மிதாச்சாரம்

மிதாச்சாரம் (Mitākṣarā) என்பது யாக்ஞவல்கிய ஸ்மிருதி உரையுடன், இந்து சமயத்தினரின் பரம்பரை வாரிசுகள் மற்றும் அவர்களது சொத்துரிமைகள் குறித்த சட்ட நூலாகும். இதனை எழுதியவர் காஷ்மீரைச் சேர்ந்த மேதாதிதி எனும் சமசுகிருத அறிஞர் ஆவார். இது தாயபாகம் எனும் இந்து சமயச் சட்ட நூல் போன்றதே. இந்நூல் "இந்து பரம்பரை" என்ற கோட்பாட்டிற்கு மிகவும் பிரபலமானது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சட்டங்களை நிர்வகிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்து சமயச் சட்டங்களில் ஒன்றாக இந்நூல் கருதப்பட்டது. முழு மிதாசாரம் நூல், யாக்கியவல்க்கிய ஸ்மிருதியின் உரையுடன், ஏறத்தாழ 492 பக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளது.[1]

மிதாச்சார நூலில் மிக முக்கியமான தலைப்புகளில் சொத்து உரிமைகள், சொத்துப் பகிர்வு மற்றும் பரம்பரை ஆகியவை அடங்கும். இந்த உரை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் குடியேறத் தொடங்கிய பிறகு, இந்தியாவின் பெரும்பகுதி முழுவதும், குறிப்பாக இந்து சமயத்தினரின் பரம்பரை பற்றிய சட்ட நூலாக மாறியது.

பிரித்தானிய இந்தியாவில் தாக்கம்

தாயபாகத்துடன் மிதாச்சார நூலும், இந்திய பிரித்தானிய நீதிமன்றங்களில், இந்து சமயத்தினர் தொடர்பான சொத்து மற்றும் வாரிசுகள் வழக்குகளில் ஆதிக்கம் செலுத்தியது. வங்காளம், அசாம், ஒடிசா மற்றும் பீகாரில் உள்ள சில பகுதிகளைத் தவிர, இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில், தாயபாகம் சட்ட நூலுடன் மிதாச்சார சட்ட நூலும் செல்வாக்கு செலுத்தியது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சட்டத்தை நிர்வகிப்பதில் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே மக்களுக்கு இருந்த சட்டத்தை நிர்வகிக்க விரும்பினர். எனவே துணைக் கண்டத்தில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த பழக்கவழக்கங்களில் இந்திய மக்களிடையே உள்ள சச்சரவுகளைத் தீர்க்க உதவும் ஒரு சட்ட நூலை அவர்கள் தேடினார்கள். பெரும்பாலான வழக்குகள் சொத்து உரிமைகள் அல்லது வாரிசுரிமைப் பிரச்சனைகளை உள்ளடக்கியது.

மிதாச்சாரம் நூலில் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1810 இல் கோல்ப்ரூக் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.[11] மேலும் வாரிசுரிமைப் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆங்கிலப் பார்வையை வழங்கியது இந்த உரையின் பகுதி மட்டுமே. அந்த நேரத்தில், மிதாசாரம் ஒரு சட்ட உரையின் தகுதியைப் பெற்றது. ஏனெனில் இது இந்தியாவின் பெரும்பாலான நீதிமன்றங்களில் பரம்பரை உரிமையைப் பற்றிய நேரடி ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது.[2]

மொழிபெயர்ப்புகள்

1810 ஆம் ஆண்டில் சமசுகிருத மொழியிலிருந்த மிதாச்சாரம் நூலை ஆங்கிலத்தில் முதல் மொழிபெயர்ப்பை கோல்ப்ரூக் என்பவர் செய்தார். ஏனெனில் இந்திய மக்களிடையே ஏற்கனவே இருந்த பரம்பரை தொடர்பான "சட்டம்" பிரித்தானிய நீதிமன்றங்களில் உடனடித் தேவை இருந்தது. டபிள்யூ. மக்நாக்டன் 1829இல் மிதாச்சாரம் நூலின் இரண்டாவது மொழிபெயர்ப்பைச் செய்தார். இது நடைமுறையைக் கையாள்கிறது. இறுதியாக ஜே. ஆர். கர்புரே என்பவர் மிதாச்சாரம் நூலின் முழுமையான மொழிபெயர்ப்பை வழங்கினார்.[3]

துணை வர்ணனைகள்

விஸ்வேஸ்வரரின் சுபோதினி (1375), பாலடபத்த பயகுண்டேவின் பாலம்பத்தி (1770) உட்பட மிதாச்சாரத்தின் பல துணை வர்ணனைகள் எழுதப்பட்டது.[4] மற்றும் நந்தபண்டிதரின் பிரதிதாச்சரம். 13ஆம் நூற்றாண்டின் தெலுங்கு மொழி உரையான விக்னேஷ்வரமு மிதாச்சார நூலை அடிப்படையாகக் கொண்டது.[5]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மிதாச்சாரம்&oldid=3772662" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்