மனோதர்மம் (கருநாடக இசை)

மனோதர்மம் எனும் சொல், கருநாடக இசைத் துறையில் வழங்கப்பெறுவதாகும். ஒரு இசைக் கலைஞர், கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது தனது படைப்புத்திறனை முன்னேற்பாடின்றி வெளிப்படுமாறு செய்தல் (improvisation) மனோதர்மம் என்றழைக்கப்படுகிறது. இந்த மனோதர்மம், இசையிலக்கணத்திற்கு (இராகம் மற்றும் தாளம்) உட்பட்டு இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

'மனோதர்மா' எனும் சமசுகிருத சொல், 'மன ஒழுங்கமைவு' (order of the mind) எனப் பொருள்படும். இதனையே 'மனோதர்மம்' என தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

மனோதர்மத்தின் முக்கிய மூலகங்களாக நிரவல், கல்பனா சுவரம், இராக ஆலாபனை மற்றும் தனி ஆவர்த்தனம் உள்ளன. இராகம்-தானம்-பல்லவி எனும் இசைவடிவம், மனோதர்மத்தின் வெளிப்பாடாகும்.

வரலாறு

பழங்காலத்து கருநாடக இசைக் கலைஞர்கள், அவர்கள் எந்த இசைவடிவில் சிறந்து விளங்கினார்களோ அப்பெயரை அடைமொழியாகக்கொண்டு அழைக்கப்பட்டார்கள். உதாரணமாக 'பல்லவி' சேச ஐயர், 'அதான' அப்பையா, 'தோடி' சீதாராமையா போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களில் சீதாராமையா, எட்டு முழு தினங்களுக்கு தொடர்ந்து தோடி இராகத்தைப் பாடியதாகச் சொல்லப்படுவதுண்டு.

உசாத்துணை

வெளியிணைப்புகள்

  • "மனோதர்மம் என்ற சொல்லினைப் புரிந்துகொள்ள ஒரு இசை விமர்சனக் கட்டுரை". The Hindu. 2008-01-11. Archived from the original on 2008-01-16. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  • TM Krishna: Manodharma - A Lec-Dem Part One - டி. எம். கிருஷ்ணாவின் விளக்க உரைக் காணொலி (முதல் பகுதி)
  • TM Krishna: Manodharma - A Lec-Dem Part Two - டி. எம். கிருஷ்ணாவின் விளக்க உரைக் காணொலி (இரண்டாம் பகுதி)
  • TM Krishna: Manodharma - A Lec-Dem Part Three - டி. எம். கிருஷ்ணாவின் விளக்க உரைக் காணொலி (மூன்றாம் பகுதி)
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்