சகலா

சகலா அல்லது சங்கலா (Sagala or Sangala), தற்கால பாக்கித்தானில் உள்ள சியால்கோட் நகரத்தின் பண்டைய கிரேக்கப் பெயராகும். இந்நகரம் பண்டைய பஞ்சாப் பகுதியில் வடக்கில் அமைந்திருந்தது. மேலும் பண்டைய பரத கண்ட மக்களான பாக்லீகர்களின் தலைநகராக விளங்கியது.

வட இந்தியாவில் ராவி ஆற்றின் கரையில் சகலா நகரம்

கிரேக்க மன்னர் டெமெட்டிரியசின் மகனும், கிரேக்க மன்னருமான மெனாண்டரின், இந்தோ கிரேக்க நாட்டின் தலைநகராகவும் சகலா நகரம் விளங்கியது.

மகாபாரதக் குறிப்புகள்

பாக்லீகர்கள் சகலா நாட்டை ஆண்டதாக மகாபாரத காவியத்தில் (மகாபாரதம் 8:44) குறிக்கப்பட்டுள்ளது. மேலும் குருச்சேத்திரப் போரில் சகலா நாட்டின் கலந்து கொண்ட மன்னர் பாக்லீகரை மிக வளு மிக்கவன் எனப் போற்றப்படுகின்றான்.[1] பாக்லீகரின் மகன் சோமதத்தன் மற்றும் பேரன் பூரிசிரவஸ் ஆகியவர்கள் ஒரு அக்குரோணி படைகளுடன் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர்.பாஹ்லீகர்களின் அரசனான பூரிசிரவஸ் கௌரவப் படைகளின் 11 படைத்தலைவர்களில் ஒருவனாக நியமிக்கப்பட்டான்.[2] போரில் சாத்தியகி தன் வாளால் பூரிசிரவசைக் கொன்றான்.

சகலாவின் அழிவு

அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது, பஞ்சாபின் தூர கிழக்கில் அமைந்த சகலா நகரம்

அலெக்சாண்டர் பாரசீகத்தை வென்ற பின் இந்திய மன்னர் போரசின் யாணைப் படைகள் மற்றும் 5000 தரைப்படைகளின் துணையுடன், ராவி ஆறு (கிரேக்கர்களால் பெயரிடப்பட்ட ஹைட்டோடெஸ் பெயரிடப்பட்ட) எனும் ஐராவதி ஆற்றைக் கடந்து சகலா நகரத்தை சூறையாடினான்.பின்னர் சகலா சீரமைக்கப்பட்டு, கிரேக்கப் பேரரசின் கிழக்கெல்லை நகராக விளங்கியது. ஹெலனிய காலத்தில் கிரேக்க பண்பாடு, கலைகளின் தாக்கம் இப்பகுதிகளில் பரவியது.

சுங்கப் பேரரசில்

சுங்கப் பேரரசின் மேற்கில் சகலா நகரம், கி மு 185 – கி மு 73

மௌரியர்களை வென்ற புஷ்யமித்திர சுங்கன் சுங்கப் பேரரசை நிறுவி மேற்கில் சகலா வரை மகத நாட்டை விரிவாக்கினான்.

இந்தோ கிரேக்க ஆட்சியாளர்கள்

கிரேக்க பாக்திரியா பேரரசின் மன்னர் மெனாண்டர் தனது ஆட்சிக் காலத்தில் (160 – 135) பஞ்சாபின் சகலா நகரை கைப்பற்றினார்.

சகலா நகரத்தில் கிரேக்க சிற்பக் கலையுடன் கிரேக்க கட்டிட கட்டப்பட்டது. இந்தோ – கிரேக்கர்கள், பௌத்த சமயத்தை ஏற்றுக் கொண்டு, உள்ளூர் பண்பாடு மற்றும் நாகரீகங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சகலா&oldid=2278675" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்