சோமாலியாவின் வரலாறு

விக்கிமீடியா வரலாறு கட்டுரை

சோமாலியாவின் வரலாறு இன்றைய சோமாலியக் கூட்டாட்சிக் குடியரசின் ஆட்சிப்பகுதியில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து தற்காலம் வரையான நிகழ்வுகளின் வரலாறு ஆகும். பண்டைய உலகின் ஏனைய நாடுகளுடனான வணிகத்துக்கு சோமாலியா ஒரு மையமாக விளங்கியது.[1][2] and according to most scholars,[3][4] கட்டுக்கதைகளில் வரும் பன்ட் எனப்படும் பழங்கால நாட்டின் அமைவிடம் இதுவாக இருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.[5][6] மத்திய காலத்தில், அசூரான் சுல்தானகம், அடல் சுல்தானகம், வார்சங்காலி சுல்தானகம், கெல்டி சுல்தானகம், மசீர்த்தீன் சுல்தானகம் போன்ற பல வலிமை மிக்க பேரரசுகள் அப்பகுதியின் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தின.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த இராச்சியங்களுடன் செய்துகொள்ளப்பட்ட தொடர்ச்சியான பல உடன்படிக்கைகள் ஊடாகப் பிரித்தானியரும், இத்தாலியரும் சில கரையோரப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பிரித்தானிய சோமாலிலாந்தையும், இத்தாலிய சோமாலிலாந்தையும் நிறுவினர்.[7][8] உட்பகுதியில், மொகம்மத் அப்துல்லா அசனின் டேர்விசு நாடு, பிரித்தானியப் பேரரசின் படையெடுப்புக்களை நான்கு தடவைகள் முறியடித்து அவர்களைக் கரையோரப் பகுதிக்குப் பின்வாங்கச் செய்தது.[9] ஆனால், விமானப் படையின் துணையினால், 1920 இல் பிரித்தானியர் டேர்விசு அரசைத் தோற்கடித்தனர்.[10] மசீர்த்தீன் சுல்தானகத்துக்கும், ஓப்யோ சுல்தானகத்துக்கும் எதிராகப் படையெடுத்து அவற்றைக் கைப்பற்றிய இத்தாலி, சோமாலியாவின் வடகிழக்கு, மத்திய, தெற்குப் பகுதிகளைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.[8] இந்த ஆக்கிரமிப்பு, அப்பகுதிகளில் 1941 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவ நிர்வாகம் கொண்டுவரப்படும் வரை நீடித்தது. வடமேற்கு சோமாலியா தொடர்ந்தும் ஒரு காப்பரசாக நீடித்திருக்க, வடகிழக்கு, மத்தி, தெற்கு சோமாலியப் பகுதிகள் ஒரு உடன்படிக்கையின் படி, 1950 ஏப்ரல் முதலாம் தேதி ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. 10 ஆண்டுகளில் இப்பகுதிகளுக்குச் சுதந்திரம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. 1960 யூலை முதலாம் தேதி இரண்டு பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, சுதந்திர சோமாலிக் குடியரசாகக் குடிமக்கள் அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. ஹாஜி பசீர் இசுமாயில் யூசூப்பின் தலைமையிலான சோமாலி தேசிய அவை இத்தாலிய சோமாலிலாந்தையும், பிரித்தானிய சோமாலிலாந்தையும் இணைத்து, சோமாலியக் குடியரசை நிறுவும் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.[11]

வரலாற்றுக்கு முந்திய காலம்

லாசு கீல் என்னும் இடத்தில் உள்ள ஒட்டகம் ஒன்றைக் குறிக்கும் புதிய கற்காலப் பாறை ஓவியம்.

டோயியான், ஆர்கெய்சான் ஆகிய பண்பாடுகள் செழித்திருந்த பழைய கற்காலத்தில் இருந்தாவது சோமாலியப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.[12] ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியின் புதைக்கும் வழக்கங்கள் தொடர்பான மிகப் பழைய சான்றுகள், கிமு 4 ஆயிரவாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சோமாலியாவின் இடுகாடுகளில் இருந்து கிடைக்கின்றன.[13] வடக்கில் உள்ள சலேலோ களத்தில் கிடைத்த கற் கருவிகள், பழைய கற்காலத்தில் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தொல்லியல் பொதுமையை விளக்கும் முக்கிய தொல்பொருட்கள் என 1909 இல் சுட்டிக்காட்டப்பட்டது.[14]

மொழியியலாளர்களின் கருத்துப்படி, முதலாவது ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளைப் பேசும் மக்கள், புதிய கற்காலத்தில், அம் மொழிக் குடும்பத்தின் மூலத் தாயகமாகக் கருதப்படும் நைல் பள்ளத்தாக்கு[15] அல்லது அண்மைக் கிழக்கில்[16] இருந்து சோமாலியப் பகுதிக்குள் வந்தனர். ஆனால், வேறு சில அறிஞர்கள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிக் குடும்பம் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது எனவும் அங்கிருந்து ஏனைய இடங்களுக்குப் பரவியது எனவும் கருதுகின்றனர்.[17]

வடக்கு சோமாலியாவில் உள்ள அர்கெய்சாவின் புறப் பகுதியில் உள்ள லாசி கீல் தொல்லியல் தொகுதி ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கே காட்டு விலங்குகள், அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் போன்றவற்றைக் குறிக்கும் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.[18]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்