வார்ப்புரு பேச்சு:நாட்கள்

ஜ, ஜு, ஜூ தமிழா. --Natkeeran 05:02, 10 டிசம்பர் 2006 (UTC)

ஐ வேறு ஜ வேறு!ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜெள

இவை 247 அடங்குமா ????  :-(

இவை தமிழ் நெடுங்கணக்கில் அடங்காது. இவை கிரந்த எழுத்துக்கள். வடமொழி செற்களை தவியில் குறைக்க எத்தனங்கள் உள்ளபோதும் வடமொழி எழுத்துக்களை குறைக்க எத்தனங்கள போதவில்லை தான்--டெரன்ஸ் \பேச்சு 11:42, 10 டிசம்பர் 2006 (UTC)
என்ன நற்கீரன், இப்படி கேட்டு கலங்க அடிச்சுட்டீங்க? உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1. உயிரும் மெய்யும் சேர்ந்து வரும் உயிர்மெய்கள் 18x12 இவை தவிர வேறு எதுவும் தமிழ் இல்லை. ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ, க்ஷ - இவை எதுவும் தமிழ் இல்லை. ஸ், ஷ, ஜ, ஹ - இவற்றோடு தமிழ் உயிரொலிகள் சேர்ந்து வரும் எதுவும் தமிழ் இல்லை. இவ்வெழுத்துக்களை கொண்டு எழுதப்படும் எதுவும் கண்டிப்பாக தமிழ்ச் சொல்லாக இருக்காது. இவை தான் thumb ruleகள்.
டெரன்ஸ், வடமொழி, பிற மொழிச் சொற்களை களைந்து எழுதும் அளவுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துக்களை களையவில்லை என்பது உண்மை தான். பிற மொழிப் பெயர்களை உச்சரிப்புத் துல்லியத்துடன் தரும் பொருட்டு இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் இது கூட தேவை இல்லையென்று நான் கருதினாலும், தனித்தமிழுக்கும் நடைமுறை தமிழுக்கும் இடையில் சில நிலைப்பாட்டை எடுக்க வேண்டி இருக்கிறது. போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக இவற்றை களைய முயற்சி செய்யலாம். இப்ப உள்ள தமிழ் விக்கி நடையே மிகைத் தமிழ் நடையாக இருக்குன்னு சில பேர் குறை சொல்றதும் கவனிக்கத்தக்கது. ஆனால், ஒன்று செய்யலாம். இந்த கிரந்த எழுத்துக்களை தவிர்த்து கட்டுரையாளர்கள் எழுதுவதை ஊக்குவிக்கலாம். யாராவது வேண்டுமென்றே தமிழ் எழுத்துகளில் இருந்து கிரந்த எழுத்துக்களுக்கு மாற்றினால், அது போன்ற தொகுப்புகளை முன்னிலைப்படுத்தலாம். ஆனால், தற்போதைக்கு தமிழ் விக்கியில் உள்ள எல்லா கிரந்த எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றுவதை தவிர்க்கலாம். கொஞ்ச காலத்துக்கு ஒத்தி வைக்கலாம் என்பது என் நிலை.--Ravidreams 13:17, 10 டிசம்பர் 2006 (UTC)

பெப்ரவரி

பெப்ரவரி மாதத்தில் எப்பொழுது 30 நாட்கள் உள்ளன?Skumarla 23:20, 21 ஏப்ரல் 2007 (UTC)

ஆங்கில விக்கிபீடியாவில் பதில் கிடைத்தது. Skumarla 23:23, 21 ஏப்ரல் 2007 (UTC)
Return to "நாட்கள்" page.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்