செருமேனேட்டு

வேதியியலில் செருமேனேட்டு (germinate) என்பது செருமேனியத்தின் ஆக்சி எதிர்மின் அயனியைக் கொண்டிருக்கும் ஒரு சேர்மம்|சேர்மத்தைக்]] குறிக்கும். இத்தகையச் சேர்மங்களுக்குப் பெயரிடும் போது செருமனேட்டை பின்னொட்டாகச் சேர்த்து பெயரிடுவார்கள். அதாவது மையத்தில் செருமேனியம் அணுவைப் பெற்றுள்ள ஒரு பல்லணு எதிர்மின் அயனியாக அச்சேர்மம் கருதப்படும்[1]. உதாரணம்:பொட்டாசியம் அறுபுளோரோ செருமனேட்டு, K2GeF6.[2]

ஆர்த்தோ செருமேனேட்டு எதிர்மின் அயனி

செருமனேட்டு ஆக்சி சேர்மங்கள்

சிலிக்கனைப் போலவே செருமேனியமும் நான்முக {GeO4}[2] அலகுகள் கொண்ட பல சேர்மங்களை உருவாக்குகிறது. ஆனாலும் 5 [3] மற்றும் 6 [2] ஒருங்கிணப்பு முறைமைகளையும் வெளிப்படுத்துகிறது. சிலிக்கேட்டுகள் மற்றும் அலுமினோ சிலிக்கேட்டுகள்[4] வரிசைகளை ஒத்த எல்லா வகையான வரிசைச் சேர்மங்களையும் உருவாக்கவும் இதனால் முடிகிறது. உதாரணமாக Mg2GeO4 ஒலிவைன் மற்றும் சிபினல் வடிவச் சேர்மங்கள் CaGeO3 (பெரோவ்சிகைட்டு அமைப்பு), Be2GeO4 (பீனாகைட்டு அமைப்பு) ஆகியவை சிலிக்கேட்டுகளின் அமைப்புகளுடன் ஒன்றுபடுகின்றன[4][5]. BaGe4O9 4 மற்றும் 6 ஒருங்கிணைப்பு முறைமை செருமேனியத்தைக் கொண்ட சிக்கல் அமைப்பைப் பெற்றுள்ளது[5]. புவி அறிவியலில் செருமனேட்டுகள் முக்கியமான சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. சிலிக்கேட்டுகளின் அமைப்புகளை ஒத்த அமைப்புகளை இவை பெற்று இருப்பதால் புவியின் மூடகத்தில் கிடைக்கக் கூடிய சிலிக்கேட்டு கனிமங்களின் பண்புகள் பற்றிய ஆய்வுக்கு ஒத்தவரிசைச் சேர்மங்களாக இவற்றைப் பயன்படுத்த முடிகிறது[6]. உதாரணமாக MnGeO3 இது பைரோக்சின் வகை அமைப்பைக் கொண்டு MgSiO3 கனிமத்திற்கு இணையாக உள்ளது. புவியின் மூடகத்தில் மக்னீசியம் சிலிக்கேட்டு ஒரு முக்கியமான கனிமம் என்பது குறிப்பிடத் தக்கது[7][8][9]

நீர்க்கரைசல்களில் செருமேனேட்டுகள்

கார உலோக ஆர்த்தோசெருமேனேட்டுகள், M4GeO4 வெவ்வேறான GeO44− அயனிகளைக் கொண்டு அமிலக் கரைசல்களாக உருவாகின்றன. இவற்றில் GeO(OH)3−, GeO2(OH)22− மற்றும் [(Ge(OH)4)8(OH)3]3−. அயனிகள் காணப்படுகின்றன[2]. நடுவுநிலை செருமேனியம் ஈராக்சைடு கரைசல்கள் Ge(OH)4 அயனிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் GeO(OH)3−, GeO2(OH)22− முதலான உயர் pH மதிப்பு கொண்ட செருமேனேட்டு அயனிகள் காணப்படுகின்றன[10].

செருமேனேட்டு சீயோலைட்டுகள்

1990 களில்[11][12]நுண்துளை செருமேனேட்டுகள் முதன் முதலில் தயாரிக்கப்பட்டன. நீர்வெப்பத் தொகுப்பு முறை ஒரு பொதுவான தயாரிப்பு முறையாகப் பின்பற்றப்பட்டது. இம்முறையில் கரிம அமீன்கள். வார்ப்புருக்களாகப் (அமைப்பைக் கண்டறியும் முகவர்கள்) பயன்படுத்தப்பட்டன[13]. சேர்மத்தில் மிகையான ஆக்சைடு அயனிகள் இருப்பதால் இக்கட்டமைப்புகளின் எதிர்மின் சுமை, செருமேனியம் 5 மற்றும் 6 என்ற உயர் அணைவு எண்களில் காணப்பட வழிவகுக்கிறது. எதிர்மின் சுமையானது அமீன்களின் நேர்மின் சுமையால் சமப்படுத்தப்படுகின்றன.

செருமேனியத்தின் 4,5 அல்லது 6 ஒருங்கிணப்பு முறைமைகள், {SiO4} நான்முக அலகில் உள்ள Si-O பிணைப்புடன் ஒப்பிடுகையில் {GeO4} நான்முக அலகில் இருப்பது போன்ற மிகநீண்ட Ge-O பிணைப்பு மற்றும் நான்முகத்தின் மூலைகளைப் பகிர்ந்து கொள்ளும் குறுகிய Ge-O-Ge பிணைப்புக் கோணம் ஆகியனவற்றுடன் கூடுதலாக வழக்கத்திற்கு மாறான கட்டமைப்புகளையும் செருமேனேட்டு அனுமதிக்கின்றது[14] A zeolite reported in 2005[15]. 2005 இல் 30 உறுப்பு வளையத் தடங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் ஒரு சியோலைட்டு 18.6 X 26.2 Å என்ற பெரிய நுண்துளை அளவுகளுடன் கண்டறியப்பட்டது. இயற்கையாகத் தோன்றும் பவுசாசைட்டு கனிமத்தில் 12 உறுப்பு வளையத் தடங்களே காணப்படுகின்றன[16]). சிலிக்கன் மற்றும் செருமேனியம் தனிமங்கள் இணைந்த சிலிக்கோசெருமேனேட்டு, அலுமினியம் மற்றும் செருமேனியம் தனிமங்கள் இணைந்த அலுமினோசெருமேனேட்டு, சிர்க்கோனியம் மற்றும் செருமேனியம் தனிமங்கள் இணைந்த சிர்க்கோனோசெருமேனேட்டு கட்டமைப்பு சியோலைட்டுகளும் அறியப்படுகின்றன[13][17].

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செருமேனேட்டு&oldid=3521585" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்