ரபேல் ஒப்பந்த சர்ச்சை

ரஃபேல் ஒப்பந்த சர்ச்சை இந்தியாவில் ஒரு அரசியல் சர்ச்சையாகும், இது பிரான்சின் டசால்ட் ஏவியேஷன

ரபேல் ஒப்பந்த சர்ச்சை (Rafale deal controversy) என்பது இந்திய அரசியலில் ஏற்பட்ட ஒரு ஊழல் சர்ச்சையாகும். பிரான்சு நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 36 போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்த்ததில் ஏற்பட்ட சர்ச்சையாகும் .[1][2][3][4][5][6][7][8][9][10][11] [12][13]

பின்னணி

சனவரி 31 ,2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும். இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.[14]

குற்றச்சாட்டு

முந்தைய மன்மோகன் சிங் அரசு விமானத்தை வாங்கவிருந்த விலை சுமார்ரூ.79200 கோடி. தற்போதைய நரேந்திர மோடி அரசு சுமார் ரூ.58000கோடி விலையாகும். முந்தைய ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தற்போதைய ஒப்பந்தப்படி அனைத்தும் பிரான்சு நாட்டில் தயாரிக்கப்படும். முந்தைய ஒப்பந்தத்தில், டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும். இன்றைய ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் தொழில்நுட்பம் வழங்கப்படும். இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் விமானத் துறையில் போர் விமானங்களைத் தயாரித்த அனுபவம் உள்ள நிறுவனம் ஆனால் விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் விமானங்களைத் தயாரிக்கவுள்ளது. ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும். இதுபோன்ற விஷயங்களில் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலையை ரகசியமாக வைக்கத் தேவையில்லை என்றும் காங்கிரஸ் உட்பட எதிர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்சு பிரதமர் பிரான்சுவா ஆலந்து ரிலையன்ஸ் தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு நிலை

செப்டம்பர் 2018ல் இந்திய உச்ச நீதி மன்றம் இந்த சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரனைக்கு ஏற்றுக்கொண்டு இது தொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் போரப்பட்டுள்ளது.[15] ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இந்தியக் கூட்டாளியாகத் தேர்வுசெய்ததில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ரஃபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை என்றும் கூறி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழக்கைத் தள்ளுபடி செய்தது.[16][17]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்