ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்

ஐக்கிய நாடு சபை

பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் (Parliament of the United Kingdom of Great Britain and Northern Ireland),[3] என அலுவல்முறையாகவும் பொதுவாக பிரித்தானிய நாடாளுமன்றம் (British Parliament) எனவும் அறியப்படும் இவ்வமைப்பே ஐக்கிய இராச்சியம் மற்றும் இதன் ஆட்சிப்பகுதிகளில் சட்டமியற்றக்கூடிய மிக உயரிய சட்ட அமைப்பு ஆகும். இது இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இயங்குகிறது. ஐக்கிய இராச்சியத்திலும் அதன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசியல் அமைப்புக்களுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் தலைவராக அரசர் அல்லது அரசி, (தற்போது அரசர் சார்லசு III) விளங்குகிறார்.

பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து
ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
அவைகள்பிரபுக்கள் அவை
மக்களவை
வரலாறு
உருவாக்கம்1 சனவரி 1801
12 சூன் 1215
முன்புபெரிய பிரித்தானிய நாடாளுமன்றம் & அயர்லாந்து நாடாளுமன்றம்
பின்புபுரட்சியாளர் டெயில் ஐரியன் (அயர்லாந்தில் மட்டும்)
தலைமை
சார்லசு III
8 செப்டெம்பர் 2022 முதல்
பிரபுக்கள் அவைத் தலைவர்
ஜான் மெக்ஃபால்
1 மே 2021 முதல்
மக்களவைத் தலைவர்
லிண்ட்சே ஹோய்ல்
4 நவம்பர் 2019 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
கீர் ஸ்டார்மர், தொழிற் கட்சி
4 ஏப்பிரல் 2020 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்பிரபுக்கள் அவை: 786
மக்களவை: 650
பிரபுக்கள்[1]
அரசியல் குழுக்கள்
அவைத் தலைவர்
     சபாநாயகர் பிரபு
தற்காலிகமான பிரபுக்கள்
அரசு
     கன்சர்வேட்டிவ் (267)
அலுவல்முறையான எதிர்கட்சி
     தொழிற் கட்சி (201)
மற்ற எதிர்கட்சிகள்
     தாராண்மைவாத மக்களாட்சியினர் (83)
     சனநாயக யூனியன் கட்சி (6)
     அல்ஸ்டர் யூனியன் கட்சி (2)
     பசுமைக் கட்சி (2)
     பிளைட் சிம்ரு (1)
     இணையாத (41)
இடைநிலை
     ஏனையோர் (185)
பிரபுக்கள் (சமயம் சார்ந்த)
     ஆயர் (25)
(அரசுடன் இணைந்து)
மக்களவை[2] 
அரசியல் குழுக்கள்
அவைத் தலைவர்
     சபாநாயகர்
அரசு
     கன்சர்வேட்டிவ் (356)
அலுவல்முறையான எதிர்கட்சி
     தொழிற் கட்சி (195)
மற்ற எதிர்கட்சிகள்
     இசுக்கொட்டிய தேசியக் கட்சி (44)
     தாராண்மைவாத சனநாயகம் (14)
     சனநாயக யூனியன் கட்சி (8)
     பிளயிட் சிம்ரு (3)
     சமூக ஜனநாயக மற்றும் தொழிலாளர் கட்சி (2)
     ஆல்பா கட்சி (2)
     கூட்டணிக் கட்சி (1)
     பசுமைக் கட்சி (1)
     சுயேச்சை (13)[a]
புறக்கணிப்பவர்
     சின் பெயின் (7)
தேர்தல்கள்
Last மக்களவை[2] 
election
12 திசம்பர் 2019
அடுத்த மக்களவை[2] 
தேர்தல்
24 சனவரி 2025 அன்று அல்லது அதற்கு முன்
கூடும் இடம்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
வெஸ்ட்மின்ஸ்டர் நகரம், இலண்டன்
ஐக்கிய இராச்சியம்
51°29′57.5″N 00°07′29.1″W / 51.499306°N 0.124750°W / 51.499306; -0.124750
வலைத்தளம்
www.parliament.uk

