கேரள சர்வதேச திரைப்பட விழா

கேரளத்தின், திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் திரைப்பட விழா

கேரள சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of Kerala சுருக்கமாக ஐ.எஃப்.எஃப்.கே ) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு திரைப்பட விழா ஆகும். இந்த திரைப்பட விழாவானது 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. இந்த விழாவை கேரள அரசின் கலாச்சார விவகாரங்கள் துறை சார்பாக கேரள மாநில சலனசித்திர அகாதமி நடத்துகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது திசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது, இது இந்தியாவின் முன்னணி கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. [1]

பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த திரைப்பட விழாவில் முதன்மைபடுத்தப்படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது லத்தீன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 14 படங்கள் போட்டி பிரிவில் கொண்டுவரபடுகின்றன. [2] இந்த விழாவில் மலையாள திரைப்படத் துறைக்கு ஒதுக்கபட்ட ஒரு பகுதியும் உள்ளது. ஐ.எஃப்.எஃப்.கே.யை அடிப்படையாக கொண்டு, சலனசித்திர அகாதமி கேரளத்தின் சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவையும் ஏற்பாடு செய்கிறது.

வரலாறு

1988 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழாவை (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் நடத்தியது. [3] இந்த விழாவானது தீவிர திரைப்படங்களில் ஆர்வத்தை கேரளத்தில் தூண்டியது. இதன் பின்னர் பல திரைப்பட சங்கங்கள் மாநிலம் முழுவதும் பிறந்தன. இந்த சங்கங்களின் செயல்பாடுகளில் உலகம் முழுவதிலுமிருந்து வந்த செவ்வியல் திரைப்படங்களைத் திரையிடுவது, திரைப்படத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து குழு விவாதங்களை நடத்துதல், புகழ்பெற்ற திரைப்பட படைப்புகளைப் பற்றிய துண்டுப்பிரசுரங்களை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். கலாச்சார பரிமாற்ற திட்டங்களின் ஒரு பகுதியாக திரைப்பட சங்கங்களினால் காப்பகங்களிலிருந்தும், சில நாடுகளின் தூதரகங்களிலிருந்தும் படங்களின் பிரதிகளைப் பெற்றன. திரைப்பட சமூக இயக்கங்கள் மக்களிடையே திரைப்படம் குறித்த அறிவை உயர்த்த உதவியது மேலும் சர்வதேச திரைப்பட விழா தேவை என்ற நிலைக்கு வந்தனர். முதல் கே. தி. வி 1996 இல் கோழிக்கோட்டில் நடந்தது. தற்செயலாக, சினிமாவின் 100 வது ஆண்டு விழாவில் இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக 100 படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வை 1998 வரை கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.எஃப்.டி.சி) நிர்வகித்தது. கேரள மாநில சலனச்சித்திரா அகாதமி உருவாக்கப்பட்டதும், திரைபடத் துறையை மேம்படுத்துவதல் தொடர்பான பிற செயல்பாடுகளுடன், கே. தி. விழாவை நடத்துவதற்கான பொறுப்பும் அதற்கு வழங்கப்பட்டது. பின்னர், கே. தி. விழாவின் ஒரு பகுதியாக 1999 இல் போட்டி பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த போட்டி ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது லத்தீன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே ஆகும். 'FIPRESCI (Fédération Internationale de la Presse Cinématographique) மற்றும் Netpac (ஆசிய திரைப்பட மேம்படுத்துவதற்கான வலைப்பின்னல்) ஆகியவை விழாவை அங்கீகரித்தன.

விழாவின் சிறப்பம்சங்கள்

தற்கால உலகத் திரைப்படம், புதிய மலையாளத் திரைப்படங்கள், முக்கிய திரைப்பட படைப்பாளிகளின் பின்னோக்கிய பார்வை, பாராட்டு மற்றும் அஞ்சலி நிகழுவுகள், தற்கால இந்திய திரைப்படங்கள், குறும்படங்கள் , ஆவணப்படங்கள் போன்றவற்றை திரைப்பட விழாவின் போது திரையிடப்படுகின்றன. திரைப்பட சந்தை மற்றும் சினிமா தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகளும் கே. தி. விழாவின் போது திட்டமிடப்பட்டுள்ளன. திருவிழா இப்போது திருவனந்தபுரத்தில் உள்ள பல்வேறு திரைப்பட அரங்குகளில் நிரந்தரமாக நடத்தப்படுகிறது. விழாவானது எப்போதும் அது பெற்றுள்ள மக்கள் ஆதரவிற்காக குறிப்பிடப்படுகிறது. [4]

வழங்கப்படும் பரிசுகள்

  • கோல்டன் காக ஃபெசண்ட் விருது : (சுவர்ணா சகோரம்) இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு சமமாகப் பகிரப்படும் ரொக்கப் பரிசாக சிறந்த திரைப்படத்திற்கு ரூ .1,000,000 / - (சுமார் 20,000 அமெரிக்க டாலர்) பரிசு.
  • சில்வர் காக ஃபெசண்ட் விருது விருது : (ராஜதா சகோரம்) சிறந்த இயக்குனருக்கு ரூ .300,000 / - (சுமார் 6,000 அமெரிக்க டாலர்) ரொக்கப் பரிசு
  • சில்வர் காக ஃபெசண்ட் விருது : (ரஜதா சகோரம்) மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கு ரூ .200,000 / - (சுமார் 4,000 அமெரிக்க டாலர்) ரொக்கப் பரிசு.
  • பார்வையாளர் பரிசு : (ராஜதா சகோரம்) விழா பிரதிநிதிகளால் வாக்களிக்கபட்ட மிகவும் பிரபலமான படத்தின் இயக்குநருக்கு ரூ .100,000 (சுமார் 2,000 அமெரிக்க டாலர்) ரொக்கப் பரிசு
  • பிப்ரிசி விருது : ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி லா பிரஸ் சினமடோகிராஃபிக் தேர்ந்தெடுத்த சிறந்த படத்திற்கான விருது.
  • நெட்பேக் விருது : ஆசிய திரைப்படங்களை மேம்படுத்துவதற்காக நெட்வொர்க்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவிலிருந்து போட்டி பிரிவில் தேர்ந்தெடுக்கபட்ட சிறந்த படத்திற்கான விருது.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விருதுகள் : 2007 ஆம் ஆண்டில், ஃபிப்ரெஸ்கி மற்றும் நெட்பேக்கிலிருந்து மேலும் இரண்டு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அவை விழாவில் சிறந்த மலையாள படங்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும்.


குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்