முதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்

கேரளத்தில் உள்ள முதலைப் பண்ணை

முதலை மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம் (Crocodile Rehabilitation and Research Centre) என்பது முதலைகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்கும் பூங்காவாகும், இது இந்தியாவின், கேரளத்தின், திருவனந்தபுரம் நகருக்கு அருகிலுள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான நெய்யறில் அமைந்துள்ளது. [1]

வரலாறு

முதலைப் பண்ணை

இந்த இடத்தில் சுமார் 44 சதுப்புநில முதலைகளுக்கு இடம் கொண்டதாக 1977 ஆம் ஆண்டில் ஒரு முதலை பண்ணை தொடங்கப்பட்டது. முதலைகளை இனப்பெருக்கம் செய்து அணைக்கட்டுக்கு அருகிலுள்ள நெய்யறு ஏரியில் விடுவிப்பதால் சரணாலயத்தில் முதலைகளின் எண்ணிக்கை மாறுபடும். [2] அருகிலுள்ள பழங்குடி கிராமங்களில் பிடிக்கபடும் பாம்புகள் போன்ற பிற ஊர்வனவற்றையும் இந்த சரணாலயம் பாதுகாப்பளிக்கிறது. மிக அண்மையில் இதில் ஒரு இந்திய மலைப்பாம்பு இடம்பெற்றது.

ஸ்டீவ் இர்வின் நினைவு

2007 மே மாதம் நிறுவப்பட்ட, இந்த ஆராய்ச்சி மையத்துக்கு துவக்கத்தில் ஸ்டீவ் இர்வின் தேசிய பூங்கா என்று பெயரிடப்பட்டது. மறைந்த இயற்கை ஆர்வலரும் "முதலை வேட்டைக்காரர்" என்று அழைக்கப்பட்டவருமான ஸ்டீவ் இர்வின் நினைவாக பெயரிடப்பட்டது. 2006 இல் ஒரு ஆவணப்படத்தை படமாக்கும்போது இர்வின் ஒரு வகை திருக்கைமீனால் கொல்லப்பட்டார். [3] முதலை பூங்கா ஆர்வலரான வீரரை கௌரவிக்கும் உலகின் முதல் நினைவுச்சின்னம் இதுவாகும். இர்வினை சித்தரிக்கும் ஆளுயர தகடு கேரள வனத்துறையால் பூங்காவின் வாயிலில் வைக்கப்பட்டது (அது பின்னர் அகற்றப்பட்டது). [4] இந்த மையத்தை கேரள அரசின் வனத்துறை அமைச்சர் பெனாய் விஸ்வம் திறந்து வைத்தார். [5]

சர்ச்சைகள்

2009 ஆம் ஆண்டில், இர்வின் தோட்டமானது பூங்காவிற்கு சட்டரீதியாக வழக்கு அறிவிப்பாணையை அனுப்பியது, பூங்காவானது அறிவுசார் சொத்துரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியது. மேலும் தோட்டத்தின் அனுமதியின்றி இர்வின் பெயரையும், படத்தையும் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியது. [6] இதனால் முதலை பூங்கா பெயரில் இருந்து இர்வின் பெயரை நீக்கவேண்டி வந்தது. பூங்காவின் வாயிலில் பொறிக்கப்பட்ட படமும் அகற்றப்பட்டது. [7]

முதலை தாக்குதல்கள்

2001 ஆம் ஆண்டில், அணை இடத்திற்கு அருகில் வசிக்கும் பழங்குடியினரை சதுப்பு நில முதலை தாக்கியது. [8] சில வாரங்களுக்குப் பிறகு பழங்குடிப் பெண்ணைக் கொன்றதக கருதப்பட்ட ஆண் முதலை அணைக்கு அருகே சிக்கியது.

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்