ஜாக்கி சான் அட்வேன்சர்ஸ்

ஜாக்கி சான் அட்வேன்சர்ஸ் என்பது அமெரிக்க அனிமேஷன் கார்ட்டூன் தொடராகும். இது ஜாக்கி சானின் கற்பனைப் பதிப்பாக நடித்ததாகும்.[1][2] அதிகமான அத்தியாயங்களில் சானின் உண்மையான சில காட்டப்படுள்ளன. இந்தத் தொடர் கிட்ஸ்' WB! என்ற தொலைக்காட்சியில் செப்டெம்பர் 9, 2000 தொடக்கம் சூலை 8, 2005 வரை மொத்த 95 அத்தியாயங்களும் ஒளிபரப்பப்பட்டன. இதில் ஒளிபரப்பப்படும் இடையில் இருந்து கார்ட்டூன் நெட்வொர்க்கிலும் ஒளிபரப்பட்டது. பின்னர் டிஸ்னியிலும் ஒளிபரப்பப்பட்டது. இது அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு MBC 3 என்ற ஒலியாளைவரிசையில் 2006 முதல் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சுட்டித் தொலைக்காட்சியிலும் மற்றும் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சின்டு தொலைக்காட்சியிலும் அவை உருவாக்கப்பட்டதிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது கார்ட்டூன் நெட்வொர்க் பாகிஸ்தானில் உருது மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பானது. இத்தொடரை மையமாக கொண்டு பல விளையாட்டு பொருட்களும் மற்றும் நிகழ்பட ஆட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தை ஜெப் மட்சுதா உருவாகியுள்ளார்.

ஜாக்கி சான் அட்வேன்சர்ஸ்
வகைஅதிரடி
சாகசம்
நாடகம்
குடும்பம்
நகைச்சுவை
அறிவியல் புனைவு
உருவாக்கம்ஜோன் ரோகேர்ஸ்
முன்னேற்றம்ஜாக்கி சான்
இயக்கம்
  • பில் வெயின்ஸ்டின்
  • பிரான்ங் ஸ்குவைலஸ்
குரல்நடிப்பு
  • ஜாக்கி சான்
  • ஜேம்ஸ் சி
  • ஸ்டேசி சான்
  • சப் சிமோனோ
  • நோ நெல்சன்
  • கிளன்சி பிரவுன்
  • அடம் பால்ட்வின்
முற்றிசைசான்ஸ் த மான்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு/ஆங்காங்
மொழிகண்டோனீயம்/ஆங்கிலம்
பருவங்கள்5
அத்தியாயங்கள்95
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • ஜாக்கி சான்
  • வில்லி சான்
  • பிரியான் கேர்ஸ்
  • சொலன் சோ
  • ஜெப் கிளைன்
  • துவான் கப்சி
ஓட்டம்23 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
  • த ஜேசி குரூப்
  • புளூ ட்ரைன் எண்டர்டெயின்மெண்ட்
  • அடிலெயிட் ப்ரொடக்சன்
  • கொலம்பியா த்ரிஸ்தர் டெலிவிசன்
  • சொனி பிக்சர்ஸ் டெலிவிசன்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 9, 2000 (2000-09-09) –
சூலை 8, 2005 (2005-07-08)
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதைச்சுருக்கம்

முதல் பருவம்

ஜாக்கி சான் என்பவர் தனது வேலையை அமைதியாக உள்நாட்டு பல்கலைக்கழகத்திற்காக செய்யும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவரும் இவரது குடும்பத்தினரும் இரகசிய சட்ட அமலாக்க அமைப்பான செக்சன் 13 (section 13) உடன் ஒத்து செயற்படுபவர்கள். இவர் பாதுகாப்புடன் கூடிய பல சக்திகளைக் கொண்ட 12 மந்திரக்கற்களை தேடும் பொழுது ஒன்றில் இடக்கு முடக்காக சிக்கிவிடுவார். இதே மந்திரக்கற்களை சின்டு எனும் அரக்கனின் வழிகாட்டலில் வல்மொன்ட் (தமிழ் மொழிபெயர்ப்பில் வால்டர் எனப்படுகிறார்.) என்பவரை தலைவராகக் கொண்ட குற்றவியல் கூட்டம் ஒன்றும் தேடுகிறது. டோரு (தமிழ் மொழிபெயர்ப்பில் பீமா எனப்படுகிறார்.) என்பவன் இக்கூட்டத்தில் இருந்து பின் ஜாக்கியுடன் இணைகிறான். அங்கிளின் உதவியாளனாகவும் ஆகிறான். ஜாக்கி சான் இகூட்டத்தை எதிர்கொண்டு மந்திரக்கற்களை பெறுவதைப் பற்றி ஒரு பருவத்தில் காட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவம்

