பட்டாகிராம் மாவட்டம்

பட்டாகிராம் மாவட்டம் (Battagram) (பஷ்தூ: بټګرام ولسوالۍ, உருது: ضلع بٹگرام‎) பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4] இதன் நிர்வாகத் தலைமையிடம் பட்டாகிராம் நகரம் ஆகும். பட்டாகிராம், கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடகிழக்கே கிலோ மீட்டர் தொலைவிலும்; மன்செராவுக்கு வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 1301 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் மலைகளால் சூழ்ந்துள்ளது. 2005 பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் போது இம்மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

பட்டாகிராம்
மாவட்டம்
மேல்:பட்டாகிராம் ஊரின் காட்சி
கீழ்: மதராசா
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
ஆள்கூறுகள்: 34°25′N 73°06′E / 34.41°N 73.1°E / 34.41; 73.1
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டுசூலை 1993
தலைமையிடம்பட்டாகிராம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்1,301 km2 (502 sq mi)
ஏற்றம்
1,038 m (3,406 ft)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்4,76,749
 • அடர்த்தி370/km2 (950/sq mi)
நேர வலயம்ஒசநே5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டெண்
21040
Area code0997
தாலுகாக்கள்2
இணையதளம்battagram.kp.gov.pk

அமைவிடம்

பட்டாகிராம் மாவட்டத்தின் வடக்கில் கொலை-பாலாஸ் மாவட்டம், கிழக்கில் மன்செரா மாவட்டம், தெற்கில் தோர்கர் மாவட்டம், மேற்கில் சாங்லா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 476,749 ஆகும். அதில் ஆண்கள் 238,402 மற்றும் பெண்கள் 238,312 உள்ளனர். எழுத்தறிவு 36.31% கொண்டுள்ளது. 100% விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 161 பேர் மட்டுமே உள்ளனர்.[1]பஷ்தூ மொழி 82.19%, இண்டிகோ மொழி 2.87% மற்றும் 14.32% மகக்ள் பிற பழங்குடி மொழிகள் பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் அல்லாய் தாலுகா மற்றும் பட்டாகிராம் தாலுகா என இரண்டு தாலுகாக்கள் கொண்டுள்ளது. மேலும் 20 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது. [5]

மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்

கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

  • 1981 District Census report of Mansehra. District Census Report. Vol. 23. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1983.
  • 1998 District Census report of Batagram. Census publication. Vol. 18. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்