பாசிர் மாஸ் தொடருந்து நிலையம்
பாசிர் மாஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Pasir Mas Railway Station மலாய்: Stesen Keretapi Pasir Mas) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டம், பாசிர் மாஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாசிர் மாஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. அத்துடன் இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது.
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||||||||||||
பாசிர் மாஸ் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | பாசிர் மாஸ், பாசிர் மாஸ் மாவட்டம், கிளாந்தான், மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6°02′34″N 102°08′33″E / 6.04278°N 102.14250°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 1 தீவு மேடை | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம்: RM 2.00 | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
இந்த நிலையம் பயன்படுத்தப்படாத முந்தைய ரந்தாவ் பாஞ்சாங் வழித்தடத்தின் இடைமாற்று நிலையமாகவும் உள்ளது. அசல் தொடருந்து நிலையத்திற்குப் பதிலாக ஒரு புதிய தொடருந்து நிலையம் சூலை 2008-இல் கட்டி முடிக்கப்பட்டது.[1]
பொது
பாசிர் மாஸ் நகரில் இருந்து கோலாலம்பூர் மாநகருக்கு தொடருந்து சேவை உள்ளது. இருப்பினும் அந்தச் சேவை கிம்மாஸ் நகரில் இருந்து தொடங்குகிறது. பாசிர் மாஸ் நகரில் இருந்து கிம்மாஸ் நகருக்குச் செல்லும் பாதையில் தெமாங்கான், தோக் உபான் போன்ற பல சிறிய தொடருந்து நிலையங்களும் நிறுத்தங்களும் உள்ளன.
இந்த பாசிர் மாஸ் தொடருந்து நிலையம், கிளாந்தானில் உள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றான கோலா கிராய் தொடருந்து நிலையத்தையும் இணைக்கிறது. பாசிர் மாஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய நிலையம் ஜெரெக் (Jerek) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையம் பெரும்பாலும் நகரப் பகுதிக்கான வணிகத் தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியா - தாய்லாந்து எல்லையைக் கடக்கும் ரந்தாவ் பாஞ்சாங் / சுங்கை கோலோக் பாலத்திற்கு மிக அருகில் உள்ளது.[2]
பாசிர் மாஸ் நகரம்
பாசிர் மாஸ் நகரின் புவியியல் அமைப்பின் காரணமாக, மலேசியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து தாய்லாந்தின் முக்கிய நுழைவாயிலாகச் செயல்படுகிறது. 1990-களின் முற்பகுதி வரை இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக இருந்தது. பின்னர் அது தானா மேராவால் முறியடிக்கப்பட்டது.
இந்த நகரம் தாய்லாந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் பாசிர் மாஸ் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.
தொடருந்து சேவைகள்
- ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து 26/27 தும்பாட்-ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து 51/52/57/60 தும்பாட்-குவா மூசாங் - (Shuttle Timur 51/52/57/60 Tumpat–Gua Musang)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து 55/56 தும்பாட்-தாபோங் - (Shuttle Timur 55/56 Tumpat–Dabong)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் Pasir Mas Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Keretapi Tanah Melayu Official Website
- Keretapi.com - Railway Fan website பரணிடப்பட்டது 2009-03-23 at the வந்தவழி இயந்திரம்