சமயக்குரவர்

நால்வர்

சமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.[1]

நால்வர்
திருக்கோணேச்சரத்தில் சமயகுரவர்களின் சிலைகள்

சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கொண்டும் நூலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென அறிந்து கொள்கின்றனர்.[2] இந்து ஆய்வுகள் சைவ சமயத்தின் வரலாறுகள் குறித்த ஐயப்பாடுகளை களையவும், சம்பவங்களுக்கு வலுவூட்டவும் உதவுகின்றன.

சமயக்குரவர்கள் பற்றி வெளிவந்துள்ள நூல்கள்

நால்வரை குறித்தான ஓவியம்
  • நால்வர் நான்மணிமாலை — திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாக சிவப்பிரகாசர் எழுதியது.
  • நால்வர் நெறி — 1968ஆம் ஆண்டு க. பாலசுப்பிரமணியம், வ. இ. இராமநாதன் அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும்.[3]

கோயில்களில்

இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் - நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்

சிவாலயங்களின் பிரகாரத்தில் நால்வருக்கும் சிலைகளும், தனிச்சன்னதிகளும் அமைக்கப்படுகின்றன. பொதுவாக இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வரிசையை மாற்றுவதில்லை.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சமயக்குரவர்&oldid=3813346" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்