பிசப் பன்னாட்டு விமானநிலைய நிகழ்வு, 2017

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பிசப் பன்னாட்டு விமானநிலையத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். 21 ஜூன் 2017 அன்று விமான நிலையத்தின் இரண்டாவது தளத்தில் முற்பகல் 9:45 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வின் காரணமாக அவ்விமான நிலையத்தின் பயணிகள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.[1] கத்தியால் குத்தப்பட்ட அதிகாரியின் உடல் நிலை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.[2] விமான நிலையத்திலிருந்த பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.[3]

பிசப் பன்னாட்டு விமானநிலைய நிகழ்வு, 2017
இடம்பிசப் பன்னாட்டு விமான நிலையம், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
நாள்21 ஜூன் 2017
9:45 முற்பகல்
தாக்குதல்
வகை
கத்திக்குத்து
ஆயுதம்கத்தி
இறப்பு(கள்)0
காயமடைந்தோர்1

தாக்குதல்தாரி

அமோர் தெளகி (Amor Ftouhi) எனும் தாக்குதல்தாரி இத்தாக்குதலை நடத்தியவராவார். அல்லாஹூ அக்பர் எனக் கூக்குரலிட்டு தாக்குதல் நடத்தினார்.[4] இவர் துனீசியா நாட்டைச் சார்ந்தவர். கனேடிய கடவுச் சீட்டைக் கொண்டுள்ள மொண்ட்ரியால் நகரவாசியாவார்.[5] புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்