ஜிம்மி ஏஞ்செல்

ஜிம்மி ஏஞ்செல் (James Crawford "Jimmie" Angel, 1899 ஆகத்து 1 - 1956 திசம்பர் 8) அமெரிக்க வானூர்தி வலவன் ஆவார். வெனிசுலாவில் உள்ள உலகிலேயே உயரமான அருவிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு ஏஞ்சல் அருவி என அழைக்கிறார்கள்.[1][2] அமெரிக்காவில் மிசூரி மாநிலத்தில் உள்ள செடார்பள்ளத்தாக்கில் பிறந்தார். 1920 களில் இவரை ஜிம்மி என்று செல்லமாக அழைத்தனர்.

வெனிசுலாவில் கிரான் சபானாவில் அவுயன்டிபு மலையின் உச்சியிலிருந்து விழும் அருவியை இவர் தாதுப் பொருள் இடத்தைத் தேடி வானூர்தியில் பறக்கும்போது 1933 நவம்பர் 18 இல் கண்டுபிடித்தார். வெளி உலகிற்கு இத்தகைய அருவி ஒன்று இருப்பது தெரியாமல் இருந்தது. ஜிம்மி ஏஞ்செல் இந்த அருவியைக் கண்டுபிடித்ததால் ஏஞ்சல் அருவி எனப் பெயர் ஏற்பட்டது.

இறப்பு

1956 ஏப்பிரல் 17 இல் பனாமாவில் வானூர்தியைத் தரையில் இறக்கும்போது, ஜிம்மி ஏஞ்சல் தலையில் அடிபட்டுக் காயமடைந்தார். அந்த நிகழ்வுக்குப் பின்னர் மாரடைப்பு நோயினாலும் நிமோனியாவினாலும் பாதிக்கப்பட்டு பனாமா நகரில் மருத்துவமனையில் காலமானார். இவருடைய இரண்டு மகன்கள் ஏஞ்சல் அருவிக்குச் சென்று ஜிம்மி ஏஞ்செல்லின் உடலின் சாம்பலை அவருடைய விருப்பத்தின் பேரில் அருவியில் தூவினார்கள்.[3]

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜிம்மி_ஏஞ்செல்&oldid=3095062" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்