புதுமைப் பதக்கம்

புதுமைப் பதக்கம் அல்லது அற்புதப் பதக்கம்(ஆங்கில மொழி: Miraculous Medal; பிரெஞ்சு மொழி: Médaille miraculeuse), என்பது கழுத்தில் அணியும், தூய அமலோற்பவ அன்னையின் உருவம் பொதிந்துள்ள ஒருவகை பதக்கமாகும். இதன் வடிவமைப்பு தூய கத்தரீன் லபோரேவுக்கு தூய கான்னி மரியா தாமே காட்சிகள் வழியாக வெளிப்படுத்தியதாக நம்பப்படுகின்றது.[1][2] இதன் முதல் வடிவம் ஆட்ரியன் வாசேத் என்னும் பொற்கொல்லரால் வடிவமைக்கப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படை நம்பிக்கையில் இது ஒன்றாக ஏற்கப்படுவதில்லை என்றபோதிலும், பல கத்தோலிக்கர்கள் இப்பதக்கத்தை அணிவதால், மரியாவின் பரிந்துரையினால் பல நன்மைகளும் கடவுளின் அருளும் கிட்டுவதாக நம்புகின்றனர்.[1][2] இறக்கும் தருவாயில் கூட ஒருவர் மனம்மாற இப்பதக்கம் உதவும் என நம்பப்படுகின்றது.

பதக்கம் அருளப்பட்ட காட்சி

1830ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி திருவருகைக்கால முதல் ஞாயிறுக்கு முந்தைய சனிக்கிழமையாகும். அன்று மாலை 5.30 மணிக்கு அருள்சகோதரிகள் அனைவரும் ஆலயத்தில் மாலை செபத்திற்காகக் கூடியிருந்த போது காத்ரீனுக்கு அன்னைமரியா தோன்றினார் என நம்பப்படும் இந்தக் காட்சி 1830ம் ஆண்டுக்கும் 1831ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் சுமார் ஆறு தடவைகள் இடம் பெற்றது.

பதக்கத்தின் அமைப்பு

புதுமைப் பதக்கம்

ஆன்னை மரியா உலக உருண்டையின் மீது நின்று கொண்டிருப்பது போன்றும், அவரை சுற்றி முட்டை வடிவத்தில் தங்கநிற எழுத்துக்களில் “பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்று எழுதப்பட்டிருக்கும். இதன் பின்புறம் மரியாவைக்குறிக்கும் M மற்றும் யேசுவின் சிலுவை ஆகியவையின் கூட்டுக்குறியும், அதனடியின் மரியாவின் மாசற்ற இதயமும், இயேசுவின் இதயமும் சித்தரிக்கப்படும். இவையனைத்தையும் சுற்றி பன்னிரு வின்மீன்கள் இருக்கும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புதுமைப்_பதக்கம்&oldid=2697868" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்