லியோ எசாக்கி

லியோ எசாக்கி என்று அழைக்கப்படும் ரியோனா எசாக்கி ( Esaki Reona, பிறப்பு: மார்ச் 12,1925), ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்பியலறிஞரும் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளரும் ஆவார். குறை கடத்திப் பொருள்களில் புரை ஊடுருவு மின்னோட்டம் (மின்னணுத் துளைப்பீடு) செய்யும் பணியின் போது எசாக்கி டையோடு என்பதனைக் கண்டறிந்தமைக்காக 1973 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இப்பரிசினை ஐவார் கியாவர் மற்றும் பிரையன் டேவிட் ஜோசஃப்சன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார், அவர் டோக்கியோ சுஷின் கோகியோ நிறுவனத்துடன் (தற்பொழுது சோனி என்றழைக்கபடுகிறது) இணைந்து குறைகடத்தித் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார். குறைக்கடத்தி மீ அணிக்கோவைகளின் முன்னோடியாகவும் அவர் பங்களித்துள்ளார்.[1] .

லியோ எசாக்கி
1959 இல் எசாக்கி
1959 இல் எசாக்கி
பிறப்புமார்ச்சு 12, 1925 (1925-03-12) (அகவை 99)[1]
தகைடா முரா, நகாகவாச்சி-கன், ஒசாக்கா, ஜப்பானிய அரசு
துறை
  • Solid-state physics
  • Applied physics
Alma materடோக்கியோ பல்கலைக்கழகம்
அறியப்பட்டது
பரிசுகள்

இளமை

எசாக்கி ஒசாகா மாகாணத்தின் (இப்போது ஹிகாஷியோசாகா நகரத்தின் ஒரு பகுதி) தகைடா-முராவில் பிறந்தார், கியோத்தோ நகரத்தில் வளர்ந்தார். அவர் தோஷிஷா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மூன்றாம் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பட்டம் பெற்ற பிறகு, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் (இப்போது டோக்கியோ பல்கலைக்கழகம்) இயற்பியல் பயின்றார், அங்கு அவர் அணுக் கோட்பாட்டில் ஹிடெகி யுகாவாவின் பாடத்திட்டத்தில் பயின்றார். அவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது இரண்டாம் உலகப்போரில் டோக்கியோ குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.[2] எசாக்கி தனது இளங்கலை அறிவியல் பட்டம் மற்றும் முனைவர் பட்டத்தை முறையே 1947 மற்றும் 1959 ஆம் ஆண்டுகளில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் (யுடோக்கியோ) பெற்றார்.

தொழில் வாழ்க்கை

எசாக்கி டையோடு

1N3716 ஈசாக்கி டையோடு (அளவுகோலுக்கு 0.1 "ஜம்பருடன்)
லியோ எசாக்கி ஜூன் 27,1959 அன்று ஜப்பானின் டோக்கியோவில் சோனியில் பணிபுரிகிறார்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லியோ_எசாக்கி&oldid=4008545" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்