டிரைநைட்ரோமீத்தேன்

டிரைநைட்ரோமீத்தேன், (Trinitromethane) HC(NO2)3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய நைட்ரோ அல்கேனாகும். இது நைட்ரோபார்ம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆக்சிசனேற்றியாகவும் உள்ளது. 1857 ஆம் ஆண்டு சிசுகோவ் என்பவரால் இச்சேர்மத்தின் அம்மோனியம் உப்பாக கிடைக்கப்பெற்றது. 1900 ஆம் ஆண்டில் அசிட்டிலீனுடன் நீரற்ற நைட்ரிக் அமிலத்துடனான வினையின் மூலமாக தயாரிக்கப்படலாம் என கண்டறியப்பட்டது. இருபதாம் நுாற்றாண்டில் இந்த முறையானது தொழிற்துறையினரால் டிரைநைட்ரோமீத்தேனைத் தயாரிப்பதற்கான சிறந்த தேர்வாக மாறியது. ஆய்வகத்தில் நைட்ரோபார்மானது, மிதமான கார நிலையில், டெட்ராநைட்ரோமீத்தேனின் நீராற்பகுப்பினால் தயாரிக்கப்படுகிறது.[2]

டிரைநைட்ரோமீத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைநைட்ரோமீத்தேன்
வேறு பெயர்கள்
நைட்ரோபார்ம்
இனங்காட்டிகள்
517-25-9 N
ChemSpider10157 Y
EC number208-236-8
InChI
  • InChI=1S/CHN3O6/c5-2(6)1(3(7)8)4(9)10/h1H Y
    Key: LZGVDNRJCGPNDS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CHN3O6/c5-2(6)1(3(7)8)4(9)10/h1H
யேமல் -3D படிமங்கள்Image
  • C([N+](=O)[O-])([N+](=O)[O-])[N+](=O)[O-]
பண்புகள்
CHN3O6
வாய்ப்பாட்டு எடை151.04 கி/மோல்
தோற்றம்வெளிர் மஞ்சள் படிகங்கள்
அடர்த்தி1.469 கி/செமீ3
உருகுநிலை 15 °C (59 °F; 288 K)
44கி/100மிலி (20 °செ ல்)
காடித்தன்மை எண் (pKa)0.25 (see text)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்ஆக்சிசனேற்றி, வெடிக்கும் பொருள் (குறிப்பாக உலோகங்களுடன் தொடர்பேற்படும்போது), அரிக்கும் தன்மையுடையது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அமிலத்தன்மை

டிரைநைட்ரோமீத்தேன் நடுநிலையான மூலக்கூறாக இருக்கும்போது நிறமற்றதாக உள்ளது. இது அதிக அமிலத்தன்மை மிக்கது. எளிதில் அடர் மஞ்சள் நிற எதிர் மின் அயனியை  (NO2)3C உருவாக்குகின்றன. டிரைநைட்ரோமீத்தெனின் pKa மதிப்பானது, 20 ° செல்சியசு வெப்பநிலையில்  0.17 ± 0.02 ஆக இருக்கலாம். ஒரு மீத்தேன் வழிப்பொருட்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.[3] டிரைநைட்ரோமீத்தேன் எளிதில் நீரில் கரைந்து மஞ்சள் நிற அமிலக் கரைசலைத் தருகிறது.

இந்த எதிர்மின் அயனியானது 4n+2 அக்கெல் விதியை (Hückel rule), நிறைவு செய்து அரோமேட்டிக் தன்மையைக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளதாகத் தெரிகிறது.[4]

நைட்ரோபார்ம் உப்புகள்

டிரைநைட்ரோமீத்தேன் பிரகாசமான மஞ்சள் நிற உப்புக்களின் (அயனிச்சேர்மங்களை) தொடரை உருவாக்குகிறது. இவற்றில் பெரும்பாலான உப்புகள் நிலைத்தன்மையற்றவையாகக் காணப்படுகின்றன. மேலும், இவை வெப்பத்தாலோ அல்லது மோதலின் காரணமாகவோ வெடிக்க நேரிடலாம். நைட்ரோபார்மின் பொட்டாசியம் உப்பானது, KC(NO2)3 எலுமிச்சை மஞ்சள் நிறப் படிகத் திண்மமாகும். இது அறை வெப்பநிலையில் மெதுவாகச் சிதைவடைகிறது. 95 °செ வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும் போது வெடிக்கவும் செய்கிறது. இதன் அம்மோனியம் உப்பானது ஓரளவு நிலைத்தன்மை கொண்டுள்ளது. 200 ° செ வெப்பநிலைக்கு மேல் சடசடவென எரிந்து சாம்பலாகிறது அல்லது வெடிக்கிறது. ஐதரசீன் உப்பான, ஐதரசீனியம் நைட்ரோபார்மேட்டானது, 125 ° செ வெப்பநிலை வரையிலும் நிலைத்தன்மை வாயந்தது. இராக்கெட்டுக்கான திண்ம எரிபொருட்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆக்சிசனேற்றியாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்