நாம் (1953 திரைப்படம்)

1953 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்
(நாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]இப்படத்தை மு. கருணாநிதி எழுத, ம. கோ. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா, மு. கருணாநிதி ஆகியோர் பங்குதாரர்களாகி உருவாக்கிய மேகலா பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது.[2]

நாம்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புயூப்பிட்டர்
மேகலா
கதைதிரைக்கதை மு. கருணாநிதி
இசைசி. எஸ். ஜெயராமன்
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
பி. எஸ். வீரப்பா
சக்ரபாணி
வி. என். ஜானகி
பி. கே. சரஸ்வதி
வெளியீடுமார்ச்சு 5, 1953
நீளம்16711 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமரன் ஒரு ஜமீன்தாரி எஸ்டேட்டின் வாரிசு, அதை தன் தாய் மரண படுக்கையில் இறக்கும் போது தெரிந்து கொள்கிறான். ஆனால், உயிலையும் அது தொடர்பான சாசனத்தையும் மலையப்பன் (பீ எஸ் வீரப்பா) மறைத்து வைத்து விடுகிறார் . மருத்துவர் சஞ்சீவியும்( எம் ஜி சக்ரபாணி )சொத்தில் கவர்வதில் ஆர்வமாக இருக்கிறார், மேலும் தனது மகளை குமரனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். அவர் விருப்பத்திற்கு மாறாக குமரன் மலையப்பனின் சகோதரி மீனாவை (வீ. என் . ஜானகி ) காதலிக்கிறான். இடையில் குமரன் சொத்து உயில் பற்றிய மீனாவின் நோக்கத்தை சந்தேகித்து, கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். நகரத்தில் வந்ததும் ஒரு குத்துச்சண்டை வீரராக களம் இறங்குகிறான் . இதற்கிடையில் மலையப்பன் குமரனின் வீட்டிற்கு தீ வைக்கிறார், தீயில் குமரன் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், மீனாவால் குமரன் காப்பாற்றப்படுகிறான் . காணாமல் போன சொத்து உயில் பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, அதே நேரத்தில், தீயில் உருகுலைந்த குத்துச்சண்டை வீரர் இரவில் சுற்றி வருவதை பேய் பற்றிய வதந்திகளுக்கு ஊரில் வழிவகுக்கிறது. இருப்பினும், இறுதியில்உண்மை வெளிப்பட்டு, காதலர்கள் மீனா - குமரன் ஒன்று சேருகின்றனர் .

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாம்_(1953_திரைப்படம்)&oldid=3958614" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்