போட்டிவிரிடீ

போட்டிவிரிடீ
Potyviridae
தீநுண்ம வகைப்பாடு
குழு:
Group IV ((+)ssRNA)
குடும்பம்:
போட்டிவிரிடீ
Potyviridae
Genera

Potyvirus
Rymovirus
Bymovirus
Macluravirus
Ipomovirus
Tritimovirus

போட்டிவிரிடீ (Potyviridae) என்பன செடிகொடிகளைத் தாக்கும் தீநுண்மங்கள். இவை வளையக்கூடிய இழைபோன்ற கோல்வடிவத் நுண்ணுருவ தீநுண்மங்கள் பரணிடப்பட்டது 2008-09-06 at the வந்தவழி இயந்திரம் (flexuous filamentous rod-shaped particles). இவற்றின் மரபணுத் தொகுதியம் (genome) ஒற்றை ஆர்.என்.ஏ நேர்வகை ஆர்.என்.ஏ-க்களால் சூழப்பட்டவை. இவையும் காப்ஃசிட் (capsid) எனப்படும் ஒற்றை தீநுண்மத்தால் குறியூட்டிய (encoded) புரதத்தால் ஆன புற உறையால் சூழப்படவை. இவையெல்லாம் உருளை வடிவ புதைவுகள் பரணிடப்பட்டது 2011-06-18 at the வந்தவழி இயந்திரம் (cylindrical inclusions) (‘pinwheels’ அல்லது முள்ளுருளி) எனப்படும் தீநுண்மப் புதைவுகளை ஏற்படுத்தத் தூண்டுகின்றன. இவை 70 கிலோடால்ட்டன் (kDa)அளவு கொண்ட, ஒற்றை தீநுண்ம மரபணு தொகுதியத்தியத்தில் இருந்து பெற்ற ஒற்றைப் புரதப் பொருளாகும்

சைட்டோமெகலோவைரசு என்பதில் உள்ள காப்ஃசிட் (capsid) எனப்படும் தீநுண்மப் புரத உறையைப் படத்தில் காணலாம். சிவப்பு நிறத்தில் கோடுகளாக காட்டப்பட்டுளவை மரபணுத் தொகுதியம். சூழ்ந்துள்ள உறை காப்ஃசிட்

மூடுபடலப் புரதத்தில் உள்ள அமினோக் காடிகளின் வரிசையைப் பொருத்து, போட்டிவிரிடீ குடும்பம் ஆறு பேரினங்களாக பகுக்கப்படுகின்றது. பைமோவைரசு என்னும் தீநுண்மம் தவிர மற்றவை எல்லாம் ஒற்றை இழை நுண்மங்கள். ஆறு பேரினங்களாவன:

  • பேரினம் Potyvirus; மாதிரி இனம்: உருளைக்கிழங்கு தீநுண்மம் ஒய்(Potato virus Y)
  • பேரினம் Rymovirus; மாதிரி இனம்: ரைகிராசு மொசெயிக் தீநுண்மம் (Ryegrass mosaic virus)
  • பேரினம் Bymovirus; மாதிரி இனம்: பார்லி மஞ்சள் மொசெயிக் தீநுண்மம்(Barley yellow mosaic virus)
  • பேரினம் Macluravirus; மாதிரி இனம்: மக்ளரா மொசெயிக் தீநுண்மம் (Mclura mosaic virus)
  • பேரினம் Ipomovirus; மாதிரி இனம்: சக்கரைவள்ளிக் கிழங்கு புள்ளிநோய்த் தீநுண்மம் (Sweet potato mild mottle virus)
  • பேரினம் Tritimovirus; மாதிரி இனம்: கோதுமை வரி மொசெயிக் தீநுண்மம் (Wheat streak mosaic virus)

போட்டிவிரிடீ குடும்பத்துள் பெரிய பேரினம்[1] போட்டிவைரசுகள் (போட்டி தீநுண்மங்கள்). இந்த பேரினத்தில் 100 உக்கும் கூடுதலானவை உள்ளன. இத்தீநுண்மங்கள் 720-850 நானோமீட்டர் நீளமுடையவை, இவை அபிடுகள் (aphids)வழி கடத்தப்படுகின்றன.

மக்ளராவைரசு என்னும் பேரினத்தில் உள்ள தீநுண்மங்கள் 650-675 நாமீ நீளம் கொண்டவை. இவையும் அபிடுகள் வழி கடத்தப்படுகின்றன.

ஐப்பொமோவைரசு என்னும் நீதுண்மம், வெள்ளை ஈ (whiteflies) என்பனவற்றால் கடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் 750-950 நாமீ நீளம் உடையவை.

டிரைட்டிமோவைரசு (Tritimovirus), ரைமோவைரசு (Rymovirus) ஆகியவை 680-750 நாமீ நீளம் உடையவை. இவை எரியோஃவைடிட் மைட் உயிரினங்கள் பரணிடப்பட்டது 2008-12-08 at the வந்தவழி இயந்திரம் (eriophydid mites) வழி கடத்தப்படுகின்றன.[2])

பைமோவைரசு (Bymovirus) மரபணு தொகுதியத்தில் இரண்டு நுண்மங்கள் உள்ளன (250, 550 நாமீ). இவை கைட்ரிட் காளான் (chytrid fungus)(Polymyxa graminis) வழி கடத்தப்படுகின்றன.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போட்டிவிரிடீ&oldid=3223116" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்