இப்பருவத்தில் 8 அரக்கர்கள் பற்றிய அத்தியாயங்கள் காணப்படுகின்றன. இந்த 8 அரக்கர்களையும் முன்னோர்கள் மந்திரத்தை பயன்படுத்தி ஒரு சிறைக்குள் அடைகின்றனர். அதை திறக்க ஒரு மந்திரப்பெட்டியால் மட்டுமே இயலும். இப்பருவத்தில் சின்டு வல்மொன்டின் உடலில் புகுந்து வல்மொன்டைக்கட்டுப்படுத்தி வேலையாட்களைக் கொண்டு மந்திரப்பெட்டியை எடுக்கிறது. அதை வைத்து மற்ற அரக்கர்களை வெளிவரச் செய்கின்றது. ஜாக்கி சான் இவ்வரகர்களை எதிர் கொண்டு மறுபடியும் அவர்களை சிறையில் அடைப்பதை பற்றி இப்பருவத்தில் காட்டப்பட்டுள்ளது.

மூன்றாம் பருவம்

இப்பருவத்தில் எலி, காளை, சேவல், முயல், புலி, குதிரை, பன்றி, நாய், ஆடு, குரங்கு, பாம்பு ஆகிய மிருகங்களின் உடம்புகளில் மந்திரக்கற்களின் சக்திகள் காணப்படுகின்றன. இப்பருவத்தில் மாயாவி என்பவன் வல்மொன்ட்டின் வேலையாட்களை தனது வேலையாட்களாக்கி சில சக்திகளையும், ஆயுதங்களையும் வழங்குகிறான். ஜாக்கி சான் மாயாவியையும் அவனது வேலையாட்களையும் எதிர்கொண்டு மிருகங்களை செக்சன் 13 இல் ஒப்படைப்பது பற்றி இப்பருவத்தில் காட்டப்பட்டுள்ளது.

நான்காம் பருவம்

இப்பருவத்தில் 9 முகமூடிகள் பற்றிய அத்தியாயங்கள் காணப்படுகின்றன. ஜாக்கி சான் இம்முகமூடிகளை லோசன் என்பதை வைத்து அதை அணிந்தவர் முகத்திலிருந்து கழற்றி செக்சன் 13 இல் ஒப்படைப்பது பற்றி இப்பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் பருவம்

இப்பருவத்தில் 8 அரக்கசக்திகள் பற்றிய அத்தியாயங்கள் காணப்படுகின்றன. ஜாக்கி சான் இவரக்கசக்திகளை ஒவ்வொருவர் உடம்பிலிருந்தும் வெளியேற்றி அடைத்து செக்சன் 13 இடம் ஒப்படைப்பது பற்றி இந்தப்பருவத்தில் கூறப்பட்டுள்ளது.

பருவங்களும் அத்தியாயங்களும்

பருவம்அத்தியாயங்கள்ஒளிபரப்பப்பட்டது (ஐ. அ. திகதிகள்)
பருவத் தொடக்கம்பருவ இறுதி
பருவம் 1 (12 மந்திரக்கற்கள்)13செப்டம்பர் 9, 2000 (2000-09-09)மார்ச்சு 17, 2001 (2001-03-17)
பருவம் 2 (அரக்கர்கள்)39செப்டம்பர் 8, 2001 (2001-09-08)செப்டம்பர் 7, 2002 (2002-09-07)
பருவம் 3 (மந்திரக்கல் சக்தியுள்ள மிருகங்கள்)17செப்டம்பர் 14, 2002 (2002-09-14)மே 3, 2003 (2003-05-03)
பருவம் 4 (முகமூடிகள்)13செப்டம்பர் 13, 2003 (2003-09-13)பெப்ரவரி 14, 2004 (2004-02-14)
பருவம் 5 (அரக்க சக்திகள்)13செப்டம்பர் 11, 2004 (2004-09-11)சூலை 8, 2005 (2005-07-08)

