குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று

+6 ஒக்சியேற்றும் நிலையிலுள்ள குரோமியம் தனிமத்தின் இரு வகையான ஒக்சிஅன்னயன்களே குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றாகும். இரண்டினதும் ஏற்றம் ஒன்றென்றாலும், இரண்டும் வெவ்வேறு மூலக்கூட்டுக் கட்டமைப்புடையன. குரோமேற்று அயன் CrO42- என்ற மூலக்கூற்று வாய்ப்பாடாலும், இருகுரோமேற்று அயன் Cr2O72- என்ற மூலக்கூற்று வாய்ப்பாடாலும் குறிக்கப்படுகின்றன. குரோமேற்று அயனின் உப்புக்கள் மஞ்சள் நிறத்திலும், இருகுரோமேற்று அயனின் உப்புக்கள் செம்மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று
பண்புகள்
CrO2−
4
மற்றும் Cr
2
O2−
7
வாய்ப்பாட்டு எடை115.994 g mol-1 மற்றும் 215.988 g mol-1
Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa)
Infobox references
பொட்டாசியம் குரோமேற்று
பொட்டாசியம் இருகுரோமேற்று

இரசாயனப் பண்புகள்

குரோமேற்று ஐதரசன்பரவிக்சைட்டுடன் தாக்கமடைந்து பரவொகசைட்டு-ஒக்சைட்டு சேர்மத்தை உருவாக்குகின்றது. குரோமேற்று அன்னயனிலுள்ள ஒக்சிசன் அணுக்களை பரவொக்சைட்டு அயன்கள் பதிலீடு செய்வதே இதற்குக் காரணமாகும். அமிலத்தைன்மையான கரைசலில் நீல நிறமான குரோமியம்(VI)ஒக்சைட்டுபரவொகசைட்டை உருவாக்கலாம். எனினும் இது நிலைப்புத்தன்மை குறைவான சேர்மமாகும்.

அமில-கார தாக்கங்கள்

குரோமேற்றுக்கான மேலாதிக்க வரைபு

நீர்க்கரைசலில் குரோமேற்று அன்னயனும், இருகுரோமேற்று அன்னயனும் சமநிலையில் காணப்படுகின்றன.

2 CrO42− + 2 H+ Cr2O72− + H2O

நீர்க்கரைசலில் ஐதரசன்குரோமேற்று அன்னயனும் குரோமேற்று அன்னயனுடன் இரசாயன சமநிலையில் உள்ளது.

2HCrO4 Cr2O72− + H2O

எனினும் ஒரு நீர்க்கரைசலில் மூன்று விதமான குரோமியத்தின் ஒக்சிஅன்னயன்களும் ஒரே அளவில் காணப்படுவதில்லை. கரைசலின் pH மற்றும் கணக்கிடப்பட்ட குரோமியத்தின் செறிவு [notes 1] ஆகிய காரணிகளில் குரோமேற்று, ஐதரசன்குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று அயன்களின் செறிவு தங்கியுள்ளது. இத்தொடர்பை இம்மூன்று அயன்களின் மேலாதிக்க வரைபு எடுத்துக்காட்டுகின்றது. வரைபில் pCr என்பது குரோமியத்தின் கணக்கீட்டுச் செறிவின் மறை லொக்காரிதமாகும். எனவே pCr=2 என்பது குரோமியத்தின் பகுத்தாய்வுச் செறிவான 10-2 mol dm-3 ஐக் குறிக்கின்றது. அமிலத்தன்மையான கரைசலில் அதிக இருகுரோமேற்று அயன்களும், நடுநிலை அல்லது கார கரைசலில் அதிகமான குரோமேற்று அயன்கள் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். எனவே அமிலத்தில் குரோமேற்றுள்ள உப்பைக் கரைத்தால் அது இருகுரோமேற்றாக மாற்றமடைந்து செம்மஞ்சள் நிறத்தைக் கரைசலுக்குக் கொடுக்கும். நடுநிலையான கரைசலில் கரைத்தால் அதன் மஞ்சள் நிறத்தையே தக்க வைத்திருக்கும்.

