மென்பொருள் சுதந்திர நாள்

மென்பொருள் சுதந்திர நாள் (Software Freedom Day) கட்டற்ற [1] மற்றும் திறந்த மென்பொருட்களின் மீது ஆர்வம் உடைய ஒரு குழுவினரால் உருவாக்கப்பட்ட சிறப்பு நாள் ஆகும். அந்த மென்பொருளின் மூல நிரல்கள் முழுவதுமாக பயன்படுத்துபவர்க்குக் கொடுக்க வேண்டும். அவருக்கு அந்த மூல நிரல்களை மாற்றி எழுதுவதற்கு சுதந்திரம் அளிப்பதோடு அவர் மாற்றி அமைத்த அந்த மென்பொருளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவும் முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். இதையே சுதந்திரம் எனக் குறிப்பிடுகின்றனர்.

மென்பொருள் சுதந்திர தினச் சின்னம்

மென்பொருள் சுதந்திர நாள் 2004 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஏற்கப்பட்டு அதே ஆண்டில் ஆகத்து 28 ஆம் நாள் நினைவுகூரப்பட்டது. முதலாவது நிகழ்வில் ஏறத்தாழ 12 அமைப்புகள் பங்குபற்றின.[2] 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

இதை கட்டுப்பாடுகளற்ற மென்பொருள் நாள் என்றும் கூறலாம்.

இதற்கு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமெனில் மொசிலா ஃபயர் ஃபாக்சு உலாவி இலவச திறந்த நிரல் பல இயங்குதளங்களில் இயங்கக் கூடிய இணைய உலாவியாகும். குரோமியம் (ஆங்கிலம்:chromium browser) ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல வகையைச்சார்ந்த இணைய உலாவி ஆகும்.

பயனர்க்கான சுதந்திரம்

ஒரு நிரலையோ அல்லது ஒரு மென்பொருளையோ அல்லது இயக்குதளத்தையோ பயன்படுத்தும் பயனர்க்கு கீழு வரும் நான்கு சுதந்திரம் அவசியமாக கிடைக்க வேண்டும்.

  1. நிரலை பயனர் அவர்தம் பயன்பாட்டுக்கு பயன்படுத்த கட்டுப்பாடு அற்ற உரிமை.
  2. மென்பொருள், நிரல், இயக்குதளம் எப்படி செயல்படுகிறது என்று அதன் செயல்நுட்பம் அல்லது மூலநிரல் ஆராய்ந்து அவரவர் பயன்பாட்டுக்கு ஏற்ப அதனை மாற்றி அமைப்பது.
  3. இரண்டாவதாக குறிப்பிடப்பட்டு உள்ள சுதந்திரம் நடைமுறைப்படுத்த அதனுடைய மூல நிரல் மென்பொருளுடன் கொடுக்கப்படவேண்டியது மிகவும் முக்கியம். அது மட்டும் அல்லாது மாற்றி சீரமைக்க பட்ட நிரல்களை பதிவுகள் எடுக்கவும் பதிவுகள் எடுத்து மறுவிநியோகம் செய்யவும் உரிமம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.[3]
  4. மாற்றி அமைக்கப்பட்ட பதிப்புகளை விநியோகம் செய்யவும் உரிமம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்


இந்திய அரசு பயன்படுத்தும் கட்டற்ற மென்பொருள்

ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், தொலைத் தொடர்பு துறை மூலம் நிதி அளிக்கப்பட்டு தொடங்கப்பட்டது " இலவச / திறந்த மூல மென்பொருள் தேசிய வள மையம் (National Resource Centre for Free/Open Source Software -NRCFOSS) "

இந்த மையத்தின் மூலம் ஜனவரி 10 2007ஆம் ஆண்டு பாரதிய இயக்குதள தீர்வுகள் (Bharat Operating System Solutions (BOSS) [பாஸ் லினக்ஸ்] வெளியிடப்பட்டது .இந்த இயக்குதளத்தில் ஆங்கிலம் அல்லாத இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும். தற்போது அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, போடோ, உருது, காஷ்மிரி , மைதிலி, கொங்கணி, மணிப்புரி, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் பயன் படுத்த முடியும் .[4]இதன் மூலம் ஆங்கில மொழி அறியாதவர்களும் தங்கள் தாய்மொழியில் கணினியை இயக்கவும், இணையம் பயன்படுத்தவும் வழிவகை செய்து தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது

சீன அரசு பயன்படுத்தும் கைலின் இயக்குதளம்

சீன அரசு அதனிடம் உள்ள அதிவேக கணினி (supercomputer) தியான்ஹே-1 ([tianhae -1]) கைலின் லினக்ஸ் மூலம் இயங்குகிறது.இந்த கைலின் லினக்ஸ் 2010ஆம் ஆண்டு முதல் பயன் படுத்தபடுகிறது[5]இந்த கைலின் இயக்குதளம் மூலம் சி,சி++ ,போன்ற நிரல்களைப் பயன்படுத்த முடியும் .

