பவுதவுமதா கேபே

பவுதமதா கேபே (Fatoumata Kébé) (பிறப்பு: 1986) ஒரு பிரெஞ்சு வானியற்பியலாளரும் கல்வியாளரும் ஆவார். இவர் விண்வெளிச் சிதிலங்களில் புலமை வாய்ந்தவர் ஆவார். இவர் 2018 இல் உலகில் மிகவும்செல்வாக்குள்ள பிரெஞ்சு நபராக வேனிட்டி பேர் இதழால் பெயரிடப்பட்டுள்ளார்.

பவுதவுமதா கேபே
Fatoumata Kébé
பிறப்புமான்டிரியூல் சீய்ன்-செயிண்ட்-தெனிசு
படித்த கல்வி நிறுவனங்கள்பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவிண்வெளி சிதிலங்கள்

இளமையும் கல்வியும்

கேபே சீய்ந்செயிண்ட்-தெனிசில் உள்ள மாண்டிரியூலில் பிறந்து நாயிசி-லெ-செக் நகரில் வளர்ந்துள்ளார். இவர் சிறுமியாக இருந்தபோதில் இருந்தே விண்வெளிபால் ஈர்க்கப்பட்டுள்ளார்.[1] எட்டு அகவைலேயே இவர் தன் தந்தையின் வானியல் களஞ்சியத்தைக் கண்டுள்ளார்.[2] இவருக்குக் காரிக்கோள் மிகவும் பிடித்த கோளாகும்.[3]

இவர் பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் பாய்ம இயக்கவியலில் தன் முதுவர் ஆய்வை மேற்கொண்டார்.[4] இவர் தன் கல்வியின்போதே பல வேலைகளில் பணியாற்றியுள்ளார்.[5] இவர் விண்வெளிச் சிதிலங்களில் தன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இவர் அவற்றின் துண்டாக்கத்தையும் இயக்கத்தையும் கண்காணித்துள்ளார்.[1] இவர் பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகத்திலும் விண்வெளி இயக்கவியல் நிறுவனத்தின் வான்காணகத்திலும் எப்பிமெரிடெசு கணிப்பிலும் பணிபுரிந்தார்.[6]இவர் தோக்கியோ பல்கலைக்கழகத்தில் ஓராண்டுக்கு விண்வெளிப் பொறியியலில் ப்யிற்சி பெற்ர்ர். அப்போது இவர் சிறு விண்கலக் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளார்.[7]

இவர் இணைந்த சூழல், எனும் திட்டத்தை தொடங்கினார். இதன்வழி இவர் மிகை வேளாண்மையால் சுற்றுச்சூழல் சீரழியாமல் பாதுகாக்க அஞ்சல்வழிமுறையைப் பின்பற்றி மகளிரை வெற்றிகாணச் செய்தார்.[7][8] இவர் மண்ணின் வறட்சிநிலையைக் கண்காணிக்கும் சூரியத் திறன் கொண்டியங்கும் உணரிகளை வடிவமைத்து அவைதரும் தகவல்களை அவ்வப்போது உழவர்களுக்கு குறுஞ்செய்திகளால் அறிவித்தார்.[7][9] இந்தத் திட்டம் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் இளமகளிருக்கான புதுமைபுனைவாளர் அறைகூவல் நல்கையைப் பெற்றது.[7]இவருக்கு நாகரிகங்களுக்கான ஐ.நா. கூட்டமைப்பு ஆய்வுநல்கை வழங்கியது. [7]

இவர் 2016 இல் தன் முனைவர் ப்ட்ட்த்தை, Etude de l’influence des incréments de vitesse impulsionnels sur les trajectoires de débris spatiaux, எனும் தலைப்பில் பெற்றார்.[10][11] இவர் நாசா உள்ளகப் பணியாளர் ஆவார். இவர் அப்போது பன்னாட்டு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பன்னாட்டு விண்வெளிப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.[12]

வாழ்க்கைப்பணி

இன்னும் மறைக்கவேண்டாம் எனும் பன்னாட்டு வருகைதரு தலைமைத் திட்டத்தின் 21 ஆம் நூற்றாண்டு பாக்சு நிகழ்ச்சியில் 2017 இல் கேபே

இவர் 2015 இல் விண்வெளிசார் மங்கையர், மகளிர் கண்காட்சியில் கலந்து கொண்டார்.[13] இந்தக் கண்காட்சி பாரீசில் Musée des Arts et Métiers அரங்கில் நடந்தது.[14] இவர் இருமுறை Le ciel est un menteur, L'Astronomie, ma passion எனும் தலைப்புகளில் உரையாற்றியுள்ளார்.[15][16]இவர் பெண் வான், விண்வெளி வட்டமேசை மாநாட்டுக்கு ஐரோப்பிய விண்வெளி முகமையால் அழைக்கப்பட்டார்.[17]இவர் 2017 ஆம் ஆண்டின் இப்போதே மாற்றுக எனும் பன்னாட்டு மாநாட்டில் முதன்மைச் சிறப்புரையை ஆற்றினார்.[18] இவர் 2017 அக்தோபரில் ஐக்கிய அமெரிக்க அரசு துறை பன்னாட்டு வருகைதரு தலைமைத் திட்டத்துக்குத் தேர்வானர்.[19]

> இவர் 2017 அக்தோபரில் ஐக்கிய அமெரிக்க அரசு துறை பன்னாட்டு வருகைதரு தலைமைத் திட்டத்துக்குத் தேர்வானர்.[20]இவர் 2018 மார்ச்சில் நடந்த கிளேமர் காணொலி பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[21] இவர் e பெண் அறிவியலாளர்கலும் ஆளுமைகளும். அடங்கிய கிரேசியா திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.[22] இவர் 2018 இல் உலகில் மிகவும்செல்வாக்குள்ள பிரெஞ்சு நபராக வேனிட்டி பேர் இதழால் பெயரிடப்பட்டுள்ளார்.[23]

எப்பிமெரிடெசு

ஆராய்ச்சியில் ஈடுபடுவதோடு மட்டுமின்றி, கேபே வானியல், இயற்பியல் அறிவை அணுகிப் பெறும் வழிவகைகளை மேம்படுத்தும் பரப்புரைகளையும் மேற்கொள்கிறார்.[4] இவர் 2017 இல் பிரான்சு இண்டெர் நிகழ்ச்சியில் தோன்றினார்.[24] கேபே வாய்ப்பில்லாத பின்னணியில் இருந்து படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களூக்கு வானியலைக் கற்பிக்கும் வகுப்புகளுக்கேற்ற எப்பிமெரிடெசு எனும் திட்டத்தை வகுத்துள்ளார்.[7][24] இவர் 12 முதல் 15 அகவை மாணவருக்குக் கல்வி கற்பிக்கிறார்.[2] இவர் சீய்ன்-செயிண்ட்-தெனிசு, போபிகினி, வில்லிதனேயூசு ஆகிய கல்லூரிகளுடன் இணைந்து பணிபுரிகிறார் .[25] இவர் 2018 இல் பமாக்கோவில் எப்பிமெரிடெசு நிகழ்ச்சியைத் தொடங்கினார்.[12] இந்தத் திட்டத்துக்கு இவர் பிரெஞ்சு அறக்கட்டளையில் இருந்து நிதிநல்கை பெறுகிறார்.[12]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பவுதவுமதா_கேபே&oldid=3951396" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்