நுவரெலியா மாவட்டம்

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்
(நுவரேலியா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நுவரெலியா மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. வடக்கே மாத்தளை மாவட்டமும், கிழக்கே பதுளை மாவட்டமும் தெற்கே இரத்தினபுரி மாவட்டமும் மேற்கே கேகாலை மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. நுவரெலியா நகரம் மாவட்டத்தின் தலைநகரமும் அதில் அமைந்துள்ள பெரிய நகரமுமாகும். இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துக்கு பிரசித்தமான பகுதிகளில் ஒன்றாகும்.

நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா தேர்தல் மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம்மத்திய மாகாணம்
தலைநகரம்நுவரெலியா
மக்கள்தொகை(2001)700083
பரப்பளவு (நீர் %)1741 (2%)
மக்களடர்த்தி410 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள்1
நகரசபைகள்2
பிரதேச சபைகள்5
பாராளுமன்ற தொகுதிகள்4
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
5
வார்டுகள்24
கிராம சேவையாளர் பிரிவுகள்

புவியியல்

கடல் மட்டத்திலிருந்து 1500 அடி தொடக்கம் 8000 வரை உயரத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்திலேயே இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகாலையும் அமைந்துள்ளது. சிவனொளிபாத மலை அமைந்துள்ள சமனல மலைத்தொடரின் பெரும்பகுதியும் நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. நுவரெலியா இலங்கையில் மொத்தப் பரப்பளவில் 2.7% இடத்தை அடைக்கிறது. மாவட்டத்தில் காணப்படும் முக்கிய மலைகளின் உயரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.[1]

மலைஉயரம் (அடி)உயரம் (மீட்டர்)
பீதுருதாலகாலை82812524
கிரிகல்பொத்தை78572395
தொடுலபலை77412359
சமனல73602243
கிகிலியாமன73492240
கிரேட் செசுட்டன்72582212
அக்கலை71272172
கொனிகல்71142168
வன் டிரீ இள்68902100
அவுமுள்ளே67572060
ரன்கந்தை60881856
கொட்டகித்துல60441842
கொட்டபொல57571755
தொடங்கொடை45091374

வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நுவரெலியாவை சிறிய இங்கிலாந்து என அழைத்தனர். இவர்களின் ஆட்சியின் போது நுவரெலியா உல்லாசப் பிரயாண, வர்த்தக மையமாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, இராமாயணத்துடனும் இப்பகுதி தொடர்புடையது என்பதும், குவேனி துரத்தப்பட்டப் பின்னர் தனது இரு குழந்தைகளுடன் இங்கே வசித்தார் என்பது தொன்நம்பிக்கையாகும். துட்டகைமுனு தனது இளமைக்காலத்தில் கொத்மலையில் வசித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது.

உள்ளூராட்சி

இம்மாவட்டம் நுவரெலியா-மஸ்கெலியா, கொத்மலை, அங்குரன்கெத்தை, வலப்பனை ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. நிர்வாக பிரிவுகளைக் கருதும் போது, நுவரெலியா, கொத்மலை, அங்குரன்கெதை, வலப்பனை, அம்பகமுவ ஆகிய ஐந்து வட்டாரச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவ்வட்டாரச் செயலளார் பிரிவுகள் மேலும் 491 ஊருழியர் பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.மாவட்டத்தின் நிர்வாக, உள்ளூராட்சி அமைப்பு கீழ் வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.[2]

வட்டச் செயலாளர் பிரிவுபரப்பளவு (ச.கி.மீ.)ஊரூழியர் பிரிவுகள்உள்ளூராட்சி பிரிவுகள்
மாநகரசபை(கள்)நகரசபை(கள்)பிரதேச சபை(கள்)
கொத்மலை219.7961
அங்குரன்கெதை231.01311
வலப்பனை303.61251
அம்பகமுவா477.86711
நுவரெலியா488.472111
மொத்தம்1720.5491125

உள்ளூராட்சியை கருத்திற் கொள்ளும் போது நுவரெலியா மாநகரசபையும் ஹட்டண்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துலை நகரசபை ஆகிய இரண்டு நகரசபைகளும் நுவரெலியா, கொத்மலை, அங்குரன்கெதை, வலப்பனை, அம்பகமுவ ஆகிய ஐந்து பிரதேச சபைகளும் காணப்படுகின்றன.

மக்களியல்

மாவட்ட மக்கள் தொகையில் 57.1% தமிழர்களாவர் (இலங்கைத் தமிழர் 6.5%, இந்தியத் தமிழர் 50.6%) இவர்களில் 93.1 சதவீதமான மக்கள் தேயிலைத் தோட்டங்களில் வசிக்கின்றனர். மாவட்ட தமிழர்களில் 77 சதவீதத்தினர் தேயிலை தோட்டங்கள் பெரும்பான்மையாக காணப்படும் நுவரெலியா, அம்பகமுவா பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்றனர். மாவட்டத்தில் 40.2 சதவீததினர் சிங்களவராவர். இவர்களில் 85 சதவீதத்தினர் கிராமத்தில் வசிக்கின்றனர்.[3]

நுவரெலியா மாவட்ட இனக்குழுக்கள்(2007)
மக்கள்தொகைசதவீதம்
சிங்களவர்
40.2%
தமிழர்
6.5%
இந்தியத் தமிழர்
50.61%
இலங்கை சோனகர்
2.4%
ஏனைய
0.00%

நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்

நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் பல முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. அவை இங்கே பட்டியலிடப்படுகின்றன.

படத்தொகுப்பு

ஆதரங்கள்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நுவரெலியா_மாவட்டம்&oldid=3480349" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்