பெராக்சிநைட்ரைட்டு

பெராக்சிநைட்ரைட்டு (Peroxynitrite) ONOO என்ற வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு அயனி ஆகும். சில சந்தர்ப்பங்களில் இதை பெராக்சோநைட்ரைட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இவ்வயனி நைட்ரேட்டினுடைய (NO3) நிலைப்புத்தன்மையற்ற ஒரு உள்ளமைப்பு மாற்று வடிவம் ஆகும். இதனுடைய இணை அமிலம் உயர் வினைத்திறன் கொண்டிருந்த போதிலும், காரக் கரைசல்களில் பெராக்சிநைட்ரைட்டு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது[1][2]. ஐதரசன் பெராக்சைடுடன் நைட்ரைட்டைச் சேர்த்து பெராக்சிநைட்ரைட்டு தயாரிக்கப்படுகிறது.

பெராக்சிநைட்ரைட்டு அயனியின் அமைப்பு
பெராக்சிநைட்ரைட்டு வினையின் விளைவாக உயிரணுக்கள் தானே மடிதல் அல்லது காய்ந்து இறத்தலால் அழிகின்றன
H2O2 + NO
2
→ ONOO + H2O

பெராக்சிநைட்ரைட்டு ஓர் ஆக்சிசனேற்றி மற்றும் நைட்ரோ ஏற்றம் செய்யும் முகவராகச் செயல்படுகிறது. ஆக்சிசனேற்றப் பண்பின் காரணமாக பெராக்சிநைட்ரைட்டால் டி.என்.ஏ மற்றும் புரதங்கள் உள்ளிட்ட உயிரணுக்களில் உள்ள அணியணியான மூலக்கூறுகளை சேதப்படுத்த முடியும்.: உயராக்சைடு தனி உறுப்புகளுடன் நைட்ரிக் ஆக்சைடு தனி உறுப்பு இணைந்து பெராக்சிநைட்ரைட்டு உருவாக்கம் அமைந்திருப்பதாக நடைமுறையில் சுட்டிக் காட்டப்படுகிறது:[3][4]

O
2
+ NO → ONO
2
.

இவ்விரு தனி உறுப்புகளும் இணைவதால் உருவாகும் பெராக்சி நைட்ரைட்டு ஒரு தனி உறுப்பு அல்ல ஆனால் இதுவொரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும்.

அமில ஐதரசன் பெராக்சைடுடன் சோடியம் நைட்ரைட்டைச் சேர்த்து சூடுபடுத்தி, அதைத் தொடர்ந்து உடனடியாக சோடியம் ஐதராக்சைடு சேர்ப்பதால் ஆய்வகத்தில் பெராக்சிநைட்ரைட்டு தயாரிக்கப்படுகிறது. 302 நானோ மீட்டரில் ஒளி உட்கிரகித்தல் அளவீட்டின் படி பெராக்சிநைட்ரைட்டின் அடர்த்தி அளவு (pH 12, ε302 = 1670 M−1 cm−1) ஆகும்[5].

மின்னணு மிகுபொருளாக

ONOO கார்பன் டை ஆக்சைடுடன் ஒரு மின்னணு மிகுபொருளாக வினைபுரிகிறது. கார்பன் டை ஆக்சைடின் செறிவு 1மி.மீ ஆக இருப்பதால் ONOO அயனியுடன் விரைவாக வினைபுரிகிறது. இதனால் உடலியங்கியல் சூழலில் ONOO அயனியுடன் கார்பன் டை ஆக்சைடு வினைபுரிந்து நைட்ரசோபெராக்சிகார்பனேட்டு (ONOOCO2 ) உருவாகிறது. ONOO அயனி உருவாதலுக்கு மிகப்பரவலான மேலாதிக்கம் செலுத்தும் வழிமுறையும் இதுவேயாகும். ONOOCO2- சமப்பிளவடைந்து கார்பனேட்டு தனியுறுப்பு மற்றும் நைட்ரசன் டை ஆக்சைடு, மீண்டும் ஒரு சோடி கூண்டு தனியுறுப்புகளாக உருவாகிறது. தோராயமாக 66 சதவீதம் நேரத்தில் இவ்விரண்டு தனியுறுப்புகளும் மீள்சேர்க்கைக்கு உட்பட்டு கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரேட் ஆக உருவாகின்றன. எஞ்சியுள்ள 33% நேரத்தில் இவ்விரண்டு தனியுறுப்புகளும் கரைப்பான் கூண்டிலிருந்து தப்பித்து தனியுறுப்புகளாக மாறுகின்றன. இவ்விரண்டு விளைபொருட்களே (கார்பனேட்டு தனியுறுப்பு மற்றும் நைட்ரசன் டை ஆக்சைடு) பெராக்சிநைட்ரேட்டு சார்ந்த உயிரணு சேதத்திற்கு காரணமானவையாக நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்