துலிப் சித்திக்

துலிப் ரிசுவானா சித்திக் (Tulip Rizwana Siddiq ) (பிறப்பு 16 செப்டம்பர் 1982) இவர் ஓர் பிரிட்டிசு தொழிலாளர் கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 2015 முதல் ஆம்ப்ஸ்டெட் மற்றும் கில்பர்னுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் முன்பு 2010 முதல் 2014 வரை ரீஜண்ட்ஸ் பூங்காவிற்கான கேம்டன் லண்டன் பெருநகர உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் பொருளாதாரப் பேராசிரியர் சபீக் சித்திக்,[1][2][3][4] மற்றும் சேக் ரகானா, ஆகியோரின் மகள் ஆவார். சபிக் சித்திக் முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் சந்தித்தனர் [5] 1980 இல் கில்பர்னில் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு, ரத்வான் பாபி முஜிப் என்ற ஒரு மூத்த சகோதரர்,[6][7][8] ரூபி என்ற ஒரு தங்கை உள்ளனர்.[9] இவர் இலண்டனின் செயின்ட் ஹெலியரில் உள்ள செயின்ட் ஹெலியர் மருத்துவமனையில் [10] பிறந்தார். இவருக்கு 15 வயதாக இருந்தபோது, குடும்பம் ஆம்ப்ஸ்டெட்டுக்கு குடிபெயர்ந்தது. இவர் ஒரு முஸ்லீமாக வளர்க்கப்பட்டார். மேலும் இவரது "குடும்பம் பல கலாச்சார பிரிட்டனை ஏற்றுக்கொண்டது" என்று கூறியுள்ளார்.[11] ஒரு குழந்தையாக, இவர் நெல்சன் மண்டேலா, பில் கிளிண்டன் மற்றும் அன்னை தெரசா ஆகியோரைச் சந்தித்துள்ளார்.[12] இவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டனர் . [13]

இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பின்னர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டமும் முடிப்பதற்கு முன்பு ஆம்ப்ஸ்டெட்டில் உள்ள ராயல் பள்ளியில் பயின்றார். செப்டம்பர் 2011 இல், இவர் அரசியல், கொள்கை மற்றும் அரசாங்கத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டம் முடித்தார். [14][15][16][17]

இவரது தாய்வழி தாத்தா சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேசத்தில் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். இவரது தாயின் மூத்த சகோதரி வங்கதேச பிரதமர் சேக் அசீனா ஆவார் . 1975 ஆம் ஆண்டில், வங்காளாதேச இராணுவ வீரர்கள் வங்காளதேசத்தில் உள்ள இவரது தாயார் வீட்டிற்குள் நுழைந்து இவரது தாத்தா சேக் முஜிபுர் ரகுமானை அவரது மூன்று மகன்கள், குடும்பத்தின் 16 உறுப்பினர்களுடன் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் படுகொலை செய்தனர் . இவரது தாயின் மூத்த சகோதரியும், இவரது தாயும் ஜெர்மனிக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினர்.

நாடாளுமன்ற வாழ்க்கை

2015 பொதுத் தேர்தலில், சித்திக் 23,977 வாக்குகளுடன் ஆம்ப்ஸ்டெட் மற்றும் கில்பர்ன் தொகுதியை வென்றார். 67.3% வாக்குகளைப் பெற்றார்.[18][19][20] சூன் 2015 இல், சித்திக் ஆண்டிசெமிட்டிசத்திற்கு எதிரான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[21][22] இவர் பெண்கள் மற்றும் சமத்துவ தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[23] அதே மாதத்தில், தொழிலாளர் தலைமைத் தேர்தலில் ஜெர்மி கோர்பினை வேட்பாளராக நியமித்த 36 தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார், பின்னர் இவர் ஆண்டி பர்ன்ஹாமை ஆதரித்தார்.[24]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் [25] வர் "மதத்தை விட கலாச்சாரம் முக்கியமானது" என்று கூறினார்.[12] 2013 ஆம் ஆண்டில்,[26] இவர் கிறிஸ்டியன் வில்லியம் செயின்ட் ஜான் பெர்சி என்பவரை மணந்தார். ஜான் (பிறப்பு 1984),[27] கேம்பிரிச்சில் படித்தவர்.[28] நிறுவன இயக்குனராகவும்,[29] பிரிட்டிசு அரசு சேவை பின்னணி கொண்ட மூலோபாய ஆலோசகர் ஆவார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.[30][31][32][33][34] இவர் சனவரி 2019 இல் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.[35]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

மேலும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துலிப்_சித்திக்&oldid=3620548" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்