ஹரிதாஸ் (1944 திரைப்படம்)

சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஹரிதாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹரிதாஸ் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 10 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

ஹரிதாஸ்
இயக்கம்சுந்தர் ராவ் நட்கர்ணி
தயாரிப்புராயல் டாக்கீஸ்
கதைஇளங்கோவன்
திரைக்கதைஇளங்கோவன்
வசனம்இளங்கோவன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
என். எஸ். கிருஷ்ணன்
பி. வி. ரங்காச்சாரி
டி. ஆர். ராஜகுமாரி
என். சி. வசந்தகோகிலம்
டி. ஏ. மதுரம்
ஹரிணி
ராதாபாய்
பாடலாசிரியர்பாபநாசம் சிவன்
கலையகம்சென்ட்ரல் ஸ்டூடியோ, கோவை
வெளியீடுஅக்டோபர் 16, 1944
நீளம்10995 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 784 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.[1][2][3][4][5][6]

ஐபிஎன் லைவ் தனது எல்லாக் காலத்திற்குமான 100 சிறந்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 'ஹரிதாசையும்' சேர்த்தது.[7] கலையகத் தொழிநுட்பவியலாளர்களால் கையால் வண்ணம் தீட்டப்பட்ட ஒரே ஒரு காட்சி தவிர ஏனையவை கருப்பு-வெள்ளைப் படமாக இது முதலில் வெளியிடப்பட்டது. 1946-இல் முழு வண்ணத்துடன் மீண்டும் வெளியிடப்பட்டது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்கு முன் வெளிவந்த தியாகராஜ பாகவதரின் கடைசிப் படம் இதுவாகும்.

திரைக்கதை

மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஓடியதை ஒட்டிய விளம்பரம்

அரிதாஸ் (எம். கே. தியாகராஜ பாகவதர்) கம்மாளர் (பொற்கொல்லர்) குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் (என். சி. வசந்தகோகிலம்) சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் (எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்) உதவியுடன் ரம்பா (டி. ஆர். ராஜகுமாரி) என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான்.[8]

ரம்பையுடனான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து, அரிதாஸ் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வம் அனைத்தையும் இழந்து தனது வீட்டை ரம்பைக்கு எழுதிக் கொடுக்கிறான். ரம்பா அரிதாசையும், லட்சுமியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறாள். இருவரும் காட்டில் தூங்குகையில், அரிதாசுக்கு நித்திரை தெளிந்தபோது, அழகான மூன்று பெண்களைக் கண்டு விசாரிக்க, அவர்கள் கங்கா, யமுனா, சரசுவதி என்றும் நாள்தோறும் மகாமுனிவரைக் (பி. பி. ரெங்காச்சாரி) கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வருவதாகவும் அவருடைய மகிமையையும் சொல்கிறார்கள். அரிதாஸ் மகாமுனிவரைக் கண்டு கோபித்து அவரை உதைக்க வர முனிவர் அவனது கால்களைத் துண்டிக்கச் செய்கிறார். அரிதாசுத் தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். முனிவரின் உபதேசத்தால், தாய்ந்தந்தையரே தெய்வமென அறிந்து அவர்களைச் சந்தித்து இழந்த கால்களையும் பெறுகிறான்.[8]

நடிப்பு

நடிகர்கள்பாத்திரம்
எம். கே. தியாகராஜ பாகவதர்ஹரிதாஸ்
என். சி. வசந்தகோகிலம்லட்சுமி (ஹரிதாசின் மனைவி)
பி. பி. ரெங்காச்சாரிமகாமுனிவர்
டி. இ. கே. ஆச்சாரியாஹரிதாசின் தகப்பனார்
அண்ணாஜி ராவ்லட்சுமியின் தகப்பனார்
எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்கண்ணன்
என். எஸ். கிருஷ்ணன்ஜமீந்தார்
பி. ஆர். ராஜகோபாலய்யர்கிராமாதிகாரி
பி. ராமய்யாசாஸ்திரிசெட்டியார்
டி. ஆர். ராமசாமிமாதவிதாஸ்
டி. ஆர். ராஜகுமாரிரம்பா (தாசி)
எம். ஏ. ராதாபாய்ஹரியின் தாயார்
டி. ஏ. மதுரம்சாரதா (ரம்பாவின் சமையல்காரி)
பேபி ஹரிணிகிருஷ்ணன்

பாடல்கள்

இத்திரைப்படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[8] பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற, ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்..[8]

வரிசை
எண்
பாடல்பாடியவர்/கள்இராகம்தாளம்
1வாழ்விலோர் திருநாள் - இன்றேஎம். கே. தியாகராஜ பாகவதர்இந்தி மெட்டு-
2மன்மத லீலையை வென்றாருண்டோஎம். கே. தியாகராஜ பாகவதர்சாருகேசிஆதி
3தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தாலென்னஎம். கே. தியாகராஜ பாகவதர்சிந்துபைரவிஆதி
4கதிரவன் உதயம் கண்டு கமலங்கள் முகம் மலரும்என். சி. வசந்தகோகிலம்பிலகரிஆதி
5கண்ணா வா மணிவண்ணா வாஎன். சி. வசந்தகோகிலம்சுத்ததன்யாசிஆதி
6எனது மனம் துள்ளி விளையாடுதேஎன். சி. வசந்தகோகிலம்இந்தி மெட்டு-
7எந்நாளும் இந்த இன்பம் குறையாதென்றுடி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர்பைரவிஆதி
8உலகில் எவரும் நிகரில்லையேஎம். கே. தியாகராஜ பாகவதர், டி. ஆர். ராஜகுமார்மாண்டுதிசுரம்
9போதும் வேண்டாம் விளையாட்டுடி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர்உசேனிஆதி
10மயில்களழகாய் பயிலும் நடமேடி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர்அம்சத்வனிஆதி
11உங்களை என் கண்ணாலே காண ஆசை கொண்டேனேடி. ஆர். ராஜகுமாரிஇந்தி மெட்டு-
12மாமுனி நாதர் கருணையினாலேஎம். கே. தியாகராஜ பாகவதர்இந்தி மெட்டு-
13என் உடல்தனிலொரு ஈ மொய்த்தபோது உங்கள்எம். கே. தியாகராஜ பாகவதர்யதுகுலகாம்போதி (விருத்தம்)-
14என் உயர் தவப்பயன் அம்மையே அப்பாஎம். கே. தியாகராஜ பாகவதர்அடானா-
15அன்னையும் தந்தையும் தானே பாரில்எம். கே. தியாகராஜ பாகவதர்--
16கவலையை தருவது - காரிகை செயலேஎன். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்--
17காதகி கிராதகி நான்டி. ஆர். ராஜகுமாரிமுகாரி-
18எனதுயிர் நாதன் இருதயமும் நொந்தேஎன். சி. வசந்தகோகிலம்மாயாமாளவகௌளைஆதி
19கிருஷ்ணா முகுந்தா முராரேஎம். கே. தியாகராஜ பாகவதர்நவரோசுஆதி
20நிஜமா இது நிஜமாஎம். கே. தியாகராஜ பாகவதர்பயாகடைரூபகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்