நாடாளுமன்றம் ஈரவைகளுடன், ஒரு மேலவை (பிரபுக்கள் அவை), ஒரு கீழவை (மக்களவை), அமைந்துள்ளது.[4] அரசரால் சட்டவாக்கலின் மூன்றாம் அங்கமாக விளங்குகிறார்.[5][6] பிரபுக்கள் அவையில் இருவகை உறுப்பினர்கள் உள்ளனர்: "சமயப் பிரபுக்களும்" (இங்கிலாந்து திருச்சபையின் மூத்த ஆயர்கள்), "உலகியல் பிரபுக்களும்" (பியர்கள் என அழைக்கப்படுபவர்கள்) பிரதமரின் அறிவுரைப்படி அரசரால் நியமிக்கப்படுபவர்கள்.[7] அத்துடன் 92 மரபுரிமையான பிரபுக்களும் பிரதிநிதிகளாக உள்ளனர். அக்டோபர் 2009இல் உச்ச நீதிமன்றம் துவங்கப்படும்வரை பிரபுக்கள் அவை நீதி பராமரிப்பையும் சட்டப் பிரபுக்கள் மூலம் ஆற்றிவந்தது.

காமன்சு என அழைக்கப்படும் மக்களவை மக்களாட்சி முறையில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுத்தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவையாகும்.[8] இலண்டனில் உள்ள நாடாளுமன்ற மாளிகை எனப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் தங்களுக்கான தனித்தனிக் கூடங்களில் இந்த இரு அவைகளும் கூடுகின்றன. அரசியலமைப்பு மரபின்படி பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மக்களவையின் உறுப்பினர்களாக, மிக அரிதாக பிரபுக்கள் அவை உறுப்பினர்களாக, உள்ளனர். இதனால் இந்த சட்ட அவைகளுக்கு அவர்கள் பொறுப்பானவர்களாக உள்ளனர்.

இங்கிலாந்தின் நாடாளுமன்றமும் இசுக்காட்லாந்தின் நாடாளுமன்றமும் ஒன்றிணைப்புச் சட்டங்களை நிறைவேற்றியபிறகு 1707இல் பெரிய பிரித்தானிய நாடாளுமன்றம் உருவானது. ஆனால் நடைமுறையில் இது தொடர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசுக்காட்லாந்திய எம்பிக்களையும் பியர்களையும் சேர்க்கப்பட்டனர். மேலும் 1800இல் ஒன்றிணைப்புச் சட்டத்திற்கு பெரிய பிரித்தானிய நாடாளுமன்றமும் அயர்லாந்து நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்த பின்னர் அயர்லாந்து நாடாளுமன்றம் மூடப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்றம் விரிவுபடுத்தப்பட்டது. காமன்சிற்கு 100 கூடுதல் உறுப்பினர்களும் பிரபுக்கள் அவைக்கு 32 உறுப்பினர்களும் கூட்டப்பட்டு பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உருவானது.

உலகில் முதன்முதலாக வளர்ச்சியுற்ற நாடாளுமன்றமான இது, உலகின் பல்வேறு மக்களாட்சிகளுக்கான சீர்தரமாக அமைந்ததால் "அனைத்து நாடாளுமன்றங்களின் தாயாக" அழைக்கப்படுவதுண்டு.[9]

கோட்பாட்டின்படி, உயரிய சட்ட அதிகாரம் நாடாளுமன்றத்தின் அரசருக்கு தரப்பட்டுள்ளது; நடைமுறைப்படி, அரசர் பிரதமரின் அறிவுரைப்படியே நடப்பதாலும் பிரபுக்கள் அவையின் அதிகாரம் வரையறுக்கப்பட்டிருப்பதாலும் உண்மையான அதிகாரம் மக்களவையிடமே உள்ளது.[10]

2017 சூன் 8 ஆம் நாள் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளின்படி "தொங்கு நாடாளுமன்றம்" அமைக்கப்படுகிறது. பழமைவாதக் கட்சி 318 உறுப்பினர்களுடனும், சனநாயக யூனியன் கட்சி 10 உறுப்பினர்களுடனும் இணைந்து பழமைவாதக் கட்சியின் தலைவர் தெரசா மே ஆட்சி அமைக்கிறார்.[11][12]

மேற்சான்றுகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை