வெர்னர் ஐசன்பர்க்

(வேர்னர் ஹெய்சன்பர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேர்னர் கார்ல் ஐசன்பேர்க் என்னும் முழுப்பெயர் கொண்ட வேர்னர் ஐசன்பேர்க் (வெர்னர் ஹைசன்பர்க், Werner Heisenberg, டிசம்பர் 5, 1901 - பெப்ரவரி 1, 1976) ஒரு புகழ் பெற்ற ஜெர்மானிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். குவாண்டம் பொறிமுறையைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான இவர் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயற்பியலாளர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். ஐசன்பர்க், நாஸி ஆட்சியின் கீழ் ஜெர்மன் அணு ஆற்றல் திட்டத்தின் தலைவராக இருந்தார். இத் திட்டத்தின் இயல்பும், இதில் ஐசன்பேர்க்கின் பங்களிப்பும் பெருமளவு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இவர், நவீன இயற்பியலின் மையக் கொள்கைகளுள் ஒன்றான ஐசன்பர்க் அறுதியின்மைக் கொள்கையை கண்டுபிடித்ததன் மூலமும், குவாண்டம் இயந்திரவியலின் வளர்ச்சியில் இவருடைய பங்களிப்புக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 'குவாண்டம் இயந்திரவியலைத் தோற்றுவித்தமைக்காக' 1932 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வேர்னர் ஐசன்பேர்க்
வேர்னர் கார்ல் ஐசன்பேர்க் (1901-1976). நிழற்படம் கி.பி 1927.
பிறப்பு(1901-12-05)5 திசம்பர் 1901
வூர்ஸ்பர்க், ஜெர்மனி
இறப்புபெப்ரவரி 1, 1976(1976-02-01) (அகவை 74)
மியூனிச், ஜேர்மனி
வாழிடம் செருமனி
குடியுரிமை செருமனி
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்கொட்டின்கென் பல்கலைக்கழகம் (1924)
கோப்பன்கேகன் பல்கலைக்கழகம் (1926-27)
லீப்சிக் பல்கலைக்கழகம் (1927-41)
பேர்லின் பல்கலைக்கழகம் (1941)
சென்.அண்ட்றூஸ் பல்கலைக்கழகம் (1955-56)
மியூனிச் பல்கலைக்கழகம் (1958)
கல்வி கற்ற இடங்கள்மியூனிச் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆர்னோல்ட் சொம்மர்பெல்ட்
Other academic advisorsநீல்ஸ் போர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பீலிக்ஸ் புளொச்
Edward Teller
ருடோல்ப் ஈ. பியர்ல்ஸ்
பிரீட்வார்ட் விண்டர்பேர்க்
Peter Mittelstaedt
Şerban Ţiţeica
Ivan Supek
Erich Bagge
Hermann Arthur Jahn
Raziuddin Siddiqui
Reinhard Oehme[1]
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்வில்லியம் வேர்மிலியன் ஹூஸ்டன்
குய்டோ பெக்
Ugo Fano
அறியப்படுவதுUncertainty Principle
ஐசன்பேர்க்கின் நுண்நோக்கி
Matrix mechanics
ஐசன்பேர்க் அறிவியல் முறை
Kramers-Heisenberg formula
Heisenberg group
Isospin
பின்பற்றுவோர்ராபர்ட் டோப்பெல்
கார்ல் பிரீட்ரிக் வொன் வீஸ்சாக்கர்
ஜான் பார்டீன்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1932)
குறிப்புகள்
இவர் நரம்புயிரியலாளர் மார்ட்டின் ஐசன்பேர்க்கின் தந்தையும், ஆகஸ்ட் ஐசன்பேர்க்கின் மகனும் ஆவார்

ஆய்வுப்பணி

1924-25 ஆண்டுகளில் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் உள்ள கருத்தியற்பியல் நிலையத்தில் நீல்சு போரின் வழிகாட்டுதலில் ஆய்வுகளைச் செய்தார்; பின்னர் கோட்டிங்கெனில் மாக்ஸ் போர்ன், பாசுகுவல் சோர்டான் ஆகியோருடன் இணைந்து அணி இயந்திரவியலை உருவாக்கினார். 1927ஆம் ஆண்டில் குவாண்டம் இயந்திரவியலின் கணிதவியல் அடிப்படைகளை உருவாக்கும்போது அறுதியின்மைக் கொள்கையை உருவாக்கினார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெர்னர்_ஐசன்பர்க்&oldid=2951296" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்