சுதாயிக்கிய மெய்யியலாளர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது காலநிரலான சுதாயிக்கிய மெய்யியலாளரகளின் பட்டியலாகும்..

பொ.ஊ.மு. 3-ம் நூற்றாண்டு

  • சிதியத்தின் சீனோ (அண். பொ.ஊ.மு. 334-262), ஏதென்சு சுதாயிக்கியப் பள்ளி நிறுவனர் (அண். கி.மு 300).
  • பெர்சேயெசு (பொ.ஊ.மு. 306-243), சீனோவின் மணவர், நண்பர்.
  • சோலியின் அராத்தசு (அண். பொ.ஊ.மு. 315-அண். பொ.ஊ.மு. 245), சீனொவின் மாணவர், கவிஞர்.
  • சோலியின் அதினோடோரசு (fl. பொ.ஊ.மு. 275) சீனோவின் மாணவர், அராத்தசுவின் உடன்பிறப்பு.
  • சீயோசின் அரிசுட்டோ (அண். பொ.ஊ.மு. 310-அண். பொ.ஊ.மு. 240), சீனோவின் மாணவர், நக்கல்வாதச் சார்பினர்.
  • அண்டியோக்கின் அப்பொல்லோபேனசு (fl. பொ.ஊ.மு. 250), சுதயிக்கிய மெய்யியலாளர், சீயோசின் அரிசுட்டோவின் நண்பர்.
  • டையோனிசியசு, பிற்போக்காளர் (அண். பொ.ஊ.மு. 325-அண். பொ.ஊ.மு. 250), சீனோவின் மாணவர், சைரெனாயிக்குவாக மாறியவர்.
  • சுபேயரசு (அண். பொ.ஊ.மு. 285-அண். பொ.ஊ.மு. 210), சீனோவின் மாணவர், சுபர்ட்டாவுக்கும் அலெல்சாந்திரியாவுக்கும் புலம்பெயர்ந்தவர்.
  • கார்த்தேஜின் எரிலியசு (fl. பொ.ஊ.மு. 250), சீனோவின் மாணவர், மிக உயர்ந்த நல்லது அறிவே எனக் கருதியவர்.
  • அசோசுவின் கிளீந்தெசு (பொ.ஊ.மு. 331-232), சுதாயிக்கியப் பள்ளியின் இரண்டாம் தலைவர்.
  • சைரீனின் எராட்டோதெனீசு (fl. பொ.ஊ.மு. 225), அரிசுட்டோவின் மாணவர். Chief librarian at அலெக்சாந்திரியாவின் முதன்மை நூலகர்.
  • அம்பிபோலிசின் எர்மாகோரசு (fl. அண். பொ.ஊ.மு. 225), சுதாயிக்கு மெய்யியலாளர், சிதியத்தின் பெர்சேயசுவைப் பின்பற்றியவர்.
  • சோலியின் கிறிசிப்பசு (அண். பொ.ஊ.மு. 280-அண். பொ.ஊ.மு. 206), சுதாயிக்கியப் பள்ளியின் மூன்றாம் தலைவர். 705 நூல்களை எழுதியவர்.
  • டையோசுகோரிடெசு (சுதாயிக்கு) (fl. பொ.ஊ.மு. 225), கிறிசிப்பசுவின் மாணாக்கர். தார்சசின் செனோவின் தந்தை.
  • அரிசுட்டோகிரியோன் (fl. பொ.ஊ.மு. 210), கிறிசிப்பசுவின் உறவினர்.

