கிளாந்தான் சுல்தான்

கிளாந்தான் மாநிலத்தின் அரசர்

கிளாந்தான் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Kelantan; மலாய்: Sultan Kelantan Darul Naim) என்பவர் கிளாந்தான் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், கிளாந்தான் மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், கிளாந்தான் சுல்தான் என்பவர் கிளாந்தான் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆவார்.

கிளாந்தான் சுல்தான்
Sultan of Kelantan
Sultan Kelantan Darul Naim
کلنتن دار النعيم‎‎ سلطان
வாரிசு
தெங்கு முகமது பக்ரி பெத்ரா
(Tengku Muhammad Fakhry Petra)
ஆட்சிக்காலம்கிளாந்தான் சுல்தான் பதவியில்: (13 செப்டம்பர் 2010 - இன்று வரையில்)
முடிசூட்டுதல்2010
முன்னையவர்கிளாந்தான் சுல்தான் இசுமாயில் பெத்ரா
பிறப்பு6 அக்டோபர் 1969
தந்தைகிளாந்தான் இசுமாயில் பெத்ரா
தாய்தெங்கு ஆனிசு பிந்தி தெங்கு அப்துல் அமீது

தற்போதைய சுல்தான் ஐந்தாம் முகமது 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார். இவர், கிளாந்தான் மாநிலத்தின் 29-ஆவது சுல்தான் ஆவார்.

இவர் 243-ஆவது மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில்; மலேசியாவின் 15-ஆவது பேரரசராக தேர்வு செய்யப்பட்டார். 13 டிசம்பர் 2016 தொடங்கி 6 சனவரி 2019 வரையில் மலேசிய அரசர் பதவியை வகித்தார். இருப்பினும் தனிப்பட்ட காரணங்களினால் அவர் 6 சனவரி 2019-இல் மலேசிய அரசர் பதவியை விட்டு விலகினார்.[1][2][3]  

பொது

14 அக்டேபர் 2016-இல் நடைபெற்ற மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில், அடுத்த யாங் டி பெர்துவான் அகோங்-ஆக சுல்தான் ஐந்தாம் முகமது அறிவிக்கப்படடர். இவரின் ஆட்சிக்காலம் 13 டிசம்பர் 2016-இல் தொடங்கியது.[4][5]  

இருப்பினும், இவர் 6 சனவரி 2019-ஆம் தேதி பேரரசர் பதவியைத் துறந்தார். மலேசிய வரலாற்றில் பேரரரசர் ஒருவர் தம் பதவியைத் துறப்பது அதுவே முதல் முறையாகும்.[6]

வரலாறு

வரலாற்று ரீதியாக கிளாந்தான் மாநிலம், பண்டைய சீன, இந்திய மற்றும் சயாமிய நாகரிகங்களுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மாநிலமாக இருந்தது. 13 மற்றும் 14-ஆம் நூற்றாண்டுகளில் மயாபாகித்து பேரரசு மற்றும் சிறீவிஜயம் பேரரசுகளின் துணை இராச்சியமாக இருந்த பின்னர், 15-ஆம் நூற்றாண்டில் சயாம் மற்றும் மலாக்கா அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வந்தது.

1511-இல் போர்த்துகீசியர் மலாக்காவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கிளாந்தான் பல சிறு பிரதேசங்களாகப் பிரிந்தது. பின்னர் மீண்டும் சயாமிர்களால் கைப்பற்றப்பட்டு தாய்லாந்து பட்டாணி இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

பட்டாணி மாநிலம்

1760-ஆம் ஆண்டில், கிளாந்தான் குபாங் லாபு (Kubang Labu) எனும் இடத்தில் வாழ்ந்த ராஜா லோங் முகம்மது (Long Muhammad) என்பவரால், கிளாந்தான் மாநிலம் ஒரே ஆட்சியாளரின் கீழ் கொண்டு வரப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பட்டாணி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரபுத்துவ போர்த் தலைவரான லோங் யூனுஸ் (Long Yunus) என்பவரால் ராஜா லோங் முகம்மது தோற்கடிக்கப்பட்டார். அரியணையை கைப்பற்றிய லோங் யூனுஸ் தன்னை கிளாந்தானின் அரசராக அறிவித்துக் கொண்டார்.

