ஹசு யாஜ்னிக்

ஹஸ்முக்ரே வ்ராஜ்லால் யாஜ்னிக் (12 பிப்ரவரி 1938- 10 திசம்பர் 2020) ஹசு யாஜ்னிக் என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவைச் சேர்ந்த குஜராத்திய மொழி நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், நாட்டுப்புறவியலாளர் ஆவார். ராஜகோட்டையில் பிறந்து, அங்கேயே கல்வி பயின்ற இவர் குஜராத்தின் பல அரசு கல்லூரிகளில் குஜராத்திய மொழியின் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இருபது நாவல்கள், இருபத்து மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறைக் கதைகள், நான்கு இடைக்காலக் கதைத் தொகுப்புகள், நான்கு இடைக்காலப் படைப்புகளின் மீதான விமர்சனம் ,பன்னிரண்டு நாட்டுப்புறப் படைப்புகள் மற்றும் ஆறு குழந்தை இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றைப் படைத்துள்ளார்.

ஹசு யாஜ்னிக்
2018 ல் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய புத்தக திருவிழாவில் ஹசு யாஜ்னிக்
2018 ல் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய புத்தக திருவிழாவில் ஹசு யாஜ்னிக்
பிறப்புஹஸ்முக்ரே வ்ராஜ்லால் யாஜ்னிக்
(1938-02-12)12 பெப்ரவரி 1938
ராஜகோட்டை, ராஜகோட்டை மாநிலம், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 திசம்பர் 2020(2020-12-10) (அகவை 82)[1]
அகமதாபாத், குஜராத், இந்தியா
புனைபெயர்உபமன்யு, புஷ்பதன்வா, பி. காஷ்யப், வஜ்ரானந்தன் ஜானி மற்றும் ஸ்ரீதர்
தொழில்நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், நாட்டுப்புறவியலாளர்
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியன்
கல்விமுதுகலை, ஆய்வியல் நிறைஞர்
துணைவர்
ஹசுமதி வன்ரவன்தாஸ் (தி. 1964)
பிள்ளைகள்யுவ அய்யர்
நயன் யாஜ்னிக்[2]

வாழ்க்கை வரலாறு

யாஜ்னிக் , வ்ராஜ்லால் யாஜ்னிக் மற்றும் புஷ்பாபென் தம்பதியருக்கு எட்டாவது மகனாக, 12 பிப்ரவரி 1938 இல் ராஜகோட்டையில் பிறந்தார்.[3][4] இவரது தாத்தா கோவிந்த்லால் பாலிதானா மாநிலத்தின் கணக்கெடுப்பு அதிகாரியாகவும், இவரது தந்தை பிரித்தானிய நிறுவனத்தின் குமாஸ்தாவாகவும் பணியாற்றிவர்கள் ஆவர்.[3] இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை ராஜகோட்டையில் கற்றார். 1950 முதல் 1954ம் ஆண்டு காலக்கட்டத்தில், தரங்கதாராவில் கல்வி பயின்றார்.[3] இவர் 1960ம் ஆண்டில் தனது இளங்கலைப் படிப்பையும், 1962இல் குஜராத் மற்றும் சமஸ்கிருதத்தில் தனது முதுகலைப் படிப்பையும் நிறைவு செய்தார். 1972 இல் மத்தியகாலின் குஜராத்தி கம்கதா பற்றிய ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார்.[3][4]

யாஜ்னிக் தனது முதுகலைப் படிப்பை முடித்தபிறகு 1963ம் ஆண்டு சுரேந்திரநகரில் உள்ள எம்.பி.ஷா எனும் கல்லூரியில் குஜராத்திய மொழிப் பேராசிரியரைாக பணியில் சேர்ந்தார். 1964ல் விஷ்நகரில் உள்ள எம்.என். கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பின்னர், 1965 முதல் 1973 வரை அகமதாபாத்தில் உள்ள குஜராத் கல்லூரியில் பணியாற்றினார். 1965 முதல் 1979 வரை ஜாம்நகரில் உள்ள டிகேபி கல்லூரியிலும் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் 1979 முதல் 1982 வரை சுரேந்திரநகரில் உள்ள எம்.பி. ஷா கல்லூரிக்கு மீண்டும் மாறினார்.[3][4] 1986 முதல் 1996ல் பணி ஓய்வு பெறும் வரை, காந்திநகரில் உள்ள குஜராத் சாகித்ய சபையின் பதிவாளராகப் பணியாற்றினார்.[3][4][5] 1996 முதல் 2005 காலக்கட்டத்தில் அகமதாபாத்தில் மேகானி லோக்வித்யா சன்ஷோதந் பவன் என்னும் அமைப்பை நிறுவி அதன் நிர்வாக அதிகாரியாக இருந்தார்.[3][4]

