பிருகஸ்பதி

பிருகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். [1] இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். அதனால் பிருகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. [2]

பிருகஸ்பதி
பிருகஸ்பதி
பிருகஸ்பதி
தேவநாகரிबृहस्पति
வகைதேவன், கிரகம்
இடம்தேவலோகம்
கிரகம்வியாழன் (கோள்)
மந்திரம்ஓம் பிருகஸ்பதாயே நமக
துணைதாரை

இவர் இடம் பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிருகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

இது சோதிடத்தின் படி இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம் ஆகிய இராசிகள் ஆகும். இவர் ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவராவார்.

ஆட்சி, உச்சம் பற்றிய தகவல்

நட்புஆட்சிஉச்சம்பகைநீச்சம்
மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்தனுசு, மீனம்கடகம்ரிஷபம், மிதுனம், துலாம்மகரம்

பார்வை

குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்ப்பார் என சோதிடம் சொல்கிறது.

பாலினம்

கிரகங்களில் இவர் ஆண்.

தகவல்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரகங்கள். குரு இரண்டு வகைப்படும். அவை தேவ குரு மற்றும் அசுர குரு. தேவ குரு தான் நமது குரு பகவான் ஆவார். அசுர குரு 'சுக்கிரன்' ஆவார். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறப்பில் குரு திசை நடக்கும்.

தகவல்
உலோகம்தங்கம்
ரத்தினம்புஷ்பராகம்
உடைபொன்நிற ஆடை
தூப தீபம்ஆம்பல்
வாகனம்யானை
வகுப்புஅந்தணர்

குரு திசை

குரு திசை சரியாக 16 வருடங்கள் கொண்டது.

புத்திவருடம்மாதம்நாட்கள்
குரு2118
சனி2612
புதன்236
கேது0116
சுக்கிரன்280
சூரியன்0918
சந்திரன்140
செவ்வாய்0116
ராகு2424


இவற்றையும் பார்க்கவும்

சோதிடம்

மேற்கோள்கள் ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிருகஸ்பதி&oldid=3221334" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்