கதாப்பாத்திரங்கள்

  • ஜாக்கி சான் – ஜாக்கி சான் சான் பிரான்சிஸ்கோவில் தனது அங்கிளோடு வசிக்கும் திறமையுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் அமைதியாக பொறிகளைக் கொண்ட கோட்டைகள் மற்றும் தூசு படிந்த கல்லறைகளிலும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுவருகையில் தனது பழைய நண்பரான கேப்டன் பிளாக் என்பவரால் டார்க் காண்ட் குற்றவியல் கூட்டத்திடமிருந்து 12 மந்திரக்கற்களை மீட்கும் படி கூறியதால் மனக் குழப்பங்கொள்கிறார். இவர் சக்திவாய்ந்த மந்திரவாதியான தனது அங்கிளின் உதவியுடன் மந்திரக்கற்களை மீட்கிறார்.
  • ஜேட் சான் – ஜேட் சான் என்பவர் ஆங்காங்கில் பிறந்த 12 வயது மதிக்கத்தக்க சுட்டிப் பெண் ஆவார். இவர் ஜாக்கி சானின் மச்சாள் ஆவார். இவர் தமிழ் மொழிபெயர்ப்பில் ஜூலி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் துணிவும் சாகசமும் நிறைந்த பெண் ஆவார். இவர் பலதடவைகள் அங்கிள் மற்றும் ஜாக்கியால் அறிவுரைக்கப்படுக்கொண்டேயிருப்பார். ஜாக்கி சாகசத்திற்கு செல்ல முன் வரவேண்டாம் என்று கூறியும் வந்து பிரச்சனைகளில் மாட்டிகொள்வார். இவரை பல முறை ஜாக்கி காப்பாற்றியுள்ளார். சில சமயங்களில் தனது திறமையைக் கொண்டு ஜாக்கியின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். இவருக்கு கதாநாயகர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஜேட் சான் எதிர்காலத்தில் செக்சன் 13இன் தலைவர் ஆகின்றார்.
  • அங்கிள் – அங்கிள் (சென்செய் என டோருவால் அழைக்கப்படுகிறார்) என்பவர் ஜாக்கியின் மாமாவும் ஜேட்டின் பெரிய மாமாவும் ஆவார். இவர் ஒரு சிறந்த சக்திவாய்ந்த மந்திரவாதி ஆவார். இவர் கண்டொனீயத்தில் தனது மந்திர வார்த்தைகளை உச்சரிப்பார். இவரது மந்திர வார்த்தைகள் ஆவன, ஜூ1மோ1குவாய்3குவாய்3பாய்3பி1சா2" "Jiu1mo1gwai2gwaai3 faai3 di2 zau2" (妖魔鬼怪快哋走), கண்டொனீயத்தில் இதன் கருத்து தீய அரக்கர்களும் தீய எண்ணங்கொண்ட ஆவிகளும் போய்விடு ("Evil demons and malevolent spirits, be gone!") என்பதாகும். காய்ந்த சாலமந்தாரையும் மற்றும் சபர் மீனும் இவரது மந்திர உபகரணங்கள் ஆகும். தேநீர் இவருக்குப் பிடித்ததாகும். தேநீர் அருந்தும் பொழுது தேநீர் சூடாக இருக்கிறது அல்லது குளிராக இருக்கிறது என்று கூறுவார்.
  • டோரு – டோரு என்பவர் மிகவும் உயரமாகவும், பருமனாகவும், பலசாலியாகவும் உள்ள ஒரு சப்பானிய மனிதராவார். இவரே ஜாக்கியின் கூட்டத்தில் ஜப்பானிய மொழி தெரிந்த ஒரே மனிதர் ஆவார். இவர் தமிழ் மொழிபெயர்ப்பில் பீமா என அழைக்கப்படுகிறார். இவர் டார்க் கான்ட் (Dark Hand) கூட்டத்தின் அடியாளாகவும் வல்மொன்டின் தனிப்பட்ட சேவையாளனாகவும் இருந்தவர் ஆவார். பின்னர் ஜாக்கியுடன் இணைந்து செயற்படுகிறார். இவர் ஒரு மந்திரவாதியும் அங்கிளின் உதவியாளனாகவும் விளங்குபவர் ஆவார். டோரு எதிர் காலத்தில் ஒரு சிறந்த மந்திர வாதியாக மாறுகிறார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்