குண்டிச்சா கோவில்

குண்டிச்சா கோயில், (ஒடியா: ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோயில் நகரமான புரி நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். ஆண்டுதோறும் புரி ஜெகன்னாதர் கோயில் தேரோட்டம் முடியும் இடமாக இக்கோயில் விளங்குகிறது.

குண்டிச்சா கோயில்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Orissa" does not exist.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:புரி
அமைவு:பாதசங்கா
ஆள்கூறுகள்:19°49′00.9″N 85°50′25.3″E / 19.816917°N 85.840361°E / 19.816917; 85.840361
கோயில் தகவல்கள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:புரி ஜெகன்நாதர் கோயில் நிர்வாகம்,
இணையதளம்:http://www.jagannath.nic.in/

கோவில்

ஜெகன்நாதரின் தோட்ட வீடு என்று அழைக்கப்படும்[1] குண்டிச்சா கோயில், அனைத்து பக்கங்களிலும் சுவர்களால் சூழப்பட்ட ஒரு அழகான தோட்டத்தின் மையத்தில் உள்ளது. இது ஜகந்நாதர் கோயிலுக்கு சுமார் 3 கிலோமீட்டர்கள் (1.9 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. குண்டிச்சா கோயில் மற்றும் ஜெகந்நார் கோயில்கள், தேரோடும் வீதியின் இரு முனைகளில் அமைந்துள்ளது.

இக்கோயில் வெளிர் சாம்பல் மணற்கற்களைப் பயன்படுத்தி கலிங்க கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகம் கருவறை, சபா மண்டபம், திருவிழா மண்டபம் மற்றும் பிரசாத மண்டபம் என நான்கு கூறுகளை உள்ளடக்கியது.இக்கோயிலில் சிறிய சமையல் அறையும் கொண்டுள்ளது. [2] இந்த கோவில் ஒரு தோட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது "கடவுளின் கோடைகால தோட்டம்" அல்லது ஜகந்நாதரின் தோட்ட வீடு என்று அழைக்கப்படுகிறது.[3] தோட்டம் உட்பட முழு வளாகமும் ஒரு சுவரால் சூழப்பட்டுள்ளது.

கருவறையில் இரத்னவேதி என்று அழைக்கப்படும் ஒரு வெற்று மேடை (4 அடி (1.2 மீட்டர்) உயரமும், 19 அடி (5.8 மீ) நீளமும் கொண்டது, இங்கு ஆண்டு விழாக்களில் தெய்வத் திருமேனிகள் வைக்கப்படுகின்றன. கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. ரத யாத்திரையின் போது தெய்வங்கள் கோயிலுக்குள் நுழையும் முக்கிய வாயில் மேற்கு வாசல் ஆகும். நாகச்சன வாசல் எனப்படும் கிழக்கு வாசல் தெய்வங்கள் புறப்படுவதற்கு பயன்படுகிறது.

குண்டிச்சா கோயிலில் ஜெகநாதரை வழிபடும் 9 நாள் ரத யாத்திரையைத் தவிர, ஆண்டு முழுவதும் கோயில் காலியாகவே இருக்கும். நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகு சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குச் செல்லலாம்.[2] இந்த காலகட்டத்தில் வெளிநாட்டினர் கோவிலுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த கோவில் பூரி ஜகன்னாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

ரத யாத்திரை

புரி ரத யாத்திரையின்[3] போது கிருஷ்ணன், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர் தனித்தனி தேர்தளில் ஏறி ஜெகன்னாதர் கோயிலிருந்து, 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஊர்வலாக குண்டிச்சா கோயிலுக்கு வருவார்கள். முதல் நாள் தேர்களில் இருக்கும் தெய்வங்கள் இரண்டாம் நாள் குண்டிச்சா கோயிலுக்குள் நுழைகின்றன. அவர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் குண்டிச்சா கோவிலில் தங்குகின்றனர்.[4][5]

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

About Nabakalebara puri 2015Odisha CulturesTemples in OdishaOdisha Festivals

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குண்டிச்சா_கோவில்&oldid=3745908" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்