இஃது ஒரு வகையான குழம்பி தயாரிப்பிற்குப் பயன்படுகிறது.

கூறப்படும் நன்மைகள்

வனவிலங்கு வளர்ப்பின் மூலம் உணவுக்காக அதிகம் வேட்டையாடப்படும் வன விலங்குகளின் எண்ணிக்கையின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு அதன் மூலம் அழிந்து வரும் உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என்று சில வனவிலங்குப் பாதுகாவலர்கள் வாதிடினாலும்[4] இம்முறையானது குறிப்பிடப்பட்ட சில உயிரினங்களைக் காப்பதைத் தவிர பெரும்பாலும் வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவே உள்ளது என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.[3]

சில ஆப்பிரிக்க சமூகங்கள் தாங்கள் ஆரோக்கியத்திற்கும் உயிர்வாழ்வதற்கும் தேவைப்படுவதாக நம்பும் விலங்கு புரதத்தின் தினசரி அளவைப் வேட்டையாடிப் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.[5] எனினும் பெரும்பால நேரம் வேட்டையாடப்பட்ட இறைச்சி கவனமாக கையாளப்படாத காரணத்தினால் இது நோய்கள் பரவ பெரிதும் காரணமாக அமைகிறது. வனவிலங்கு வளர்ப்பு முறையாகப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தயாரித்து இந்த ஆப்பிரிக்க சமூகங்களுக்கு வழங்குவதன் மூலம் நோய்களின் பரவலைக் குறைக்கலாம் என்று கருதப்படுகிறது.[4]

தி எண்ட் ஆவ் ஈடன் என்ற தனது ஆவணப்படத்தில் தென்னாப்பிரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ரிக் லோம்பா சில வகையான வனவிலங்கு விவசாயத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு நிலையான, புத்துணர்ச்சியூட்டும் விளைவினை ஏற்படுத்துவதன் உதாரணங்கள் சிலவற்றை முன்வைத்தார்.[6]

ஆபத்துகள்

வனவிலங்கு வளர்ப்பு பல வகையான விலங்கியல் நோய்களின் தோற்றத்தோடு தொடர்புப் படுத்தப்படுகிறது. சார்ஸ் (SARs) தொற்றுநோயின் பிறப்பிடமாக புனுகுப்பூனை வளர்ப்பு அறியப்படுகிறது.[7]

வனவிலங்கு விவசாயத்தின் இன்றைய நிலை

சமீபத்திய ஆண்டுகளில், வனவிலங்கு வளர்ப்பில் தென்னாப்பிரிக்கா ஒரு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனினும் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் இது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.[8] மேலும் 33 காட்டு இனங்களை பண்ணை விலங்குகளாக மறுவகைப்படுத்தி வரையறை செய்ய இது வழிவகுத்துள்ளது.[9]

கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக, சீனாவில் சுமார் 20,000 வனவிலங்குப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளில், சீன அரசாங்கம் வனவிலங்கு விவசாயத் தொழிலின் வளர்ச்சியை மானியங்கள் தருவதன் மூலம் ஊக்குவித்து வந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றிற்கு சற்று முன்னர் 2017-ம் ஆண்டின் நிலவரப்படி சீனாவில் இத்தொழிலின் வர்த்தக அளவானது 520 பில்லியன் யுவான் அல்லது 57 பில்லியன் பவுண்டு என மதிப்பிடப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது.[10]

இவற்றையும் பார்க்க

மேற்கோள் தரவுகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்