கொடுங்கல்லூர் கோயிலகம்

கேரள அரண்மனை

கொடுங்கல்லூர் கோவிலகம் ( மலையாளம்: കൊടുങ്ങല്ലൂര്‍ കോവിലകം ), என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இடைக்கால கொடுங்கல்லூர் இராச்சிய அரச குடும்பத்தினரின் அரண்மனையாகும். கொடுங்கல்லூர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இந்திய விடுதலை வரை கொச்சி இராச்சியத்துக்கு உட்பட்ட சிற்றரசாக இருந்தது. கொடுங்கல்லூர் இராச்சியம் 1707 க்குப் பிறகு டச்சு அரசாங்கத்தின் பாதுகாப்பில் சிலகாலம் இருந்தது, பின்னர் சாமுத்திரிகளுக்கு அடங்கியதாக மாறியது. கொடுங்கல்லூர் அரச குடும்பத்திற்கு சிராக்கல் கோவிலகம் மற்றும் புத்தேன் கோவிலகம் ஆகிய இரண்டு கிளைகள் இருந்தன.[1][2][3][4][5]

வடிவமைப்பு

சிராகல் கோயிலகம் [6] இரண்டு நாலுகெட்டு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது, ஒன்று மற்றொன்றை விட பெரியது. கோயிலகம் வாளத்தில் முதன்மைக் குடியிருப்பு கட்டிடம் மற்றும் இன்னும் இரண்டு பழைய கட்டிடங்கள், ஒரு குளம் ( படகுளம் என அழைக்கப்படுகிறது ), குடும்பக் கோயில் ( இந்து பெண் தெய்வமான தலட்டில பகவதி கோயில் ) மற்றும் சர்பக்காவு போன்றவை உள்ளன. கொடுங்கல்லூர் கோவிலகம் ஒரு குருகுலம் (கற்றல் மையம்) என்று புகழ்பெற்றது.[7] இன்றைய கேரளம் முழுவதிலும் உள்ள அறிஞர்களில் பலர் இந்த அரண்மனைகளில் வசித்து சமசுகிருதம் மற்றும் வேதங்களை படித்து வந்தவர்களாவர். இந்த கோவிலகத்தைச் சேர்ந்த பிரபல அறிஞர்கள் [8] மலையாளத்திலும், சமஸ்கிருத்ததிலும் தம் இலக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.[9] வென்மணி அச்சன் நம்பூதிரிபாத்தின் கூற்றுப்படி, கேரளத்தின் குருகுஙங்களுக்கு பல தசாப்தங்களாக கொடுங்கல்லூர் கோயிலகம் மையமாக இருந்தன.[10]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்