நகரப் பல்கலைக்கழக சோதனை

நகரப் பல்கலைக்கழக சோதனை (டி. சி. யூ. சோதனை[1] அல்லது சி. யூ. சோதனை [2](City University test) என்றும் அழைக்கப்படுகிறது) என்பது நிறக்குருட்டினை கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு வண்ண பார்வை சோதனை ஆகும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசிகாரா சோதனையானது சிவப்பு-பச்சை பிறவி நிற குருட்டுத்தன்மையைக் கண்டறியப் பயன்படுகிறது. ஆனால் இதன் பயன்பாட்டில் பெறப்பட்ட வண்ணப் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.[3]

விளக்கம்

நகரப் பல்கலைக்கழகச் சோதனையில் அனைத்து வகையான வண்ண பார்வை குறைபாடுகளையும் கண்டறியத் தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.[4] டி. சி. யூ. சோதனையில் பார்ன்சுவொர்த் டி15 வண்ண ஒழுங்கமைப்பு சோதனையிலிருந்து பெறப்பட்டது.[2] இந்த சோதனை 10 தகடுகளைக் கொண்டுள்ளது. இதில் வெவ்வேறு வண்ணங்களில் நான்கு புறப் புள்ளிகளால் சூழப்பட்ட ஒரு மைய வண்ணப் புள்ளி உள்ளது. மையச் சாயலுக்கு மிக நெருக்கமான புள்ளியைத் தேர்ந்தெடுக்கச் சோதனைக்கு உட்படுபவரைக் கேட்கவேண்டும். நான்கு புற புள்ளிகளில், மூன்று புற நிறங்கள் புரோட்டான், டியூட்ரான் மற்றும் டிரைட்டான் குறைபாடு ஆகியவற்றில் உள்ள மைய நிறத்துடன் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.[5] நான்காவது நிறம் டி-15 வரிசையில்[2] அருகில் இருக்கும் வண்ணம் மற்றும் இது மைய நிறத்தைப் போலவே இருக்கும்.

செயல்முறை

நன்கு ஒளிரூட்டப்பட்ட அறையில், சோதனை தகடுகள் நோயாளியிடமிருந்து சுமார் 35 செ.மீ. தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும். சோதனைத் தகடுகளைக் காட்டி, எந்தப் புள்ளி மையப் புள்ளிக்கு ஒத்ததாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடும்படி நோயாளியிடம் கேட்கப்படும். ஒவ்வொரு பக்கத்திற்கும் சுமார் 3 வினாடிகள் தரப்படும். மதிப்பெண் தாளில் குறிப்பிடப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நிறக் குறைபாட்டினைக் கண்டறிய முடியும்.[6]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்