பொ.ஊ.மு. 2-ம் நூற்றாண்டு

  • தார்சசின் செனோ (fl. பொ.ஊ.மு. 200), சுதாயிக்கியப் பள்ளியின் நான்காம் தலைவர்.
  • யூடிரோமசு (fl. தெரியாது), "அறவியலின் அடிப்படைகள்" என்ற நூலியற்றிய சுதாயிக்கு
  • மால்லசின் கிரேட்டெசு (fl. பொ.ஊ.மு. 175), இலக்கணவியலாளர், பெர்கமோன் நூலகத் தலைவர்.
  • பாபிலோனின் டையொஜீனெசு (அண். பொ.ஊ.மு. 230-அண். பொ.ஊ.மு. 150), சுதாயிக்கியப் பள்ளியின் நான்காம் தலைவர்.
  • செனோடோட்டசு (சுதாயிக்கு) (fl. பொ.ஊ.மு. 150), பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர்.
  • செலியூசியாவின் அப்பொல்லோடோரசு (fl. பொ.ஊ.மு. 150), பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர்.
  • பேசில்லிடெசு (சுதாயிக்கு) (fl. அண். பொ.ஊ.மு. 150), கடந்தநிலை உறுப்படிகளின் நிலவலை மறுத்தவர்.
  • தார்சசின் ஆண்டிபேட்டர் (அண். பொ.ஊ.மு. 200-129), சுதாயிக்கியப் பள்ளியின் ஆறாம் தலைவர்.
  • ஏதென்சின் அப்பொல்லோடோரசு (fl. பொ.ஊ.மு. 150), வரலாற்றாசிரியர். பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர், தார்சசின் ஆண்டிபேட்டர்.
  • தார்ச்சின் ஆர்க்கிடெம்சு (fl. பொ.ஊ.மு. 140), பாபிலோன் சுதாயிக்கியப் பள்ளி நிறுவனர்.
  • உரோடோசின் பனயேழ்சியசு (பொ.ஊ.மு. 185-109), சுதாயிக்கியப் பள்ளியின் ஏழாம் தலைவர்.
  • சீடோனின் போயத்தசு (சுதாயிக்கு) (fl. பொ.ஊ.மு. 150), பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர்.
  • ஏதென்சின் பொலெமோன் (fl. பொ.ஊ.மு. 150), புவிப்பரப்பியலாளர், பனயேழ்சியசுவைப் பின்பற்றியவர்.
  • மார்க்கசு விஜெல்லியசு (fl. பொ.ஊ.மு. 125), பனயேழ்சியசுவுடன் வாழ்ந்த சுதாயிக்கு.
  • தர்சசின் எராகிளிடெசு (fl. பொ.ஊ.மு. 125), தார்சசின் ஆண்டிபேட்டர்அவர்களின் மாணவர்.
  • தார்தானசு (அண். பொ.ஊ.மு. 160-அண். பொ.ஊ.மு. 90), ஏதென்சு சுதாயிக்குப் பள்ளியின் முன்னணித் தகைமையாளர்]].
  • நெசார்க்கசு (அண். பொ.ஊ.மு. 160-அண். பொ.ஊ.மு. 90), ஏதென்சு சுதாயிக்குப் பள்ளியின் முன்னணித் தகைமையாளர்.
  • ப்ப்லியசு ரூடிலியசு ரூபசு (பொ.ஊ.மு. 158-அண். பொ.ஊ.மு. 75), அரசியல் மேதை, சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர், பனயேழ்சியசுவின் மாணவர்.
  • சுடைலோ (அண். பொ.ஊ.மு. 154-74), அறிஞர், இலக்கணவியலாளர்.
  • சைரீனின் டையோனிசியசு (fl. அண். பொ.ஊ.மு. 125), ஏதென்சு சுதாயிக்குப் பள்ளியின் முன்னணித் தகைமையாளர்]].
  • குவிண்டசு லூசில்லியசு பால்பசு (fl. அண். பொ.ஊ.மு. 125), சுதாயிக்கு மெய்யியலாளர், பனயேழ்சியசுவின் மாணவர்.
  • உரோடெசின் எகாட்டோ (fl. பொ.ஊ.மு. 100), பனயேழ்சியசுவின் மாணவர், அறவியலை பற்றி எழுதியவர்.
  • டையோட்டிமசு, சுதாயிக்கு (fl. பொ.ஊ.மு. 100), எபிக்கியூரசை ஏளனித்த சுதாயிக்கு.

பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டு

  • அபாமியாவின் பசிடோனியசு (அண். பொ.ஊ.மு. 135-51), சுதாயிக்கிய மெய்யியலாளர், வானியலாளர், புவிப்பரப்பியலாளர்.
  • கிரினிசு (fl. தெரியாது), ஏரணவியல் நூல் எழுதிய சுதாயிக்கு
  • மல்லசுவின் புரோகிளியசு (fl. தெரியாது), சுதாயிக்கிய மெய்யியலாளர், எழுத்தாளர்.
  • டையோடோட்டசு சுதாயிக்கு (அண். பொ.ஊ.மு. 130-59), சிசெரோவின் வீட்டில் வாழ்ந்த அவரது சுதாயிக்கிய ஆசிரியர்.
  • உரிடெசுவின் ஜெமினசு (அண். பொ.ஊ.மு. 110-அண். பொ.ஊ.மு. 40), வானியலாளர், கணிதவியலாளர்.
  • அதினோடோரசு கார்டிலியோன் (அண். பொ.ஊ.மு. 130-60), பெர்கமோன் நூலகர், காட்டோவுடன் வாழ்ந்தவர்.
  • டைரேவின் அப்பொல்லோனியசு (மெய்யியலாளர்) (fl. பொ.ஊ.மு. 50), சுதாயிக்கிய மெய்யியலாளர், சீனோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.
  • இள்வல் காட்டோ (பொ.ஊ.மு. 95-46), ஜூலியசு சீசர் எதிர்த்த அரசியல் மேதை.
  • Antipater of Tyre (அண். பொ.ஊ.மு. 100-45), காட்டோவின் நண்பர்.நடைமுறை அறவியலைப் பற்றி எழுதியவர்.
  • அப்பொல்லோனிடெசு (fl. பொ.ஊ.மு. 46), தனது தற்கொலைக்கு முன் காட்டோவுடன் கலந்துரையாடிய சுதாயிக்கிய மெய்யியலாளர்,
  • நிசாவின் ஜேசன் (fl. பொ.ஊ.மு. 50), பாசிடோனியசின் பேரன்.
  • அதினோடோரசு கனானிடெசு (அண். பொ.ஊ.மு. 74-பொ.ஊ. 7), பாசிடோனியசின் மாணவர், அகசுட்டசின் ஆசிரியர்.
  • சுடெர்ட்டினியசு (சுதாயிக்கு) (fl. பொ.ஊ.மு. 50), கவிஞர் ஒரேசு ஏளனித்த மெய்யியலாளர்.
  • குவிண்டசு செக்சுடியசு (fl. பொ.ஊ.மு. 40), சுதாயிக்கியத்தை பித்தகோரியத்துடன் இணைத்து கற்பித்த பள்ளியை நிறுவியவர்.
  • அலெக்சாந்திரியாவின் அரியசு டிடிமசு (fl. பொ.ஊ.மு. 10), தொடக்கச் சுதாயிக்கு எழுத்தாளர்களின் குறிப்புகளைத் திரட்டியவர்.

பொ.ஊ. முதல் நூற்றாண்டு

  • அலெக்சாந்திரியாவின் தியோன் (fl. பொ.ஊ. 10), சுதாயிக்கு மெய்யியலாளர்.
  • அட்டாலசு (சுதாயிக்கு) (fl. பொ.ஊ. 25), செனேக்காவை அடிக்கடி சந்தித்த சுதாயிக்கு மெய்யியலாளர்.
  • பாபிரியசு ஃபேபியனசு (fl. பொ.ஊ. 30), செனேக்காவின் ஆசிரியர், யாப்பியலாளர், மெய்யியலாளர்.
  • ஜூலிடசு கானசு (fl. பொ.ஊ. 30), சுதாயிக்கு மெய்யியலாளர், காலிகுலா வால் தண்டனை பெற்று இறக்க நேர்ந்தவர்.
  • லூசியசு அன்னேயசு செனேக்கா (அண். பொ.ஊ.மு. 4-பொ.ஊ. 65), அரசியல் மேதை, மெய்யியலாளர், நாடகாசிரியர்.
  • திராசியா பயேதசு (அண். பொ.ஊ. 10-பொ.ஊ. 66), உரோமானிய சட்டமன்ற உறுப்பினர், சுதாயிக்கு.
  • லூசியசு அன்னேயசு கார்னுதசு (அண். பொ.ஊ. 20-அண். பொ.ஊ. 70), கிரேக்க இறையியல் திரட்டுநூலை எழுதிய சுதாயிக்கு ஆசிரியர்.
  • அலெக்சாந்திரியாவின் கேரிமோன் (fl. பொ.ஊ. 50), சுதாயிக்கு மெய்யியலாளர், இலக்கணவியலாளர், அலெக்சாந்திரியா நூலகர்.
  • பகோனசு அக்ரிப்பினசு (fl. பொ.ஊ. 60), எபிக்டெடெசைப் போற்றிப் புகழ்ந்த சுதாயிக்கு மெய்யியலாளர்.
  • ஈலியோடோரசு (சுதாயிக்கு) (fl. பொ.ஊ. 60), சுதாயிக்கு மெய்யியலாளர், நீரொவின் ஆட்சிக்கால ஒற்றர்.
  • பப்லியசு எக்னாட்டியசு செலர் (fl. பொ.ஊ. 60), சுதாயிக்கு மெய்யியலாளர், நீரொவின் ஆட்சியில் ஒற்றர்.
  • எல்விடசு பிரிசுகசு (fl. பொ.ஊ. 65), சுதாயிக்கு மெய்யியலாளர், அரசியல் மேதை.
  • அருலேனசு ரசுடிகசு (அண். பொ.ஊ. 30-93), அரசியல் மேதை, திரேசியா பேட்டசு வின் நண்பரும் மாணவரும்.
  • முசோனியசு ரூபசு (அண். 25-அண். பொ.ஊ. 90), சுதாயிக்கு ஆசிரியர், எழுத்தாளர்.
  • யூப்ரட்டிசு, சுதாயிக்கு (அண். பொ.ஊ. 35-118), சொற்பொழிவாளர், மெய்யியலாளர், முசோனியசு ரூபசு வின் மாணவர்.
  • டையோ கிறிசோசுடோம் (அண். 40-அண். பொ.ஊ. 115), கிரேக்கச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், மெய்யியலாளர், வரலாற்றாசிரியர். 80 சொற்பொழிவுகள் வரை கிடைத்துள்ளன.

பொ.ஊ. 2-ம் நூற்றாண்டு

  • பான்டேனசு (பிறப்பு: தெரியாது, இறப்பு: பொ.ஊ. 200) கிரேக்க இறையியலாளர்.
  • கிளியோமெடெசு (fl. தெரியாது), போசிடொனியசுவுக்கு முன்பு வாழ்ந்த வானியலாளர்.
  • இயெராபோலிசின் எபிக்டெடெசு (அண். பொ.ஊ. 55-அண். பொ.ஊ. 135), மெய்யியலாளர், முசோனியசு ரூபசு வின் மாணவர்.
  • இயெரோகிளெசு (சுதாயிக்கு) (fl. பொ.ஊ. 150), "அறவியலின் அடிப்படைகள்" நூலை எழுதிய மெய்யியலாளர்.
  • பிலேவியசு அரியானசு (c. பொ.ஊ. 90-175), வரலாற்றாசிரியர், எபிக்டெடெசுவின் மாணவர்.
  • சிதோபோலிசின் பேசிலிடெசு (fl. பொ.ஊ. 150), மார்க்கசு அவுரேலியசுவின் ஆசிரியர்.
  • சால்சிடோனின் அப்பொல்லோனியசு (fl. பொ.ஊ. 150), லூசியசு வேரசு, மார்க்கசு அவுரேலியசுவின் சுதாயிக்கிய ஆசிரியர்.
  • கிளாடியசு மேக்சிமசு (fl.பொ.ஊ. 150), சுதாயிக்கு மெய்யியலாளர், மார்க்கசு அவுரேலியசுவின் நண்பர்.
  • சின்னா காட்டுலசு (fl. பொ.ஊ. 150), மார்க்கசு அவுரேலியசுவின் சுதாயிக்கிய ஆசிரியர்.
  • கயெரோனியாவின் செக்சுடசு (fl. பொ.ஊ. 160), சுதாயிக்கு மெய்யியலாளர், மார்க்கசு அவுரேலியசுவின் ஆசிரியர்.
  • ஜூனியசு ரசுடிக்கசு (அண். பொ.ஊ. 100-அண். பொ.ஊ. 170), மார்க்கசு அவுரேலியசுவின் மெய்யியலாளரும் அறிவுரையாளருமாக இருந்தவர்.
  • மார்க்கசு அவுரேலியசு (பொ.ஊ. 121-180), பொ.ஊ. 161 முதல் பொ.ஊ. 180 வரையில் உரோமப் பேரரசர்.

பொ.ஊ. 3-ம் நூற்றாண்டு

  • மீடியசு (fl. பொ.ஊ. 250), சுதாயிக்குகளின் உயிரின் (ஆத்மாவின்) எட்டு பகுதிகள் பற்றி இலாஞ்சினசுஅவர்களுடன் வாதம் புரிந்தவர்.

மேலும் காண்க

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்