ஜெய்ஸ்-இ-முகமது

ஜெய்ஸ்-இ-முகமது (Jaish-e-Mohammed, உருது: جيش محمد‎) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் போராளிக் குழு ஆகும்.[1] ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் உருதுச் சொல்லுக்கு முகம்மதின் படை என்று பெயர். இது ஒரு ஜிகாதியப் போர்க்குழுவாகும். காஷ்மீரில் இயங்கும் போராளிக் குழுக்களுள் மிகவும் கடுமையான குழு இது ஆகும்.[1][2]

ஜெய்ஸ்-இ-முகமது
جيش محمد
ஜெய்ஸ்-இ-முகமது கொடி
தலைவர்கள்மெளலானா மசூத் அசார்
செயல்பாட்டுக் காலம்2000 – தற்போது வரை
சித்தாந்தம்இசுலாமிய அடிப்படைவாதம்
தலைமையகம்பகவல்பூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது
ஆத்திரேலியா, கனடா, இந்தியா, இரசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐநா மற்றும் பிரிக்ஸ்

குறிக்கோள்

இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் காஷ்மீரைத் தனி நாடாக்குவதாகும். இதன் பொருட்டு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.[3][4]

தடை

இந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்ட போதும், அதன் செயல்பாடுகள் பாகிஸ்தானில் தொடர்கின்றன.[5] இப்போராளிக் குழுவை இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.[1]

வரலாறு

2000 ஆம் ஆண்டு மௌலானா மசூத் அசார் இக்குழுவைத் தொடங்கினார். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவர்.[1][2][6] விடுதலைக்குப் பின் ஹர்கத்-உல்-முஜாகிதீன் போராளிக் குழுவிலிருந்து விலகி, இக்குழுவை ஆரம்பித்தார். ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் இவரது ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தில் இணைந்தனர்.[2] 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் இப்போராளிக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழு தனது பெயரை குத்தாம் உல்-இஸ்லாம் (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.[1]

2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமா எனும் இடத்தில் தீவிரவாத தாக்குதல்நடந்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான தாக்குதலான இது, இந்த இயக்கத்தால் நடத்தப்பட்டதாக இந்திய அரசு தகவல்கள் வெளியிட்டது.

முக்கிய நிகழ்வுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜெய்ஸ்-இ-முகமது&oldid=3613078" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்