கோவிட் – 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 10 திசம்பர், 2020ல் மரணமடைந்தார்.[1][2]

படைப்புகள்

யாஜ்னிக் உபமன்யு, புஷ்பதன்வா, பி. காஷ்யப், வஜ்ரானந்தன் ஜானி மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட பல்வேறு புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்: இவர் இருபது நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறைக் கதைகள், நான்கு இடைக்காலக் கதைகள், நான்கு இடைக்காலப் படைப்புகளின் மீதான விமர்சனம், பன்னிரண்டு நாட்டுப்புறப் படைப்புகள் மற்றும் ஆறு குழந்தை இலக்கியப் படைப்புகளைத் படைத்துள்ளார்.[4] இவரது முதல் சிறுகதை "லாப்சி" 1954 இல் வெளியிடப்பட்டது.[3]

தக்தா (1968), ஹைவே பர் ஏக் ராட் (1981), பிஜி சவர்னோ சூரஜ் (1982), சோல் பச்சி (1986), நீரா கௌசனி (1987) ஆகியவை எளிமையான கருப்பொருள்கள் மற்றும் மொழி கொண்ட அவரது ஜனரஞ்சக நாவல்கள்.[4] திவால் பச்சல்னி துனியா என்பது 28 அரைக்கற்பனையாக்கப்பட்ட உண்மைக் கதைகளின் தொகுப்பாகும்.[4] மந்தானி மாயா (1985), ஏக் ஜுபானிமந்தி (1985) மற்றும் பச்சித்னா பத்தாரோ (1985) ஆகியவை அவரது சிறுகதைத் தொகுப்புகள் ஆகும்.[4]

மத்தியகாலின் குஜராத்தி பிரேம்கதா (1974), மத்தியகாலின் கதாசாஹித்யா (1987), ஷமல் (1978, ஷமல் பட் மீது) மற்றும் சமஸ்கிருத கதாசாகித்யா (1997) ஆகியவை இவரது ஆய்வுப் படைப்புகள். கம்கதா (1987) என்பது இடைக்கால சமஸ்கிருதப் பிராகிருதப் படைப்புகளிலிருந்து குஜராத்திப் பெண்களின் கதைகளை உள்ளடக்கியது.[4]

குஜராத்தி லோக்கதாவோ (1996), சௌரப் வ்ரத்கதாவோ (1996), சௌரப் நவ்ரத் கர்பா (1996), சௌரப் லக்னகீத் சங்க்ரா (1999), சௌரப் பதபஜனவளி (1999), லக்னோல்லாஸ் (2001) ஆகியவை இவரால் தொகுக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியத் தொகுப்புகள் ஆகும்.[4]

அவர் இசை குறித்த சில படைப்புகளை எழுதியுள்ளார்: வயலின்-வதன் (1992), ராகதர்ஷன் (1993), ஹார்மோனியம்-வதன் (1997), பன்சாரி-வதன் (1998). இவரது கிருஷ்ணசரித் மற்றும் ராம்கதா மராத்தி, ஒடியா மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[4]

விருதுகள்

யாஜ்னிக் தனது சிறுகதைகளுக்காக 1954 இல் தர்மேந்திரசிங்ஜி கல்லூரியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவரது திவால் பச்சல்னி துனியா நூலுக்காக குஜராத்தி சாகித்ய பரிஷத்தின் பரிசைப் பெற்றார். குஜராத்னி லோக்வித்யா என்ற படைப்புக்காக குஜராத் சாகித்ய அகாடமியின் முதல் பரிசையும் பெற்றார்.[3][4]

குடும்ப வாழ்க்கை

யாஜ்னிக் 1964 இல் ஹசுமதி வன்ரவன்தாஸ் டேவை மணந்தார். அதே ஆண்டில் அவர்களது மகள் யுவா ஐயர் பிறந்தார். இவர்களுக்கு நயன் யாஜ்னிக் என்னும் மகன் உண்டு.[3] Nayan Yajnik is their son.[2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹசு_யாஜ்னிக்&oldid=3925754" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்