பேச்சு:பௌத்த அண்டவியல்

பௌத்த அண்டவியல் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வினோத், வரலாறு படைக்கிறீர்கள்! நெஞ்சார்ந்த பாராட்டுகள்! அருமையான நெடிய கட்டுரை! --செல்வா 14:16, 5 ஜனவரி 2008 (UTC)

நன்றி. ஏதோ எனது நூறாவது கட்டுரை சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஒரே ஒரு வேண்டுகோள், தயவு செய்து எழுத்துப்பிழைகளை சரி செய்துவிடுங்கள்(ஒரு பேராசியரை பிழைதிருத்தம் செய்ய சொல்வதற்கு மன்னிக்கவும்). நான் எழுதியதால் எனது பிழைகள் எனது கண்கள் தென்படுவதே இல்லை. :-))

wi
n
d

வினோத் 14:26, 5 ஜனவரி 2008 (UTC)

முதல் நூறு கட்டுரை எழுதி முடித்ததற்கு பாராட்டுகள்! அடுத்து வரும் நூறு கட்டுரைகளுக்கு நல்வாழ்த்துகள்! உண்மையிலேயே, வினோத், இப்படி எழுத வேண்டியன மிகப்பல உள்ளன. நீங்கள் புஅத்தம் பற்றி எழுதுவது கண்டு மிகமகிழ்பவர்களில் நானொருவன். 'சடகம், திரிபிடகம் போன்ற நூல்களும் இலகுவில் தமிழில் கிடைக்குமாறு செய்தல் வேண்டும். திரிபிடகம் என்பதை நீங்கள் திரிபிடாகம் என்று எழுதியுள்ளீர்கள், ஏன் என்று விளங்கவில்லை. त्रिपिटक என்றுதானே (முக்கூடை) உள்ளது? --செல்வா 14:49, 5 ஜனவரி 2008 (UTC)

விளக்கம் சரியா?

நீங்கள் கீழ்க்காணுமாறு எழுதியிள்ளீர்கள்://பொதுவாக குறிப்பிடப்படும் ஆறு மறுபிறப்பு நிலைகளில் ஆரூப்யதாது மற்றும் ரூபதாதுவில் பிறக்கும் அனைவரும் தேவர்களாக கருதப்படுகின்றனர். எனினும் காமதாதுவில் உள்ளவர்களுக்கும் மனிதர்களுக்கு உள்ள வேறுபாடுகளை விட ஆரூப்யதாதுவில் உள்ளவர்களோடு பெரும் வேற்றுமைகள் உள்ளன. சரியாக கூறவேண்டுமெனில் காமதாதுவின் கீழ் நிலையில் உள்ளவர்களே தேவர்களாக கருதப்பட வேண்டும். இவர்களே மனித உலகத்துடன் அவ்வப்போது உறவாடுகின்றனர்.//

இது குழப்பம் தருவதாக உள்ளது. கடைசி வரி மேலுள்ள கூற்றோடு முரண்படுகின்றது என நினைக்கிறேன்.--செல்வா 14:49, 5 ஜனவரி 2008 (UTC)

பதில்கள்

திரிபிடகம் என்பதே சரி, அது எனது எழுத்துப்பிழை.

பவ சக்கரத்தில் கூறப்ப்டும் ஆறு நிலைகளிள்(தேவ,அசுர,மனுஷ்ய,பஷு,பிரேத,நரக) ரூபதாது அரூபதாது உலகத்தவர்களும் தேவர்களாகவே இங்கு கருதப்படுகின்றனர். எனினும் ரூபதாதுவின் உள்ளவர்களின் மனநிலையும் காமதாதுவினரின் மனநிலையும் வெவ்வேறு தாதுக்கள் என்ற நிலையில் மிகுந்த வேறுபாடுடையது. எனவே சரியாக கூறவேண்டுமெனில் காமதாதுவின் மேலுலகத்தை சேர்ந்தவர்களையே தேவர்கள் என அழைக்கவேண்டும். எனினும் இவ்வளவு Strictஆக பொதுவாக பின்பற்றப்படுவதில்லை.

காமதாதுவில் உள்ள தேவர்களே மனித உலகத்துடன் (இந்திரன்,குபேரன் முதலியோர்) நெருக்கமுடையவர்கள். மற்ற இரண்டு தாதுக்களில் மகாபிரம்மா மட்டும் பூமிக்கு எப்போதாவது வருவதுண்டு. ஆனால் காமதாதுவினர் இங்கு நடக்கு அனைத்தும் விடயங்களிலும் காமதாது தேவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பலர் தர்மபாலர் மற்றும் லோகபாலர் என்ற முறையில்.

விளக்கம் தெளிவாக இருப்பின். கட்டுரையில் மாற்றி விடுங்கள்

wi
n
d

வினோத் 15:14, 5 ஜனவரி 2008 (UTC)

Return to "பௌத்த அண்டவியல்" page.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்