வகேலா வம்சம்

வகேலா வம்சம் (Vaghela dynasty) (ஆட்சி: 1243–1299) என்பது மேற்கு இந்தியாவின் தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதிகளை 1243 முதல் 1304 முடிய ஆண்ட அரசகுலம். சோலாங்கி ராஜபுத்திர அரச குலத்தின் ஒரு கிளைப் பிரிவே வகேலா வம்சமாகும்.

வகேலா வம்சம்
1243–1299
தலைநகரம்தோல்கா
பேசப்படும் மொழிகள்சௌரசேனி, பிராகிருதம், சமஸ்கிருதம்
சமயம்
இந்து, சமணம்
அரசாங்கம்முடியாட்சி
• c. 1243 - c. 1262
வீர்தவாலா (விசாலா)
• c. 1262 - c. 1275
அர்சுனதேவன் (விசால்தேவன்)
• c. 1275 - c. 1297
சாரங்கதேவன்
• c. 1297-1304
இரண்டாம் கர்ணதேவன்
வரலாறு 
• தொடக்கம்
1243
• முடிவு
1299
முந்தையது
பின்னையது
[[சோலாங்கி வம்சம்]]
[[தில்லி சுல்தானகம்]]
கில்ஜி வம்சம்
[[சௌராஷ்டிரா]]

வகேலா அரச குலத்தினரின் தலைநகரம் தற்கால அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா நகரமாகும்.

தில்லி சுல்தானகம் நிறுவப்பட்டப் பின் சௌராஷ்டிர தீபகற்பத்தில் இறுதி இந்து வகேலா வம்ச இராச்சியம், வகேலா வம்சத்தின் இறுதி மன்னர் இரண்டாம் கர்ணதேவன் ஆட்சியின் போது 1299-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் சௌராஷ்டிரம் வெல்லப்பட்டு, குஜராத் பகுதிகள் அனைத்தும் தில்லி சுல்தானகத்தின் கட்டுக்குள் சென்றது. [1][2]

சாதனைகள்

வகேலா குல ஆட்சியாளர்கள் காலத்தில் அபு மலையில் தில்வாரா கோயில் மற்றும் கிர்நாரில் சமணக் கோயில்கள் எழுப்பட்டது.[3][4] மேலும் குடிநீர் தேவைக்காக, அகமதாபாத் அருகே அடாலஜ் கிராமத்தில் ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான, அழகிய அடாலஜ் படிக்கிணறு அமைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்

வகேலா வம்ச அரசர்கள்;

  • வீர்தவாலா (விசாலன்) ( 1243 - 1262)
  • அருச்சுனதேவன் (விசால்தேவன்) ( 1262 - 1275)
  • சராங்கதேவன் ( 1275 - 1297)
  • இரண்டாம் கர்ணதேவன் ( 1297-1304)

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வகேலா_வம்சம்&oldid=2644920" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்