வட்டப்பாறை அருவி

தமிழ்நாட்டு அருவி

வட்டப்பாறை அருவி (ஆங்கில மொழி: Vattaparai Falls) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி என்ற சிற்றூருக்கு (அ. கு. எண் 629852) அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட கீரிப்பாறை வனப்பகுதியில் பாயும் பழையாற்றின் ஓர் அருவியாகும். இது : 8°15.919′N 77°27.062′E / 8.265317°N 77.451033°E / 8.265317; 77.451033, 40 மீ (130 அடி), உயரத்தில் உள்ளது.[1] இது, நாகர்கோயிலில் இருந்து 25 கி.மீ. (16 மைல்) வடக்கிலும், கன்னியாகுமரியில் இருந்து 32 கி.மீ. (20 மைல்) வடமேற்கிலும் உள்ளது. இங்கு உள்ள 20 ச.கி.மீ. (7.7 சதுர மைல்) பரப்பளவுள்ள பகுதியை சரணாலயமாக மாற்றும் திட்டம் உள்ளது.[2]

கீரிப்பாறை வனப்பகுதியில் ஓடை

இந்தப் பகுதியில் சில சிறிய அருவிகள் உள்ளன. இதில் உள்ள அழகிய அருவிகளில் குறிப்பிடத்தக்கவை வட்டப்பாறை அருவி, காளிகேசம் அருவி போன்றவை ஆகும். இங்கு அருவியை அடுத்து ஒரு சிறிய காளி கோயில் உள்ளது. இந்த இடம் மிக அமைதியானதாகவும், வளர்ச்சியடையாததாகவும் உள்ளது. இங்குள்ள மழைக்காடுகளில் உள்ள சிறிய மலை ஓடைகள், கூழாங்கற்கள், தாவரங்கள் ஆகியவற்றின் அழகை கண்டு மகிழலாம். அருவியின் அனைத்து பக்கங்களும் காடுகளால் சூழப்பட்டு, விலங்குகள் நடமாட்டமும் கொண்டதாக உள்ளது. நீண்ட மாசற்ற ஓடைகளில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஓடைகளில் உள்ள நீர் மருத்துவகுணம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது ஓர் அழகான மற்றும் அமைதியான இடமாக உள்ளது. இது தற்போது கெடுவாய்ப்பாக நெரிசலான சுற்றுலாத்தலமாக மாறிவருகிறது. இந்த மாவட்டத்தில் குலசேகரம் புறநகர்ப் பகுதிக்கு அருகில், கோதையாறு செல்லும் தடத்திலுள்ள திற்பரப்பு அருவி ஒரு புகழ்வாய்ந்த அருவியாக உள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வட்டப்பாறை_அருவி&oldid=3781341" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்