மௌண்ட் அபு வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ளது

அபு மலை வனவிலங்கு சரணாலயம் (Mount Abu Wildlife Sanctuary) இந்தியாவின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு இது ஒரு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[1] 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று சரணாலயத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என அறிவிக்கப்பட்டது.[2]

அபுமலை வனவிலங்குச் சரணாலயம்
Mount Abu Wildlife Sanctuary
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
இந்தியாவில் அமைவிடம்
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
மௌண்ட் அபு வனவிலங்கு சரணாலயம் (இந்தியா)
அமைவிடம்ராஜஸ்தான், இந்தியா
அருகாமை நகரம்அபு மலை
ஆள்கூறுகள்24°33′0″N 72°38′0″E / 24.55000°N 72.63333°E / 24.55000; 72.63333
பரப்பளவு288 சதுர கிலோமீட்டர்.
நிறுவப்பட்டது1960
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அரசு

நிலவியல்

அபு மலை வனவிலங்கு சரணாலயம் சுமார் 19 கிலோமீட்டர் அளவுக்கு நீளமும் 6 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு பீடபூமியாக பரவியுள்ளது. இராசத்தானின் உயரமான சிகரமாகக் கருதப்படும் குரு சிகரத்தில் இது 300 முதல் 1,722 மீட்டர் (984 முதல் 5,650 அடி) வரை உயரமாக இருக்கும்.[1]பாறைகள் அக்னிப் பாறை வகையாக உள்ளன. காற்று மற்றும் நீரின் வானிலை விளைவு காரணமாக, பெரிய துவாரங்கள் அவற்றில் பொதுவாக காணப்படுகின்றன.

தாவரங்கள்

மலையடிவாரத்தில் உள்ள துணை வெப்பமண்டல முள் காடுகள் தொடங்கி நீர்நிலைகள் மற்றும் உயரமான பள்ளத்தாக்குகளில் துணை வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் வரை மலர் உயிரியல் பன்முகத்தன்மையில் மிகவும் வளமாக உள்ளது. சுமார் 112 தாவர குடும்பங்கள் 449 பேரினங்களாகவும் 820 இனங்களாகவும் இங்கு பரவியுள்ளன. இவற்றில், 663 இனங்கள் இருவித்திலை தாவரங்களாகவும் 157 இனங்கள் ஒரு வித்திலைத் தாவரங்களாகவும் உள்ளன. மேலும் இந்த சரணாலயத்தில் சுமார் 81 வகையான மரங்கள், 89 வகையான புதர்கள், 28 வகையான கொடிகள் ள் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த 17 வகையான கிழங்கு தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[3]இவை தவிர அரிய மற்றும் அழிந்துவரும் இன தாவரங்கள் சிலவும் இங்கு நிறைந்துள்ளன.[4]

அபு மலை வனவிலங்கு சரணாலயம் காதியர்-கிர் உலர் இலையுதிர் காடுகள் சுற்றுச்சூழலில் உள்ளது.இராசத்தானில் உள்ள அபு மலையில் மட்டுமே பலவிதமான மந்தாரை வகைகளை பார்க்க முடியும். இந்த இடத்தில் பிரையோபைட்டுகள் மற்றும் பாசிகள் நிறைந்துள்ளன. மூன்று வகையான காட்டு ரோசாக்கள் மற்றும் 16 வகையான பெரணிகள் காணப்படுகின்ற்றன. அவற்றில் சில மிகவும் அரிதானவை. சரணாலயத்தின் தென்மேற்கு பகுதியில் மூங்கில் காடுகள் நிறைந்துள்ளன.

விலங்கினங்கள்

அபு மலை வனவிலங்கு சரணாலயத்தில் இந்திய சிறுத்தை, சோம்பல் கரடி, சாம்பார் மான், காட்டுப்பன்றி மற்றும் சிங்காரா போன்ற விலங்கினங்கள் வாழ்கின்றன.[1]காட்டுப்பூனை, சிறு இந்தியப் புனுகுப்பூனை, இந்திய ஓநாய், வரிக் கழுதைப்புலி, பொன்னிறக் குள்ளநரி, வங்காள நரி, நெடுவாற் குரங்கு, இந்திய எறும்புண்ணி, இந்திய சாம்பல்நிற கீரி, இந்திய குழிமுயல், இந்திய கொண்டை முள்ளம்பன்றி, இந்திய வெளிர் முள்ளெலி போன்ற விலங்குகளும் இங்கு வாழ்கின்றன. ஆசியச் சிங்கம் கடைசியாக 1872 ஆம் ஆண்டிலும் வங்காளப் புலி 1970 ஆம் ஆண்டிலும் காணப்பட்டுள்ளன.[5]

சாம்பல் காட்டுக் கோழி உட்பட 250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.[6][7]அரிதான பச்சை நிற தினைக்குருவி இங்கு பொதுவாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்