மேரி அலெக்சாண்டர் பார்க்கு

நியூசிலாந்து நாட்டுக் கலைஞர்

மேரி அலெக்சாண்டர் பார்க்கு (Mary Alexander Park) இசுக்காட்லாந்து மற்றும் நியூசிலாந்தில் வாழ்ந்த ஓர் ஓவியக் கலைஞர் ஆவார். இராயல் கிளாசுகோ நுண்கலைகள் நிறுவனம் மற்றும் நியூசிலாந்து நாட்டின் ஒடாகோ கலை சங்கம் ஆகியவற்றில் இவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்னேசியசு ரோச்சு மற்றும் இயான் லாவரி ஆகியோர் குறிப்பிட்ட சில மாணவர்களில் அடங்குவர்.

மேரி அலெக்சாண்டர் பார்க்கு
Mary Alexander Park
பிறப்பு1 ஏப்ரல் 1850
இலோனெட்டு,இசுகாட்லாந்து
இறப்பு23 அக்டோபர் 1920
துனெடின், நியூசிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்எல்'இயூலியன் அகாடமி, பாரிசு
அறியப்படுவதுஓவியம்

ஆரம்ப கால வாழ்க்கை

மேரி பார்க் 1850 ஆம் ஆண்டு ஏப்ரல் [1] மாதம் முதல் தேதியன்று இசுக்காட்லாந்தின் லோனெட்டு நகரில் பிறந்தார். இயான் பிரவுன் பார்க் (1821-1891) மற்றும் கிறிசுடினா அலெக்சாண்டர் (1821-1906) ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். மூத்த சகோதரி செசி மற்றும் இளைய சகோதரி ஆக்னசு ஆகியோர் இதர குடும்ப உறுப்பினர்களாவர். [2]

மேரிக்கு ஐந்து வயதாக இருந்தபோது குடும்பம் இசுகாட்லாந்திலிருந்து தாசுமேனியாவுக்கு குடிபெயர்ந்தது. [2]

தாசுமேனியா மற்றும் துனெடின் நகரங்களில் உள்ள தனது பெற்றோரின் பள்ளிகளில் படித்தார், அங்கு இளம் வயதிலேயே கலை திறன்களை வளர்த்துக் கொண்டார். [3]

தொழில்

1876 ஆம் ஆண்டு ஒடாகோ கலைச் சங்கத்தில் முதல் கண்காட்சி நடந்தது. [2] மேலும் ஓர் உருவப்பட ஓவியராக மேரி நன்கு அறியப்பட்டார்.

மேரி பார்க் 1880 ஆம் ஆண்டு இசுகாட்லாந்திற்கு குடிபெயர்ந்தார் [2] 20 ஆண்டுகளாக ஐரோப்பாவில் தங்கியிருந்தார், துனெடினுக்குத் திரும்புவதற்கு முன்பு பாரிசில் உள்ள ரோடோல்ஃப் இயூலியனின் தனியார் கலைப் பள்ளியான எல்' இயூலியன் அகாடமியில் நேரத்தைச் செலவிட்டார். [3] [2] இசுகாட்லாந்தில் பயிற்சியின் போது பாரிசில் சந்தித்த மேட்ச் ரோசுடன் எலன்சுபர்க்கில் ஓவியம் வரைந்தார் மற்றும் கலையை கற்பித்தார்.[2] இவர்களின் மாணவர்களில் கிளாசுகோ பாய்சு அலெக்சாண்டர் இக்னேசியசு ரோச் மற்றும் இயான் லாவரி ஆகியோர் அடங்குவர். [2]

பார்க் மற்றும் ரோசு இருவரும் அவர்களின் 7 கிழக்கு பிரின்சசு தெரு கேலரி ஆஃப் மேக்னூர் காட்சியக வீட்டிலும் பிரைடன் இசுடேசனர்சு, பெண் கலைஞர்கள் சங்கம் மற்றும் இராயல் கிளாசுகோ நுண்கலைகள் ஆகியவற்றில் காட்சிப்படுத்தினர். [2]

ரோசு மற்றும் பார்க் 1906 ஆம் ஆண்டு கிளாசுகோவிற்கு குடிபெயர்ந்தனர் மேரி பார்க் [2] நியூசிலாந்திலிருந்து திரும்பினார்.

இறப்பு

மேரி பார்க் 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் நாளன்று [2] துனெடினில் மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்