குரோமேற்று அயனுடைய உப்புக்கள் மென்காரமாகத் தொழிற்படும். எனவே இவை புரோத்திரன்களை ஏற்றுக்கொண்டு கரைசலின் அமிலத்தன்மையைக் குறைக்கின்றன.

HCrO4 CrO42− + H+; pKa = ca. 5.9

ஒக்சியேற்றல் மற்றும் தாழ்த்தல் பண்புகள்

குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று அன்னயன்கள் இலத்திரன்களை ஏற்றுக்கொண்டு (ஏனையவற்றை ஒக்சியேற்றி) குறைந்த ஒக்சியேற்றும் நிலையை அடைகின்றன. எனவே குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகள் ஓரளவுக்கு சிறந்த ஒக்சியேற்றும் பொருட்களாகும். எனவே ஒக்சியேற்றப்படக்கூடிய பொருட்கள் கரைசலில் காணப்பட்டால் குரோமேற்று அல்லது இருகுரோமேற்று தாழ்த்தப்பட்டு Cr3+ அயன்களைத் தோற்றுவிக்கின்றது.

Cr2O72− + 14 H3O+ + 6 e → 2 Cr3+ + 21 H2O (ε0 = 1.33 V)

காரக்கரைசலில் குரோமேற்று குரோமியம் ஐதரொக்சைட்டைத் தோற்றுவிக்கின்றது. இதன் குறைந்த வோல்ட்டளவு குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று காரக்கரைசலில் பலங்குன்றிய ஒக்சியேற்றும் பொருட்கள் எனக் காட்டுகின்றது.

CrO42- + 4 H
2
O
+ 3 e-Cr(OH)
3
+ 5OH-0 = −0.13 V)

பயன்பாடு

குரோமேற்று அயன்
இருகுரோமேற்று அயன்
குரோமேற்றுப் பூச்சால் பூசப்பட்ட பேருந்து
  • குரோமியப் பூச்சு பூசப்படும் போது பயன்படுத்தப்படுகின்றது. உலோகங்களை அரிப்பிலிருந்து பாதுகாக்க குரோமியம் பூசப்படுகின்றது.
  • குரோமேற்றுக்கள் பொதுவாக நீரில் இலகுவாகக் கரைந்தாலும், பெரிய அணுவெண்ணுடைய பார உலோகங்களின் குரோமேற்று உப்புகள் நீரில் கரைய மாட்டா. எனவே பார உலோகங்களின் குரோமேற்று உப்புகள் மஞ்சள் நிறப்பூச்சாகப் பயன்படுகின்றது.

உற்பத்தி

இரும்பு குரோமைட்டிலிருந்து குரோமேற்று உப்புக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இரும்புகுரோமைட்டை சோடியம் காபனேற்று மற்றும் கல்சியம் காபனேற்றுடன் வளியுடன் கடும் வெப்பத்துக்கு உட்படுத்துவதால், குரோமியம் +6 ஒக்சியேற்றும் நிலைக்கு ஒக்சியேற்றப்படுவதுடன், இரும்பு ஒக்சைட்டும் தோற்றுவிக்கப்படுகின்றது.

4 FeCr2O4 + 8 Na2CO3 + 7 O2 → 8 Na2CrO4 + 2Fe2O3 + 8 CO2

நச்சுத்தன்மை

அதிகமான ஒக்சியேற்றும் ஆற்றல் காரணமாக குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகள் நச்சுத்தன்மையுடைய சேர்மங்களாகும். காற்றில் கலந்துள்ள குரோமேற்றுத் துகள்கள் புற்றுநோயையும் உருவாக்கலாம். எனவே இவை உள்ள பதார்த்தங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சிறந்ததாகும்.

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்