1795-இல் ராஜா லோங் யூனுஸ் இறந்ததைத் தொடர்ந்து, கிளாந்தான் மாநிலத்தின் கட்டுப்பாடு திராங்கானு மாநிலத்திடம் வழங்கப்பட்டது. 1800-ஆம் ஆண்டில், ராஜா லோங் யூனுசின் மகன் லோ முகம்மது என்பவர் தன்னை சுல்தான் முகம்மது I என அறிவித்துக் கொண்டார். 1812-இல், சுல்தான் முகம்மது I (Sultan Muhammad I), ஒரு துணை ஆட்சியாளராக [[[சயாம்|சயாமியர்களால்]] ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அரண்மனைகள்

கிளந்தான் சுல்தானின் அரண்மனை, 1912
கோத்தா பாருவில் சுல்தான் இசுமாயில் பெட்ரா சாலை அலங்கார வளைவு
  • இசுதானா நெகிரி (Istana Negeri - State Palace), கோத்தா பாரு மாவட்டத்தின் குபாங் கிரியான் நகரில் அமைந்துள்ளது. இது தற்போதைய ஆட்சியாளரான சுல்தான் முகம்மது V அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். மேலும், இந்த அரண்மனையில் பல அதிகாரப்பூர்வ விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.[7]
  • இசுதானா மகோத்தா (Istana Mahkota - Crown Palace), குபாங் கிரியான் நகரில் அமைந்துள்ளது. சுல்தான் முகம்மது V அவர்களின் தாயார் ராஜா பெரம்புவான் தெங்கு அனிஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.[7]
  • இசுதானா பாலாய் பெசார் (Istana Balai Besar - Grand Hall Palace), கோத்தா பாரு நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது; கிளாந்தான் சுல்தான் முகம்மது II (1835-1886) என்பவரின் கட்டளையின் கீழ் 1840-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை கட்டி முடிக்கப்பட்டதும், அது அமைந்து இருந்த நகரத்திற்கு கோத்தா பாரு என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகராக மாறியது. இந்த அரண்மனை இப்போது அரசு விழா நிகழ்ச்சிகளுக்கான முக்கிய அரண்மனையாகச் செயல்படுகிறது.[7]
  • இசுதானா டெலிபாட் (Istana Telipot - Telipot Palace), கோத்தா பாரு நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது; தற்போதைய சுல்தானின் அதிகாரப்பூர்வ இல்லமாக அண்மைய காலம் வரை செயல்பட்டு வந்தது.
  • இசுதானா புக்கிட் தானா (Istana Bukit Tanah - Bukit Tanah Palace), தும்பாட் நகரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை சப்பானியர் ஆட்சிக்கு முன், 1910-ஆம் ஆண்டு சுல்தான் இசுமாயில் இப்னி அல்மர்கும் சுல்தான் முகம்மது IV என்பவரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.
  • இசுதானா கோத்தா லாமா (Istana Kota Lama - Old Fortress Palace), கிளாந்தான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது; நவீன கிளாந்தான் சுல்தானகத்தின் பழைய அரண்மனை; 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிளாந்தான் சுல்தான்களின் அதிகாரப்பூர்வ அரண்மனை.
  • சகார் அரண்மனை (Istana Jahar - Jahar Palace), கோத்தா பாரு நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது; 1887-இல் சுல்தான் அகமதுவால் (1886-1890) கட்டப்பட்டது.
  • இசுதானா பத்து (Istana Batu - Batu Palace), கோத்தா பாரு நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது; 1939-இல் சுல்தான் இசுமாயில் I (1920-1944) ஆட்சியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது.

வாரிசுகள்

கிளாந்தான் சுல்தானகத்தின் வாரிசு அமைப்பானது, ஆண்வழி தலைமகன் மரபு உரிமை (Agnatic primogeniture) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எந்தப் பெண்ணும் ஆட்சியாளராக முடியாது; மேலும் பெண் வழித்தோன்றல்கள், பொதுவாக வாரிசுகளில் இருந்து விலக்கப்படுகின்றன.

கிளாந்தான் சுல்தான் ஒரு மலாய்க்காரராகவும், இரத்த வழியில் ஓர் அரசராகவும், கிளாந்தான் சுல்தானகத்தின் வழித்தோன்றலாகவும், மற்றும் ஒரு முசுலிமாகவும் இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்