மச்சாட் மாமாங்கம்

கேரள கோயில் திருவிழா

மச்சாட் மாமாங்கம் ( மலையாளம் : മച്ചാട് മാമാഗ്ഗം) மேலும் மச்சாட் குதிரை வேலா அல்லது திருவணிக்காவு குதிரை வேலா என அழைக்கப்படுவது கேரளத்தின், திருச்சூர் மாவட்டம், வடக்காஞ்சேரிக்கு அருகில் உள்ள திருவணிக்காவு கோயில் நடக்கும் திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவானது ஐந்து தேசங்களால் (கிராமங்கள்) போட்டி முறையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. கருமாத்ரா, விருப்பக்கா, மங்கலம், பர்லிக்காடு, மணலிதாரா ஆகியவை இந்த விழாவில் கலந்து கொள்ளும் முக்கிய 5 கிராமங்கள். தெக்கும்காரா, புன்னம்பரம்பு, பனங்காட்டுக்கரா ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரம் நடத்துவதில் முன்முயற்சி எடுக்கும் தேசங்கள் ஆகும். மலையாள நாட்காட்டியின்படி கும்பத்தின் முதல் வெள்ளிக்கிழமை பரபுரப்புடன் விழா தொடங்குகிறது. அடுத்து வரவிருக்கும் செவ்வாயன்று உண்மையான திருவிழாவான வேலா அன்று வெவ்வேறு தேசங்களால் செய்யப்பட்ட மரக் குதிரைகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.

மச்சாட் மாமாங்கம்
மாமங்கத்தில் மரக் குதிரைகள்
அதிகாரப்பூர்வ பெயர்மச்சாட் மாமாங்கம்
கடைபிடிப்போர்மலையாளிகள் குறிப்பாக இந்துக்கள்
வகைகோயில் திருவிழா
அனுசரிப்புகள்கோயில் திருவிழா
நாள்கும்பம் (பிப்ரவரி) மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மரக் குதிரையுடன் (குதிரா வேலா) திருவிழா முதல் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அடுத்தநாள் விழா நிறைவடைகிறது.

நாட்டார் நம்பிக்கையின் படி, அந்த பகுதியை ஆண்ட மன்னர் யானை திருவிழாவான உத்திராளிக்காவு பூரத்துக்கு போட்டியாக உண்மையான குதிரைகளைக் கொண்டு திருவிழாவை நடத்த விரும்பினார். ஆனால் கேரளத்தில் குதிரைகள் இல்லாததாலும், குதிரைகளை வளர்க்க இயலாமல் இருந்ததால் அவர் அந்த விருப்பத்தை கைவிட்டு செயற்கை குதிரைகளுடன் கொண்டாடத் தொடங்கினார். [1] [2] [3] [4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மச்சாட்_மாமாங்கம்&oldid=3566095" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்