பிரான்ஸ் நாட்டில் கட்டற்ற மென்பொருள்

பிரான்சு நாட்டின் பாராளுமன்றத்தில் உபுண்டு லினக்ஸ் 2008 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.பிரெஞ்சு நாட்டின் தேசிய காவல் படை ஓபன்ஆபீஸ் பயன்பாட்டில் அடைந்த திருப்தியாலும் விண்டோஸ் பயன்பாட்டின் செலவு காரணமாகவும் லினக்ஸ் மிகக் குறைவாகவும் நிறைவாகவும் இருந்தமையாலும் அதனை பின்பற்றவும் பயன்படுத்தவும் தொடங்கினர்.[6] [7]

ரஷ்ய நாட்டில் கட்டற்ற மென்பொருள்

ரஷ்ய அரசு 2009 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் இருக்கும் கணினிகள் லினக்ஸ் இயக்குதளம் மூலம் இயக்கப்படும் என்று 2007ஆம் ஆண்டு அறிவித்தது [8]இதன் மூலம் அவர்கள் யாருக்கும் உரிமம் கட்ட தேவை இல்லை என்ற நிலை ஏற்படும்.


தேடுபொறியில் லினக்ஸ் குறித்த தேடல்கள்

ராயல் பின்க்டோம் என்ற இணையதளம் தேடுபொறியில் உலகளவில் லினக்சின் பயன்பாட்டைப் பற்றிய ஆய்வை நடத்தியது .அதில் கிழக்கு ஆசிய நாடுகளில் பலநாடுகளில் இருந்து லினக்ஸ் பற்றி அதிகம் தேடப்பட்டதைக் கண்டறிந்தனர்.[9]
லினக்ஸ் பயனர் மற்றும் மென்பொருள் பங்குஅளிப்பவர் இடையே உலகளாவிய அளவில் மதிப்பாய்வு நடத்தப்பட்டது .அதில் இந்தியா, கியூபா, ரஷ்யா, செக் குடியரசு, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் தேடுபொறியில் தேடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .லினக்ஸ் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக பயன் படுத்தப்பட்டது என்பது தெரியவந்து உள்ளது .வடக்கு நாடுகளில் சில நாடுகளில் மட்டும் விருப்பம் அதிகமாக உள்ளது இதற்கு காரணங்கள் அங்கு வசிக்கும் மக்களின் தனி மனித வருமானம் குறைவாக இருப்பதும் கட்டற்ற மென்பொருள் இலவசமாகவும் மூலநிரல் உடன் கொடுக்கப்படுவதும் ஆகும்.

முடிவுற்ற நிகழ்வுகள் தொகுப்பு

காலம்குழுக்கள்பங்கு கொண்ட நாடுகள்மூலம்
28 ஆகஸ்ட் 200412N/Alinux.com பரணிடப்பட்டது 2013-07-30 at the வந்தவழி இயந்திரம்
10 செப்டம்பர் 200513660linux.com பரணிடப்பட்டது 2013-07-30 at the வந்தவழி இயந்திரம் SFD 2005 map
16 செப்டம்பர் 200618070SFD 2006 map
15 செப்டம்பர் 200728680SFD 2007 map
20 செப்டம்பர் 200856390SFD 2008 map
19 செப்டம்பர் 200970090SFD 2009 map
18 செப்டம்பர் 201039790SFD 2010 map
17 செப்டம்பர் 201144287SFD 2011 map
15 செப்டம்பர் 201230173SFD 2012 map
21 செப்டம்பர் 2013N/AN/ASFD 2013 map

நிகழ்வுகளுக்கான பொருளுதவி

எந்த ஒரு நிகழ்வுக்கும் பொருள் உதவி தேவை. இங்கிலாந்து நாட்டில் தலைமை அலுவலகம் கொண்டு உள்ள கனோனிகல் லிமிடெட் (canonical ltd ) என்ற மென்பொருள் நிறுவனம் உள்ளது. உபுண்டு லினக்ஸ் எனும் லினக்ஸ் இயக்குதளம் இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது .இந்த கட்டற்ற மென்பொருள் தினத்திற்கான பொருள் உதவி கனோனிகல் லிமிடெட் முதன்மை ஆதரவாளர் .மேலும் பல நிறுவனர்கள் பொருள் உதவி அளித்து வருகின்றனர்.

அறிவியல் கூடங்கள், நிறுவனங்களில் கட்டற்ற மென்பொருள் பயன்பாடு

நாசாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அங்கு இருக்கும் மடிக்கணினிகளில் விண்டோஸ் இயக்குதளத்தில் இருந்து லினக்ஸ் இயங்குதளத்திற்கு மாற்றியுள்ளது [10][11]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்